Tamil Love Story காலம் மாறும் நிலையில் மாறாத ஒன்றுதான் காதல்….அவனது காதலுக்கு சொந்தக்காரி அவள் மட்டும்தான். 17 வருடம் கடந்து இருக்கும் அவளை முதன் முதலாக பார்த்து.
அவள் வீட்டு வாசலில் அவன் விளையாடி கொண்டு இருந்தபோது அவள் அவனை கடந்து சென்றாள். அன்று அவர்களுக்கு தெரியாது…அவர்களால் அவர்கள் வாழ்க்கை மாறும் என்று.
பின் என்ன அடிக்கடி சந்தித்தார்கள் அந்த மழலை பருவத்தில்…விளையாடினார்கள்…பேசி மகிழ்ந்தார்கள்.
வெண்மைக்கும் மாநிறத்திர்க்கும் நடுவில் ஒரு வண்ணம் அவள், குழந்தைக்கும் பெண்மைக்கும் நடுவில் ஒரு பூ அவள். அவன் அவளை நேசிக்கவில்லை அன்பை வைத்தான்.
அவள் அவனைவிட்டு பிரியும்வரை. ஆம் ஒரு தருணத்தில் அவள் அந்த ஊரைவிட்டே சென்றுவிட்டாள்.
காலம்கடந்தது தன்னுடன் விளையாடிய ஒரு உயிரை காணவில்லை..அவன் அவளையே நினைத்திருந்தான்..வருடத்திற்கு 1 முறை 2 முறை மட்டும் அவளை சந்தித்தான். மகிழ்ந்தான். தன்னை மறந்து வாழ்ந்தவன் அவன்.
ஒரு தருணம் வந்தது. அவள் பெண்மை அடைந்தாள் வயதிற்கு வந்ததாக அவனுக்கு தெரிந்தது.அந்த பருவத்தில் அவன் முகத்தில் அது சந்தோசமாக இல்லை.
சுற்றம் அவளை இனி பழையபடி என்னுடன் பேச விடாது..விளையாட விடாது என்று எண்ணினான்.
அவளை பார்க்க தினம் தினம் மனம் துடித்தது. அந்த துடிப்பு அவனுக்குள் அந்த காதலை கொண்டு வந்தது.
அவன் அவளை சந்திக்க நினைத்தான்.காதலை சொல்ல நினைத்தான். ஆனால் அவளை பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு பயம் மட்டுமே.எப்படி இதனை ஏற்றுகொள்வாள் என்று.
அதற்கும் காலம் வந்தது.சொன்னான் அவள் ஏற்க வில்லை. அன்றிலிருந்து 7 வருடங்களுக்கு அவளுக்காக காத்திருந்தான்.
ஒவ்வொரு முறையும் தன் காதலை சொன்னான் பார்க்கும்போதெல்லாம். தன்னை அவள் கண்முன்னே நிறுத்தி கொண்டான்.
அவள் பள்ளி பருவம் முடிந்த வருடம்.அவன் கல்லூரி பருவம் முடிந்த வருடம். அவன் வாழ்வில் மறக்க முடியாத நாள் வந்தது. அவள் தன் காதலை ஒரு முத்தத்தில் அவனுக்கு தெரிவித்துவிட்டாள்.
7 வருடம் காத்திருந்த காதல் அவன் அருகே நின்றது. உலகையே சாதித்த சந்தோசம் அவனுக்கு. அவன் வாழ்வில் அது திருப்புமுனையாக இருந்தது. அவன் புதிதாக பிறந்தான்.
பட்டாம்பூச்சிக்கள் இல்லை.பின்னணி இசை இல்லை ஆனால் இவை யாவும் அவன் மனதில் அரங்கேறி இருக்கும்.
அன்றிலிருந்து அவன் அவளுக்காக வாழ்ந்தான். சந்தோஷம்,சோகம் யாவையும் அவளிடம் பரிமாறிக்கொண்டான். இது காதல். இதுவே காதல்.
ஒவ்வொரு நிகழ்வுக்கும் அவள் முத்தம் பரிசளித்தாள். அவன் அன்பை பரிசளித்தாள் முத்தத்துடன் சேர்த்து. அவன் அவளது வீட்டிற்கும் சென்றான்.தனிமையில் இவர்கள் தவறு செய்யவில்லை.
சின்ன தழுவல்.சின்ன முத்தம்,கொஞ்சம் சொற்கள், நிறைய காதல். அழகின் உச்சபச்ச கால கட்டம் அது. வீட்டிற்கே தெரியாமல் அவன் அவளை பார்க்க இரவுமுழுக்க பயணம் செய்து வருவான்.
அவள் வீட்டில் அன்று முழுக்க அவன் நாள் போகும். போனது. அவள் அவனுக்கு உணவை ஊட்டிவிடுவாள்,
தன் கையால் செல்லமாக அவனை அடிப்பாள். தன மடியில் படுக்கவைத்து கொள்வாள்.
