Wednesday, November 6, 2024
Homeஅரசியல்மத்திய அரசின் மூன்றாம் உலகப்போர் | சுக்குநூறாகும் இளைஞர் பட்டாளம்

மத்திய அரசின் மூன்றாம் உலகப்போர் | சுக்குநூறாகும் இளைஞர் பட்டாளம்

மூன்றாம் உலகப்போர் என்றைக்கோ தொடங்கிவிட்டது என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம் இது உண்மைதான்.

வேறு எந்த நாடுகளிலும் இல்லாத மிகப்பெரிய ஆயுதம் ஒன்று இந்தியாவில் உள்ளது. அது அணு ஆயுதம் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு. உண்மையில் அந்த ஆயுதம் தான் இளைஞர்கள். வேறெந்த நாடுகளிலும் இதுபோன்ற ஒரு இளைஞர் பட்டாளம் கிடையாது. ஏன் மெரினா போராட்டம் பற்றி உங்களுக்கே தெரியுமே சொல்லவா வேணும்.

இதை நன்றாக உணர்ந்த புரிந்து அந்நிய நாடுகள் இன்று வரை எதிர்த்து ஒரு அடி முன்வைக்க தயங்குகிறது. ஆனால் பரிதாபம் என்னவென்றால் இந்த இந்த விஷயம் நமக்கு தெரியவே இல்லை. ஆனா நம்ம எதிரி தெரிஞ்சு வச்சிருக்கான் நம்மள பத்தி நம்மள விட நல்லாவே..! அதனாலதான் அன்னிய நாடுகளின் கார்ப்பரேட் கம்பெனிகள் சத்தமில்லாமல்  ஆரம்பிச்சிட்டாங்க இந்த மூன்றாம் உலகப்போர.

இது இளைஞர்களுக்கு எதிரான போர் இந்தியாவுக்கு எதிரான போர். இன்னும் தெளிவா சொல்லனும்னா அவன் அவனோட இடத்தில உட்கார்ந்துகிட்டு நம்ம ஊரு விவசாய நிலங்களை அழிச்சி அதுல அவனோட கம்பெனியை கட்டி நம்மள கொத்தடிமையா விலைக்கு வாங்கறான். சரி நம்மூர்ல அவன் கம்பெனியை கட்டிட்டு அவன் அங்க என்ன பண்றான்? நல்ல கேள்வி.. அவன் அங்க விவசாயம் பாக்கிறான், ஒரு அடி விவசாய நிலங்கள பதம் பார்க்க கூட அந்நாட்டு அரசு  அனுமதிகொடுக்கறது இல்ல.. ஆனா இங்க மலைகளயும் கூட பெயர்த்து எடுத்து எட்டு வழி சாலை போடுவோம்.

சரி நான் இங்க சொல்ல வந்தது வேறு ஒரு விஷயத்தை பற்றி. அன்னிய நாடுகள் இந்தியாவுக்கு எதிராக திரும்புவது வழக்கம். ஆனால் சொந்த நாட்டின் அரசே இந்தியா மக்களுக்கு எதிராக திரும்புவதற்கு பெயர் என்ன? அதை நான் சொல்ல விரும்பவில்லை. அதைக் கூறினால் நான் ஆன்ட்டி இந்தியன் ஆகிவிடுவேன்.



மாணவர்கள் தான் வருங்கால இளைஞர்கள்.. வருங்கால இளைஞர்கள் தான் வருங்கால இந்தியா.! வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் தான் என்று கூறிச் சென்றார் அப்துல் கலாம். ஆனால் இன்றோ மாணவர்களுக்கு எதிராக வருங்கால இளைஞர்களுக்கு எதிராக கொண்டுவரப் போகிறார்கள் புதிய கல்விக் கொள்கை!

புதிய கல்விக் கொள்கை என்றால் எப்படி இருக்க வேண்டும்.! அவன் சிந்தனைகளை தூண்டக் கூடியதாகவும், அவனின் கற்பனைகளையும் தனித்திறமைகளை வளர்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வுகளைவிட செய்முறை தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இருக்க வேண்டும். மேலும் அறிவியல் மருத்துவம்  விவசாயம்  விஞ்ஞானம் மட்டுமல்லாமல்  அரசியல் போன்ற பல துறைகளில் அறிவுக் களஞ்சியமாக இருக்கவேண்டும். சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நன்மை தரக்கூடியதாகவும் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தும் நோக்கத்திலும் இருக்க வேண்டும். மேலும் சாதி அடிப்படை பார்க்காமல் பள்ளிகளிலும் சேர்க்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்.

ஆனால் இந்த கல்விக் கொள்கை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மாணவர்களுக்கு எதிராக இந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

என்ன எதிரானது என்று கேட்கிறீர்களா.?

பாடத்திட்டத்தில் முழுக்க முழுக்க பழைய வேத சித்தாந்தங்களை நுழைக்க போகிறார்களாம்.

வேதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்! ஆனால் இந்த பழைய வேதங்களையும் சாஸ்திரங்களையும் மட்டும் வைத்துக் கொண்டு நாளை சூரியனுக்கு செயற்கைக்கோள் அனுப்ப முடியாது.! ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவை எதிர்த்து ஒதுக்கி பேசும் அண்டை நாடுகளுக்கு எதிராக நின்று குரல் கொடுக்க முடியாது!

