Wednesday, October 16, 2024
HomeAdultகாதல்இவ்ளோ நாள் இந்த ரொமான்டிக் மீனிங் தெரியாம போச்சே!

இவ்ளோ நாள் இந்த ரொமான்டிக் மீனிங் தெரியாம போச்சே!

இந்த “ரொமான்ஸ்” என்ற வார்த்தை பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானது. இந்த வார்த்தையின் முழு அர்த்தத்தை மொத்தமாக அன்றைக்கே சங்க இலக்கியத்துல சொல்லிட்டாங்க.! அநேகமாக நாம எல்லாருமே படிச்சிருப்போம்!

Romantic Meaning

கணவனை  போருக்கு அனுப்பிட்டு, ‘அவன் எப்போடா வீட்டுக்கு வருவானு வழி மேல விழி வச்சி வாசலயே ஏக்கத்தோட பார்த்து காத்திருக்கும் மனைவியின் காதல வெளிபடுத்தும் வகைல அன்றைக்கு  அதிக பாடல்கள் அமைஞ்சிருக்கும்’ அத அழகா இலக்கியத்துல “நெடுநல்வாடை”னு சொல்லிருப்பாங்க! என்ன இப்போ படிச்ச ஞபாகம் வருதா?

எது எப்டியோ இதுக்கான மீனிங் செம்ம இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும்! இத தெரிஞ்சிகிட்டு உங்க பார்ட்னர இம்ப்ரஸ் பண்ணுங்க!

Nedu-Nalvadai

போருக்கு போயிருக்கும் ஹீரோ, மழைக்காலத்துல வரணு சொல்லிட்டு போயிருப்பான்! அந்த மழைக்காலம் சீக்ரமே வரபோகுதுன்னு முன்னாடியே அவனுக்கு சிக்னல் கொடுத்து வீட்டுக்கு பேக்-அப் பண்றது அந்த குளிரோடுது சேர்த்து வீசும் வாடை காற்றுதான்! ஆக, இது அவனுக்கு “நல்வாடை!”

ஆனா நம்ம ஹீரோயின்கு.? ஹீரோ இல்லாத அந்த குளிர் நேரத்துல, அவனோட ‘பிரிவை’ அதிகம் உணர்த்தி  இம்சை கொடுக்கறதும் அதே வாடை காற்று தானே! ஆக, அது அவளுக்கு நெடும் சோகத்தை தரும் ‘நெடும்’ வாடை!  இதுதான் “நெடு-நல்வாடை“யின் ரொமான்டிக் அர்த்தம்!

அன்றைக்கு போருக்கு போற அந்த ஹீரோக்கு பதிலா நம்ம ஹீரோ கல்யாணம் ஆனா 10’வது நாள் ஐடி கம்பெனிக்கு பறந்துடுவாரு!

lonely-women

அப்றம் என்ன, நம்ம  ஹீரோயின் வீக்கெண்ட் ஆனா அப்பார்ட்மெண்ட் வீட்டுல காலிங்பெல்ல வெறித்து பாத்துகிட்டே காத்திருப்பா! ஈவ்னிங் ஆறு மணிக்கு மேல போன்ல எந்த கால் வந்தாலும் ஓடி போய் அட்டென்ட் பன்றவளுக்கு ஏமாற்றம்தான்.

ஒரு வழியா நம்ம ஹீரோவோட கால் வந்த உடனேயே, அவர்கிட்ட பேச போறோம்னு ஒரு எக்ஸைட்’ஓடவே போன் காதுக்கு போகும் !

உடனே “உங்க தலையணை ரொம்ப மோசம் போங்க.!”  என்று ஆரம்பமாகும் நாம் இனிமேல் கேட்ககூடாத அந்த இனிமையான உரையாடல்!

Romantic-Pair

மறுநாள் காலைல ஏழு மணி வரைக்கும்  படுக்கைல கண்கள மூடியபடி., ஷவரில் நனைந்தபடி.. கிச்சனில் மிக்ஸிய சுழல விட்டபடி., இப்படி கொஞ்சம் கொஞ்சமா நினைத்து சிலாகிக்க, மனசுக்குள்ள அப்டியே ரீப்ளே போட்டு சிலிரிக்க.. இப்டியாக இந்த் “ஸ்வீட் நத்திங்க்ஸ்” மட்டுமே நம்ம ஹீரோயின்கு போதும்!

நம்ம ஹீரோக்கும் கூட அப்படித்தான்! சென்னை பீச்சில காலரா நடந்து ஓகும் போதும்,ஆபிஸ் முடிஞ்சி திரும்ப வர அந்த ஜன்னலோர ரயில் பயணத்துலயும், அப்பார்ட்மென்ட் வீட்டு பால்கனியில நின்னு அந்த நிலாவ பார்க்கும் போதும், கூடவே வந்து கை கோர்துக்குவா அவளோட கற்பனை நாயகி!

எது எப்படியோ! காலங்கள் நிறையவே மாறி போனாலும் காதலுக்கான அர்த்தம் என்னவோ ஒன்னுதான் இல்லையா?

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments