Tuesday, December 3, 2024
Homeபொழுதுபோக்குTop 90s kids Tamil TV shows | 90s கிட்ஸ் ஸ்பெஷல் டிவி சீரியல்

Top 90s kids Tamil TV shows | 90s கிட்ஸ் ஸ்பெஷல் டிவி சீரியல்

காலம் கடந்த நினைவுகள் | Lost Gold Memories

 

எத்தனை தலைமுறை வந்தாலும் 90ஸ் கிட்ஸ் தலைமுரைக்கு ஈடு இணையே கிடையாது அந்த அளவுக்கு ரொம்ப சந்தோஷமான காலகட்டத்தை அனுபவிச்சவங்க நம்ம 90ஸ் கிட்ஸ். இதுக்கு முன்னாடி நம்ம site ல 90ஸ் ல வந்த பிலிம்ஸ் பத்தி எழுதி இருக்கோம்.

இப்போ இதுல நம்ம பாக்க போறது. 90ஸ் கிட்சோடா பேவரைட் டிவி ஷோ’ஸ்   தான்.

SAKTHIMAN

1.சக்திமான்.

சக்திமான் இந்த சீரியல் பாக்காத தெரியாத 90ஸ் கிட்ஸ்ஏ இருக்கமுடியாது.அந்த அளவுக்கு எல்லாரோட மோசட் ஒன் பேவரைட். ஹிந்தி ல வந்து தமிழ்ல டப் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது இந்த சீரியல்.

கிட்டத்தட்ட 2 வருஷம் ஓடிட்டே இருந்த இந்த சீரியல்  பல பிரச்சனைகளை சந்திச்சி இருந்தது. ஆனா இப்போ வரைக்கும், வந்த சூப்பர் ஹீரோஸ் ல நமக்கு ரொம்ப பிடி

 

ச்சது இந்த சக்திமான் தான். கூடவே அந்த பார்லேஜி பிஸ்கேட் அண்ட் அதுகூட வந்த ஸ்டிக்கர்ஸ்..

2.மை டியர் பூதம்.

டெய்லி ஸ்கூல்  விட்டு வந்ததும் நம்ம கண்ணு முதல்ல suntv பக்கம்தான் போகும் காரணம் இந்த சீரியல் . மை  டியர் பூதம். இப்டி ஒரு பூதம் கிடைச்சா நம்மளும் ஜாலியா இருக்கலாம்

home  ஒர்க் கூட பண்ணவேணாம் எல்லாமே அதுவே பாத்துக்கும்னு மனசுக்குள்ள ஆசையோட இருந்தவங்கதான் நம்ம 90ஸ் கிட்ஸ். மூஸா அண்ட் கூட வர்ற 4 பசங்க ஒரு குட்டிப்பொண்ணு இதெல்லாம் எத்தனை வருஷம் ஆனாலும் மனச விட்டு மறையாது.

3.ஷாக்கலக்க பூம் பூம்.

இந்த சீரியல் லிஸ்ட் ல இல்லாம எப்படி.. அந்த பூதம் மாதிரி நம்ம ஆசைகளை கட்டுப்படுத்தி போட்டது இதுல வர பென்சில்.  நம்ம பசங்க இந்த சீரியல் intro song முதற்கொண்டு மனப்பாடம் வச்சி இருந்தத்த்து வேற கதை.

இப்போ வர சீரியல்ல 2 நிமிஷம் கூட 90ஸ் கிட்ஸால  பாக்கமுடியாது ஆனா அப்போ வந்த இந்த சீரியல் அவங்களோட பழைய நினைவுகளை நியாபகப்படுத்திக்கிட்டே இருக்கும்.

இதே மாதிரி ஜீ பூம் பா னு ஒரு சீரியல் ஓடிட்டு இருந்தது அது இதைவிட நல்ல இருக்கும் ஆனா ஷக்கலக்க பூம் பூம் தான் மக்கள் மத்தியில பெருசா பேச பட்டது.

4. மர்மதேசம்

காஞ்சனா, முனி இதுக்கெல்லாம் தாத்தா இந்த மர்மதேசம் அதுல வந்த எல்லா சீரிஸ் யும்  பாக்காத ஆளுங்களே இல்ல. அதுலயும் குறிப்பா விடாது கருப்பு இப்போ வரைக்கும் யூடுபல உலா வர்ற ஒரு பேசும்பொருள்.

