அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
இது காந்தியை பற்றியோ அல்லது நேதாஜியை பற்றியோ அல்ல. அவர்கள் வாங்கிகொடுத்த சுதந்திரம் இன்று எந்த நிலைமையில் இருக்கின்றன என்பதை உணர்ந்து அரசியல் சட்டை காலரையும் சமூக சட்டை காலரையும் பிடிக்கும் சில கேள்விகள் மட்டுமே.
ஆரம்பத்திலேயே ஒரு கேள்வி எதற்காக “Strictly 18+” என்ற வாக்கியத்தை கொண்டு வந்தனர். திரைப்படங்களிலும் சரி, சில புத்தகங்களில்லும் சரி இந்த வாக்கியம் அன்றாடம் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம். வயதுவந்தவர்கள் மட்டும் பார்த்தால் படித்தால் தவறாக எடுத்துகொள்ள மாட்டார்கள் என்றா? கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே அந்த வாக்கியம் தடம் தெரியாமல் சென்றுவிட்டது என்பதே உண்மை. உதாரணம் அன்றாடம் நாம் பார்க்கும் அல்லது பார்க்க தூண்டப்படும் தொலைக்காட்சி நாடகங்கள். குடும்பங்களை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சீரழிப்பது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக சிறுவர்களின் மனதிலும் பெரியவர்கள் மனதிலும் ஆழ பதித்துகொண்டுதான் இருக்கின்றன. அதை விட கொடுமை ஆபாசமும் சேர்த்தே காட்டப்படுகிறது. அதற்காக சில புத்தகங்களை படங்களை பார்ப்பது சரியா என கேட்காதீர்கள். நான் சொல்வது அன்றாடம் நம் வாழ்வில் தென்படும் சிலவற்றை.
சிறிது நாட்களுக்கு முன் ஓரின சேர்க்கை தவறு இல்லை என உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளிக்கிறது. அடுத்த சில நாட்களில் திருமணமாகி இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு இன்னொருவனை பிடித்திருந்தால் அவனோடு வாழலாம் என ஒரு சட்டம் வருகிறது. அடுத்த சில நாட்களில் எல்லா PORN WEBSITE-ம் தடை செய்யவேண்டும் என தீர்ப்பு வருகிறது. அடுத்த சில தினங்களில் 18+ மட்டும் பார்க்க கூடிய வீடியோக்கள் மற்றும் நாடகங்கள், திரைப்படங்கள் முன்பை விட அதிகமாக வர தொடங்குகிறது. அதற்காகவே வடிவமைக்க பட்டார் போல் உள்ளது இந்த Netflix. இந்த கன்றாவிக்கு எதற்காக அந்த PORN WEBSITES தடை பற்றிய தீர்ப்பு.?
திருட்டுத்தனமாக எடுக்கப்படும் வீடியோக்கள் வெளிவருவதுனாலா.? அப்படியென்றால் அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கபடுகிறது.? அந்த அளவிற்கு கலாசார சீரழிவு நடைபெறுகிறது என்று வைத்தால் அதற்க்கு ஏன் தடை விதிக்கவில்லை.?
இதை கண்டுகொள்ளாமல் விட்ட நாம் குற்றவாளிகள்தான். ஒரு போராட்டதில் நாம் இணைந்து போராடினோம் அதில் குளிர்பானங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்ற குரல் எழுகிறது.
உடனே நம் அனைவரையும் அடித்து விரட்டினார்கள். இன்று பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்ற தடை. ஆனால் குளிர்பானங்கள் பிளாஸ்டிக்கில் தான் விற்க்கபடுகிறது அதை ஏன் தடை செய்யவில்லை.? இதையும் நாம் எந்த கேள்வியும் கேட்கவில்லை.சரி இதெல்லாம் குற்றமா.? ஆம் நம் அத்தியாவசிய தேவைகளை மாற்றும் அனைத்து நடவடிக்கைகளும் குற்றமே.
சினிமாவில் புகைபிடித்தல் மது அருந்துதல் தவறு என ஒரு அறிக்கை காண்பிக்க படுகிறது. உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதையும், உயிரை கொல்லுவதையும் எதற்கு இன்னும் இங்கு விற்கப்படுகிறது.?
