கடந்த சில நாட்களாக உலகம் முழுக்க ஒரு பெயர் ஒரு வைரஸ் ஆட்சி செய்துகொண்டு இருக்கிறது. கொரோனா. பல வதந்திகள் பல நிகழ்வுகள்
ஆனால் பல மறைந்துபோன பாரம்பரியமான விஷயங்கள் நம்மை மீண்டும் வந்தடைந்திருக்கிறது என்பதே உண்மை.
முதல் உயிரான அமீபா தோன்றிய காலகட்டத்தில் காடும் காடு சார்ந்த இடங்கள்தான் அதிகம்…! பல எண்ணற்ற உயிர்கள் தங்கள் வாழ்வியலை இயற்கையோடு வாழ தொடங்கின.
ஐந்தறிவு ஜீவன்கள் இயற்கையோடு ஒன்றி இருக்க. ஆறாம் அறிவை கொண்ட மனிதன் காட்டைவிட்டு வெளியே வர தொடங்கினான்.! அன்றுமுதலே நோயும் கூடவே வந்து விட்டது என்பது உபதகவல்.
வருங்காலத்தில் என்ன நடக்கும் என பல மேதவிகள், தீர்க்க தரிசிகள் எழுதி வைத்து உள்ளனர். அவை அவ்வபோது குறிப்பிட்டதுபோல நடந்துகொண்டும் உள்ளது.
அந்தவகையில் கலிகாலத்தில் இதெல்லாம் நடக்கும் என அன்றே எழுதி வைத்த குறிப்புகள் சிலது மட்டுமே உள்ளது.
தண்ணீர் பற்றாகுறைதான் கலிகாலத்தின் கடைசி எல்லை என பல தீர்க்க தரிசிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சில வதந்திகள் இதனோடவே பயணித்துக்கொண்டு வருகிறது.
- சீனாவில் 100 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நோய் தாக்கப்படும் என்றும் இது ஒரு சாபம் என்றும். இந்த நோய் உலகம் முழுக்க பரவி பாதி மக்கள் தொகையை அழிக்கும் என்றும். இப்படி 16 முறை நடைபெறும். ஆனால் 16 வது முறை வரும்போது மனித இனமே அழிந்திருக்கும்
- மூன்றாம் உலகபோர்க்கு இதுதான் ஆரம்பம் என்றும்.! மக்கள் இதன்மூலம் அழிக்கபடுவார்கள் என்றும்.
- ஏலியன்கள் பூமிக்கு வரும் அறிகுறிகள்தான் இது என்றும், இனி பூமி ஏலியன்கள் கட்டுபாட்டில்தான் இருக்கும் என்றும்.
இப்படி பல வதந்திகள் பரவிக்கொண்டு உள்ளன. எது உண்மை எது பொய் என்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை.
நாம் மறந்திவிட்ட பழைய விஷயங்கள் பொய் என நாம் நினைக்கும் நேரத்தில் மீதம் இருக்கும் பழைய விஷயங்கள்தான் நம்மை தற்போது காப்பாற்றிக்கொண்டு உள்ளது என்பதே உண்மை.
சாணி தெளிப்பது, துளசி செடி வைப்பது, நெற்றியில் விபூதி வைப்பது, காகத்திற்கு சாப்பாடு வைப்பது, இப்படி பல விஷயங்கள் அறிவியல் படி பார்த்தால் மனிதனை காக்கும் காப்பன்கள்.
ஏனோ தொழிற்நுட்ப வளர்ச்சியால் நாம் அதையெல்லாம் தேவையில்லாத விஷயங்கள் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம்.
மன்னர் ஆட்சி காலத்தில் ஏதேனும் நல்ல விஷயங்கள் நடந்துவிட்டால் அந்த நாட்டுக்கே கவலைகளை மறக்கடிக்க விருந்து வைப்பார்கள்…
கவலைகளை மறக்க மதுபானம் தேவையானவர்க்கு மட்டும் தயார் செய்வார்கள். அவை ஏதேனும் ஒருநாள் கணக்கில் பயன்படுத்துவார்கள்.
இன்று அதற்க்கு அடிமையாகிவிட்ட பல பேர் உண்டு அதில் முக்கால்வாசி பேர் இளைஞர்கள். இது அவர்கள் கவலை படுவதால் அல்ல.
இது குடித்தால்தான் சுற்றி இருப்பவர்கள் தன்னை மனிதன் என ஒத்துகொள்வார்கள் என்றும் நண்பர்கள் தன்னை பெரிய ஆளாக நினைப்பார்கள் என்னும் பிரம்மை.
இப்படி தேவையில்லாத சிலவற்றை எடுத்துகொண்டு தேவையான பல விஷயங்களை தூக்கி எறிந்துவிட்டோம்.
காட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு இருக்கிறோம். முற்றிலும் அழிந்தால் ஆக்ஸிஜன் இருக்காது என்பது மனிதனுக்கு தெரியும். ஆனாலும் எது அவன் கண்ணை மறைகிறது.
விலங்குகள் ரோட்டில் வந்தால் உடனே பிடித்து கூண்டில் அடைத்து வேடிக்கை பார்கிறானே. அதுவும் ஒரு உயிர்தான் என்று மனிதனுக்கு தெரிந்தும் தெரியாமல் இருக்கிறானே எது அவன் கண்ணை மறைகிறது.
நெற்றிபொட்டில் அடித்தாற்போல் காலம் பதில் சொல்லும் என்று விலங்குகள் நினைத்திருக்க கூடும். அதன் பயனே இப்போது மனிதன் கொத்துகொத்தாக பாதிக்க படுகிறான்.
இவ்வுலகம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல. அனைத்து உயிரேகளுக்கும்தான். இனியாவது கலாச்சாரதோடு வாழ்வோம்.