எங்களுக்கு தேவை எல்லாம் எல்லாம் விவேகமும் விஞ்ஞானமும் தான். ஆனால் எங்களுக்குத் தேவையானதை நீங்கள் தர மறுக்கிறார்கள் காரணம் தெளிவான சிந்தனைகளை நிறுத்தி வேதங்களையும் சாஸ்திரங்களையும் புகுத்தி விட்டால் மாணவர்களுக்கு அறிவு வளராது, மூட நம்பிக்கைகள் தான் நிறைய வளரும் என்று தெளிவாக தெரிந்து தான் இப்படி செய்கிறார்கள்

எதற்காக நாம் இந்த கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும்? இதன் பின்னனனிதான் என்ன?

மாநில அரசுகளிடம் இருக்கும் கல்வி உரிமை முழுவதும் அழிக்கப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும். கல்வித்துறையை புறக்கணித்து பிரதமர் தலைமையிலான “ராஷ்ட்ரிய ரக்க்ஷா” என்கிற மதவெறி இந்துவாதம் மற்றும் உயர்மட்ட கல்வி அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும்.

  • மூன்று வயதில் இருந்தே தொடக்கக் கல்வி அவசியமாகிறது. மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று மொழி கற்க வேண்டும்.
  • தமிழ் ஆங்கிலம் மட்டுமல்லாமல் கூடுதலாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கற்கவேண்டும்.
  • இந்தி போன்ற பிற மொழிகளை நாம் பயில நம் தாய்மொழியின் மதிப்பு குறைந்து அம்மொழி அழியத் தொடங்கும்.
  • மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு.
  • ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர் வீதம் 8 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.
  • அரசு பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். மாணவர்கள் அங்கு தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். கார்ப்பரேட் முதலாளிகள் இதனால் லாபம் அடைவார்கள்.
  • இதில் தோல்வியுறும் மாணவர்கள் அவர்களுடைய தாய் தந்தை என்ன வேலை செய்கிறார்களோ அதை அவர்களும் செய்ய வேண்டிய நிலைக்கு அவர்கள் ஆளாக வேண்டும்.
  • ஆசிரியர்களின் சம்பளம் அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படாமல் மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும் என்னதான் மனப்பாடம் செய்து நிறைய மதிப்பெண் எடுத்தாலும் அனுபவத்திற்கு எடுபடாது.
  • உயர் கல்வியில் தேர்ச்சி பெற்றாலும் கல்லூரி சேர்வதற்கு NTA தனி தேர்வு எழுத வேண்டும்.
  • மருத்துவம் பொறியியல் சட்டம் சார்ந்த எல்லா படிப்புகளுக்கும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றாலும் PEENGG, PLE, NEXT  போன்ற தேர்வுகள் எழுத வேண்டும்.
  • பிஏ பிஎஸ்சி போன்ற அனைத்திற்கும் தகுதி தேர்வு எழுத வேண்டும்

பழைய வேதங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வந்து நமக்கு கற்பிக்கப்படும் இந்த வேத கல்வியினால் நமக்கு அறிவு வளராது மூடநம்பிக்கைதான் வளரும். உதாரணமாக ஆகாய விமானம் கண்டு பிடிப்பதற்கு முன்பாக புஷ்பகவிமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

வேதியியல் பாட பகுதியில் இரு வேதிப்பொருட்கள் ஒன்றாகக் கலக்கும் பொழுது வேதிவினை ஏற்பட்டு புகை உண்டாகும். ஒருவேளை இதில் வேதங்களும் சாஸ்திரங்களும் வந்து விட்டால் அந்த புகையானது சிவபெருமானின் அருளோடு தான் வெளிவருகிறது என்றாகிவிடும்.

இந்தக் கல்வி நடைமுறைக்கு வந்துவிட்டால் ஏழை மாணவர்களின் படிப்பு முழுவதுமாக பாதிக்கப்படும். இது வருங்களால இந்தியாவின் சாபமாக மாறிவிடக்கூடாது.

இவற்றை எல்லாம் தாண்டி படிப்பு என்பது முடியாத காரியம். ஆனால் பிரதமர், முதலமைச்சர்கள், கல்வி அமைச்சர்  நினைத்தால் இதை எளிதில் மாற்றி விட முடியும்.

ஆனால் பள்ளிகளில் நாம் பதில் மட்டுமே சொல்லி வளர்ந்ததால் என்னவோ சமூகத்தில் நாம் கேள்விகளே கேட்பதே இல்லை! வருங்கால நம் பிள்ளைகளையும் நாம் நல் வழியில் வழிநடத்த கடமை பட்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது!

இதை வெறும் உரையாக பார்ப்பதும் வருங்களால சந்ததியின் ஓலமாக பார்ப்பதும் உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்களில் ஒருவனாக இந்த கட்டுரையை முடிக்கிறேன்..

 

மு.நவீன்,

இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு,

சிக்கநாயக்கர் கல்லூரி, ஈரோடு

 

இது போன்று உங்களின் கட்டுரைகளையும் வெளியிட tanglishnews@gmail.com என்ற 
மின்னஞ்சலுக்கு அனுப்பவும். மாணவர்களின் சிறந்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments