கெடுவான் கேடு நினைப்பான்!

முன்பு ஒரு காலத்தில் சேந்தன்  என்ற வியாபாரி தொண்டைமண்டலத்தின் தெற்கே பகுதியில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். சேந்தனின் மனைவி உடல் நலக்குறைவு காரணமாக குழந்தைகள் சிறு பிராயத்திலேயே இறந்து விட்டாள், எனவே சேந்தனே மகன்களை முழு சிரத்தைக்  கொண்டு வளர்த்து வந்தான். நான்கு  மகன்களும் கல்வியிலும் மற்றும் விளையாட்டீழும் சிறந்து விளங்கினார்கள் . ஒரு நாள் சேந்தன் தன் பிள்ளைகளை அழைத்து தான் புனித யாத்திரை புறப்பட போவதாகவும் அதனால் அவர்களை அருகே இருக்கும் நகரத்திற்கு சென்று ஏதேனும் வேலை பார்க்கும் படி சொல்லிவிட்டு புறப்பட்டான்.

 

Keduvan kedu ninaipanஅந்த நால்வரும் தந்தையின் சொற்படியே தங்களின் வீடு மற்றும் பிற உடைமைகளை நன்கு பராமரிக்கும் படி அவர்களின் தாத்தா விடம் கூறிவிட்டு நகரத்தை நோக்கி புறப்பட்டார்கள். அந்த காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் ஒன்றும் பெரிதாக இல்லை. எனவே, அவர்கள் அடர்ந்த காட்டின் வழியாக நடந்து செல்லலானார்கள். அப்பொழுது அவர்கள் அங்கு கண்ட காட்சி அவர்களை திகைப்பு அடைய செய்தது. அடர்த்த காட்டின் உள்ளயே ஒரு தங்க மரம் நன்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்தருயிருந்தது அதை கண்டதும் சகோதரர்கள் அளவிலா களிப்பு அடைந்தனர். நால்வரும் எப்படியாவது தங்க மரம் முழுவதையும் அங்கிருந்து எடுத்து செல்ல திட்டம் தீட்டீனர், அதன்படி அவர்கள் நடக்கலானார்கள். முதலானவன் தன் கடைசி தம்பியிடம் வீட்டிற்குத் திரும்பி சென்று  கோடரியை கொண்டு வருமாறு கட்டளையிட்டான், அண்ணன் கூறியபடியே அவனும் வீட்டிற்கு போய்  கொண்டிருந்த பொது அவன் மனதில்  ஒரு கொடூர எண்ணம் தோன்றியது. அதாவது அவன் அந்த பொக்கிஷ மரம் முழுவதும் தனக்கு மட்டுமே என்ற எண்ணத்துடன் தன் சகோதரர்களை தீத்துக்கட்ட முடிவு செய்தான், அவன் மட்டுமின்றி சகோதரர்கள் ஒருவர்க்கொருவர் இது போன்ற எண்ணமே.

அதனால் கோடரி கொண்டு வர சென்றவன் திரும்பவே இல்லை, அவன் இருட்டும் வரை காத்திருந்து விட்டு எப்படியாவது தனது தமயன்களை  கதையை முடித்துவிட தீர்மானித்திருந்தான். சென்றவன் வெகு நேரம் திரும்பாததால் அடுத்த தம்பியை சென்று பார்க்குமாறு அனுப்பினான், அங்கே அவன் கண்ட காட்சி அவனை நடுநடுங்க செய்தது. அவன் தம்பி இறந்து கிடப்பபதை போல பாசாங்கு செய்து தரையில் படுத்துக்கிடந்தான், அருகே சென்றவுடன் படுத்துக்கிடந்தவன் கத்தியை மார்பில் குத்தி அண்ணனை கொன்றான் இது போலவே இரண்டாவது அண்ணனையும் கொன்றான் பிறகு ஒன்றும் அறியாதவன் போல கோடரியை எதுக்கு கொண்டு காட்டை நோக்கி புறப்பட்டான்.

அவன் அங்கு வருவதற்க்கு முன்னமே அவனது அண்ணன் சாப்பிட வைத்திருந்த உணவு பொட்டலத்தில் நஞ்சை கலந்து விட்டான் அந்த உணவை தம்பிகளை எப்படியாது சாப்பிட வைத்து விட்டால் முழு பங்கும் தனுக்கு மட்டுமே என்று பேராசை கொண்டு இருந்தான். சென்றவர்கள் யாரும் திரும்பாததால் அவன் மரத்தின் அடியில் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டுருந்தான் அச்சமயத்தில் அங்கு வந்த அவனது தம்பி கோடரியால் அண்ணனின் மார்பில் குத்தினான் இதை சிறிதும் எதிர்பார்க்காத அவனும் பரிதாபமாக இறந்தான். பிறகு  பேரவா உடன் தங்க மரத்தை வெட்ட ஆரம்பித்தான் வெகு சீக்கிரத்திலேயே மரத்தை வெட்டி சிறு சிறு கட்டுகளாக கட்டினான், இதனால் சோர்வு அடைந்தவன் விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட சிறிது  நேரத்திலேயே பரிதாபமாக  அவனும் உயிர் இழந்தான்.

Leave a Comment