Time Travel Full Explained இப்பொழுதெல்லாம் அதிகமாக நம்பப்படும் ஒரு விஷயம் Block Holes (கருந்துளை) அறிவியல் வளர்ச்சியில் அதை உண்மை என நிருபித்து விட்டனர்.(சிலர் அதுவும் பொய் என்கின்றனர். இதை பற்றி நம் தளத்தில் முன்பே பேசி இருக்கிறோம். ஆனால் நிரூபிக்க படாத உண்மை என்று நம்பப்படும் ஒன்று இணை பிரபஞ்சம்(parallel universe)
இந்த உலகத்தில் இன்னொரு உலகம் எப்படி? அது எங்கு உள்ளது? எப்படி செல்வது? Time Travel இந்த முறையில்தான் செயல்படுத்த முடியுமா? இப்படி பல கேள்விகள் உண்டு.
அவ்வபொழுது கப்பல்கள், விமானங்கள்,ஏன் சில இடங்களில் மனிதர்களே காணாமல் போய் உள்ளனர். அவர்கள் இன்னொரு உலகத்திற்கு போய்விட்டனரா என்றால் அது மிக பெரிய கேள்வி குறிதான்.
பெர்முடா முக்கோணம் போன்ற சில இடங்கள் இன்னொரு உலகத்திற்கான நுழைவாயில் என சொல்லபடுவதுண்டு. இந்த பால்வெளி அண்டத்தில் கோடிகணக்கான கோள்கள் உருவாகி உள்ளன. அதில் ஒவ்வொரு கோளுக்கு அருகிலும் அவற்றின் துணைகோள்கள் இருக்கின்றன.
அவைகள் ஒன்றோடன்று மோதும்போது ஒட்டிக்கொள்ளும் நிகழ்வு ஏற்படுகிறது. அதனால் bubble போன்ற நிகழ்வு ஏற்பட்டு பல பிரபஞ்சங்கள் உருவாகின்றன.
அவைகளின் நுழைவாயில்கள் நம் பிரபஞ்சங்களில் தானாக அமைக்கபடுகின்றன.! அந்த நிகழ்வு நம் பூமி யிலும் உள்ளது என அறிவியலாளர்கள் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். பூமியில் மட்டும் அல்ல. பூமி போன்ற பல கோள்களில் இது உள்ளது .
இணை பிரபஞ்சங்களுக்குள் சென்றால் அவை நம் காலத்தை copy அடித்ததுபோல் இருக்காது. அதில் காலம் மாறுபடும். அதை கண்டறிவதன் மூலம் காலபயணம் சாத்தியமாகிறது.
ஒரு தியரியில் 100 ஒளிவேகத்தில் சென்றால் கால நிலையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு அவை இன்னொரு பிரபஞ்சதிற்கு செல்லும் நுழைவாயிலை ஏற்படுத்தும். இதன் மூலம் காலத்தின் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றும் இன்னொரு தியரியில் அப்படி எல்லாம் முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவேளை 100 ஒளிவேகத்தில் சென்றால் மனிதன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. நம் உடல் சில குறிப்பிட்ட வேக விசையை மட்டுமே தாங்கும் திறனுடையவை. அதில் 1 ஒளிவேகம் பயணம் செய்தாலே உறுப்புகள் செயலிழக்க வாய்ப்புள்ளது.!
இதன் இன்னொரு பரிமாணமாக நுழைவாயில்கள் தானாகவே சில இடங்களில் உருவாகின்றது.
முன்பு சொன்ன பர்முடா முக்கோணம் இதில் ஒன்று(உண்மையில் இன்னும் அது நிரூபிக்க படவில்லை) தஞ்சாவூரில் கூட இப்படி ஒரு வாயில் உண்டு என்று ஒரு கூற்று உண்டு.! சில நேரங்களில் கடலுக்கு அடியிலும் வாயில்கள் ஏற்படுகின்றன.
பல காலாமாக காணாமல் போகும் நிகழ்வு பெர்முடா முக்கோணத்தில் ஏற்படுகின்றன அதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
சரி காலபயணம் சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியம்தான். அமெரிக்க வில் உள்ள ஒரு பல்கலை கழகத்தில் ஒரு பொருளை மறைய வைத்து இன்னொரு இடத்தில் தோன்றவைக்கும் முயற்சியை செய்துபார்த்து வெற்றிபெற்று உள்ளனர்
ஆனால் அவர்கள் அதற்காக பயன்படுத்திய பொருள் சேதமடைந்து உள்ளது.
இதன் அடுத்தகட்ட முயற்சியில் அந்த பல்கலைக்கழகம் தற்போது ஈடுபட்டு உள்ளது. டெலிபோர்ட் யின் இன்னொரு பரிமானம்தான் TIME Travel.
ஒருவேளை டெலிபோர்ட் வெற்றிபெற்றால் அடுத்த முயற்சியாக டைம் TRAVEL கண்டறிய நிறைய வாய்ப்புண்டு.
ஒரு பொருள் டெலிபோர்ட் ஆகி வேறு இடத்திற்கு செல்லும்போது. அதே போல் காலநிலையையும் கடக்கலாம் என்பது தற்போதைய கூற்று.
விண்வெளியில் பல இடங்களில் இந்த TIME TRAVEL நிகழ்வு நடைபெறுவதாக நாசா கூறியுள்ளது நினைவிருக்கலாம்.
அதன் காரணமாகத்தான் அவ்வபோது விமானங்கள் காணாமல் போய் 70 வருடம் கழித்தோ 100 வருடம் கழித்தோ திரும்பி வருகிறது. அல்லது அப்படி ஒரு நிகழ்வு ஏற்படுகிறது. காத்திருப்போம்.