எங்கிருந்து வந்தது அந்த அன்பு,அந்த காதல்…! மழலை பருவத்தில் தொடங்கியது என அவன் நம்பினான். அதற்க்கு பின் இருவருக்கும் அவ்வபோது சண்டைகள்…! பேசி தீர்த்துக்கொள்ளவில்லை. சண்டை வளர்ந்தது…!
தேவை இல்லாத பேச்சுக்கள் நிறைந்தது. அவள் மீதும் தவறு. அவன் மீதும் தவறு. வேலையும் வறுமையும் அவனை ஆட்டிபடைத்த காலகட்டம். அவளின் சின்ன பொய் கூட அவனுக்கு கோபத்தை கொடுத்தது.
அவளை திட்டினான். அவளது கல்லூரி நண்பர்களை அவன் நேசிக்கவில்லை. வெறுத்தான். அவளது தோழிகள் சொல்வதை இரண்டுமனதாக நம்பினான். அவள் தவறு செய்கிறாளா..? அவன் தவறு செய்கிறானா…?
இருவருக்கும் தெரியவில்லை. காதல் குறைய ஆரம்பித்த நேரம். அவளுக்கு அவனை அவ்வளவாக பிடிக்கவில்லை..
அவனுக்கு அவளை பிடிக்காமல் இல்லை. எங்கே அவள் விட்டு சென்றுவிடுவாலோ என அவனுக்கு ஒரு பயம். நடப்பவை யாவும் அந்த வயதில் அவனுக்கு பயத்தையே கொடுத்தது.
அவளை விட்டுவிட கூடாது என்று நினைத்தான். ஒரு கட்டத்தில் அவள் காதலை முடித்துகொண்டாள். காலம் வலியதாயிற்றே. அவளை அவனிடம் இருந்து பிரித்து விட்டது.
அவன் பயந்தது நடந்துவிட்டது. அவன் அழுதான்,துடித்தான், அவளிடம் கெஞ்சினான். அவள் வெறுப்பை தவிர வேறு ஒன்றும் காட்டவில்லை. காலம் கடந்தது.
காதலை விட காலம் வலியது. மிக பெரிய வலியை அவனுக்கு கொடுத்தது. ஆம். தான் இன்னொருவனை காதலிப்பதாக அவள் அவனிடம் சொன்னான். அன்றே அவன் மனதளவில் இறந்துவிட்டான் .
அவளோடு வாழ்ந்த நாட்கள் அவன் கண்முன் வந்து வந்து சென்றது. அவளை அடிக்கடி பார்க்கமுடியவில்லை என்றாலும். வாரத்திற்கு மூன்று நாளாவது அவளிடம் அலைபேசியில் பேசிவிடுவான். ஆனால் 1 வருடத்திற்கும் மேல் அவன் அவளிடம் அதற்க்கு பின் பேசவில்லை.
ஆனால் அத்தனை நாட்களும் அவன் அவளை நினைக்காமல் இல்லை. அவன் அவளை நேசித்தான்.காதலித்தான். ஆனால் அவளோ,அவள் மனதிலோ இன்னொருவன்.
நினைவுகளை அவள் மறந்துவிட்டளா என அவனுக்குள் ஒரு கேள்வி. தவறு யார் செய்தது..? அவனா..? அவளா..? இருவரும்தான். அவன் திட்டினான் அவள் வெறுத்தாள்.
எதுவாயினும் இனி அவள் அவனுக்கு இல்லை. 17 வருட அன்பு இன்று பொய்யாகி போனது. கடந்த நாட்கள் அவனுக்குள் சுவடாகி போனது. மறக்க நினைத்தும் முடியவில்லை. இது காதலா..? அதற்கும் மேலா..?
எதுவாயினும்,அவன் புலம்பினாலும்,அழுதாலும்,துன்பத்தில் ஆதரவை தேடினாலும்,அவள் குரலையாவது கேட்போம் என அவன் நினைத்தாலும் இனி அவள் அவனுக்கு இல்லை.
அவன் மட்டும் அவளுக்காக அந்த மழலை காதலுடன் காத்திருகின்றான். அவள் இல்லையென்றாலும் அவன் உயிர் அவளுக்காக காத்திருக்கும். காதல் கொஞ்சம் கொஞ்சமாக
அழிந்து வரும் இவ்வுலகில் இதுபோன்ற சில காதல் கதைகள் காலங்கள் தாண்டியும் வாழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் காதல் என்ற வார்த்தை சந்கேதேகமாக மாறிவிட்ட இவ்வுலகில் எத்தனைநாள் உண்மையான இந்த காதல் இருக்கும் என்பது சற்று சந்தேகம்தான். காதலும் கற்று மற..அது பொய்யாக இருக்கும் பட்சத்தில்!