எத்தனையோ அற்புதமான தேவையற்ற சட்டங்களை கொண்டுவந்த நீதிமன்றம் இதற்க்கு ஒரு சட்டம் கொண்டுவரலாமே வெறும் மேம்போக்காக மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லி ஊருக்கு 2 மதுக்கடைகளை மட்டும் மூடுவது சரியாகுமா.?
10 வது படிக்கும் மாணவனுக்கு பீர் மற்றும் போதை வஸ்த்துக்களின் பெயர்கள் நன்றாக தெரிகிறதே. இதை தெரியபடுத்திய நாம் குற்றவாளிகளே. குடிப்பதை நிறுத்த முடியாதா.?
அதற்க்கு பல வழிகள் உள்ளனவே அது என்ன என்ன என்று தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தாலே போதும். நாம் இன்று குடிக்கும் பல குளிர்பானங்கள் வெளிநாடுகளில் தடைசெய்ய பட்டவையே. நாம் சாதரண தலைவலிக்காக போடும் மாத்திரைகள் உட்பட..
அன்று முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தபின் எப்படி இறந்தார் என்ற பரபரப்பு. அதை மக்கள் மனதில் இருந்து எடுக்க சசிகலா விஷயம் உடனே கொண்டுவரப்பட்டது. அந்த விஷயம் பெரிதாவதர்க்குள் நீட் தேர்வு மரணம் அது பெரிதாக யாரும் கண்டுகொள்ள கூடாது என உடனே Sterlite போராட்டம்… அதை மறக்கடிக்க Bigboss, உடனே ஒரு கற்பழிப்பு விஷயம் பூதாகரமாக வளர்கிறது.
மக்கள் கேள்விகேட்க கூடாது என உடனே ஜூலி பற்றிய பரபரப்பு செய்திகள். ஒரு கட்சியை வைரமுத்து அவமதித்தற்காக ஆண்டாளை தவறாக பேசிவிட்டார் என ஒரு பாடகியை தூண்டிவிட்டு அதை பெரிய செய்தியாக ஊடகம் காட்டதொடங்குகிறது.
அனிதா தற்கொலைக்கோ, முதலமைச்சர் மரணம் குறித்தோ இன்று எந்த செய்தியும் இல்லை. இதற்குள் எத்தனை விஷயங்கள் மூடி மறைக்க பட்டு இருக்கிறது தெரியுமா.!
இதில் பாதி அரசியல் நாடகம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வந்துவிடலாம் இன்று. என்ன கொடுமை சார் இது. இதை கண்டும் காணாமல் போகும் அல்லது இப்படிதான் வாழ வேண்டும் என நினைக்கும் நாம் அனைவரும் யார்?
அடுத்தவர் கைகளில் இருக்கும் ரத்த கரைகளை துடைப்பதை நிறுத்து. நம் கைகளில் ரத்த கரைகள் அண்டியுள்ளன அதை துடைதெரி. இன்னும் சுதந்திரம் வாங்கவில்லை என்பது இன்னுமா உங்களுக்கு உறைக்கவில்லை..?
ஒரு வேலை நீங்கள் சுதந்திரம் வாங்கி விட்டோம் என்று இருந்தால் அதை நாம் அரசியல்வாதிகள் என்ற அந்நியர்களிடம் இலவசமாக என்றோ கொடுத்துவிட்டோம் என்றே நம்பலாம். நல்ல நேர்மையான அரசியல்வாதிகளின் கைகளில் இன்னும் அந்த சுதந்திரம் சென்று சேரவில்லை என்பதையும் தீர்க்கமாக நம்பலாம்..
இது ஆரம்பமும் அல்ல, முடிவும் அல்ல.. ஏனெனில் இதை முடிவுக்கு கொண்டுவரப்போவது மூவர் மட்டுமே.. ஒருவர் இறந்து விட்டார்.. இன்னொருவர் பிறக்கவே இல்லை.. மற்றொருவர் இதோ நமக்கு எதுக்கு வம்பு? என்று அடுத்த வேலையை பார்க்க போகிறார்..