பொன்னி : Ponni (இரணிய சேனை) | Tamil Book Explained | Tanglish News

ponni iraniya senai novel book பொன்னி சாதிக்க நினைக்கும் காரியம் உன்னதமானது. அது போலவே பொன்னியை எதிர்த்து நிற்கும் சக்திகளும் கனவுக்கு அப்பாற்பட்டவை.

ஒரு புறம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான எதற்கும் துணிந்த ஒரு ரகசியப் படை அவள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் மறித்து நிற்கிறது.

இன்னொரு புறம் உலகின் சக்தி வாய்ந்த உளவு அமைப்புகள் அவளை வேட்டையாட வட்டமிடுகின்றன.

இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் தங்கம் என்ற அதிசய உலோகம் இன்னுமொரு ரத்த வரலாற்றை எழுதக் காத்திருக்கிறது.

இப்படி ஒரு நாவல் எழுதியதற்காகவே எழுத்தாளரை பாராட்டலாம். இதை திரைப்படமாக எடுக்கவும் யோசித்து வருகிறார்கள்.

சோழர்கள் காலத்திலேயே தங்கம் கிடைக்கும் கோலார் பகுதியைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட இரணிய சேனை,

அந்தத் தேரையர் இன மக்களின் வாழ்க்கைமுறை, ஆங்கிலேயர்கள் வருகை, சுரங்க அமைப்புகள், அதிலுள்ள ஆபத்துகள், தங்க வேட்டைக்காரர்கள்,

இங்கிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்கம் என பல காலகட்டங்களில் இந்த நாவல் நகர்கிறது.

வெளிநாடுகளில் ஒரே நேரத்தில் கருவூலத்தில் இருந்து  தங்கக் கட்டிகள் திருடப்பட்டது, அதைத் திருடியவர்களை சிஐஏ துரத்துவது,

அதன் பின்னணியில் தேரையர் வம்சாவழியில் வந்த பலர் சமகாலத்தில் இருப்பது போன்ற வித்தியாசமான பல தனித்தனி நிகழ்வுகளை ஒவ்வொன்றாக முடிச்சுப் போட்டு படிப்பவர்களால் யோசிக்க  முடியாத,

யோசிப்பதற்கு  நேரமே தராத சுவாரசியத்தில் நாவல் நகர்கிறது.

மிக தெளிவாகவும் நேர்த்தியாகவும் அதே நேரத்தில் திர்ல்லர் பாணியிலும் மிக விறுவிறுப்பாகவும் நாவல் நகர்கிறது.

நாவலை படித்து முடித்த பின் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு நிச்சயம் எழும். இதன் எழுத்தாளர் ஷான் எழுதிய வெட்டட்டம் நாவல் மிக பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ponni iraniya senai novel book பெண்கள் நிச்சயம் படிக்கப்படவேண்டிய ஒன்று . இணையதளத்தில் கிடைகிறது

Next

Leave a Comment Cancel Reply