கிட்டத்தட்ட லச்சக்கணக்குல யூடுபேக்ள இந்த சீரிஸ் பாத்து இருக்காங்க. அந்த கிழவி , குட்டிப்பையன், தங்க குடம், இதெல்லாம் எப்பவும் மறக்காது. யார்ரா அந்த கருப்புனு கடைசி வரைக்கும் நம்மள ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வச்சி கொண்டுபோனதுதா அதோட highlight .

முதல் தடவ வந்த heroine based சீரிஸ். 72 எபிசொட் இருக்கு மறக்காம பாருங்க. இல்லனா உங்கள விடாது கருப்பு.

5.ராஜ ராஜேஸ்வரி

மர்மதேசம் வந்தா இந்துவும் வந்தே ஆகணும். ஒவ்வொரு வாரமும் 1 மணி நேரம் நம்ம பக்க்க உட்காந்த அப்டி ஒரு பீலிங்கை  குடுத்துட்டு போகும் இந்த சீரியல்.

90ஸ் கிட்ஸ் ஏன் அடிக்கடி கோவில் கு போறாங்கன்னு காரணம் தேடினா இந்த சீரியல் ம் ஒரு காரணமா இருக்கும். 7 ஊருக்கு போய் மண் எடுக்கணும்  ஒவ்வொரு உருளையும் ஒவ்வொரு பிரச்னை. எப்படி எடுத்தாங்க அப்டிங்கறதுதா கதை. ஆனா வேற லெவெள்ள ல மியூசிக் இருக்கும்.

6.ஜென்மம் x

ஜென்மம் x  இந்த பேர் கேட்டாலே உடம்பு புல்லரிக்கும் நம்ம 90ஸ் ல பொறந்தவங்களுக்கு. அந்த அளவுக்கு பயத்தோட உச்சிக்கே கொண்டுபோனது இந்த சீரியல்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கதை. ஆனா பயத்தோடவே பாத்து நைட் எல்லாம் தூங்காம இருந்தத்த்து இப்போ நினைச்சாலும் அடேங்கப்பா. இதோட song  கேட்டாலே பயம் வந்துரும்.

7. மாவீரன் ஹாதீம்

ஹாத்திம், ஜாஸ்மின் இவங்க லவ் நியாபகம் இருக்கா. one of the best historical லவ் சீரியல். இதுல வர ஒவ்வொரு காட்சியும் அவ்ளோ அழகா எடுத்து இருப்பாங்க

. அனிமேஷன்’அதிகமா use பண்ணினது இந்த சீரியல்லதான். கிட்டத்தட்ட 1 வருசத்துக்கு மேல ஓடின சீரியல். இதுக்கு அப்புறம் அதே சேனல் ல வந்த கர்மா சீரியல் பாத்திலையே நின்னுடுச்சி . கர்மா வ பத்தி கடைசியா பாக்கலாம்.

 

சன் டிவி ல வந்த விக்ரமாதித்யன், அப்பு, மெட்டிஒலி இதெல்லாம் எப்பவுமே மறக்க முடியாது. விக்ரமாதித்தன் சீரியல் ல முன் ஜென்மம் அண்ட் கன்னித்தீவு கதை இதெல்லாம் வரப்போ அவ்ளோ சூப்பரா இருக்கும் .

2 எலி வரும் நண்டு சுண்டு, அண்ட் பொம்மி னு ஒரு குட்டிப்பொண்ணு, இதெல்லாம் 90ஸ் கிட்ஸோட மனசுல பதிஞ்ச விஷயங்கள்.

கர்மா சீரியல் அப்போ வந்த சூப்பர் ஹீரோ  சீரியல் நல்ல ஓடிட்டு இருந்த இந்த சீரியல் என்ன காரமோ தெரியல கொஞ்ச நாட்களையே  நிப்பாட்டிட்டாங்க. இதுக்கு அப்புறம் சுட்டி டிவி வந்துருச்சி.

jetex சேனல் காணாம போன தடவை. நம்ம பாத்தா பவர் ரேஞ்சர்ஸ் எல்லாம் ரிடையர் ஆனா டைம் ! நீங்க 90ஸ் கிட்ஸ்சா இருந்தப்போ எதெல்லாம் ரசிச்சி பாத்தீங்க அண்ட் உங்க fev சீரியல் எதுன்னு கீழ கமெண்ட் பண்ணுங்க.

 

Next

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments