உலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day

இன்றைய சுற்றுச்சூழல்!

முதலில் சுற்றுச்சூழல்’னா என்ன? நம்மை சுற்றி இருக்ககூடிய சூழல்! அதுதான?

சரி எப்படி இருக்கு நம்மளோட சுற்றுசூழல்?

ஒரு காட்டுக்குள்ள அப்பாவும் மகனும் நடந்துபோய்ட்டு இருந்தாங்களாம் அங்க வழியில ஒரு யானை செத்து கிடந்துச்சாம். அத பார்த்த அந்த பையன்,

‘அச்சோ அப்பா அந்த யானை எப்படி இறந்துசி’ன்னு கேட்டானாம்..

‘யானையை கொன்னுடாங்கப்பானு’ அப்பா சொன்னாராம்!”

‘எதுக்கு யானையை கொன்னாங்கனு’ திரும்ப மகன் கேட்க..

“தந்தம் எடுக்கதான்னு” அப்பா சொன்னாராம்.!

‘எது தந்தமா? அத எடுத்து என்ன செய்வாங்கபா?’

உடனே அப்பா பெருமூச்சு விட்டு மகன்கிட்ட சொன்னாராம்.

“யானையை கொன்று, அதன் தந்தம் எடுத்து அதில் யானை பொம்மை செய்வார்கள்”

இதுதான் இன்னைக்கு இன்னைக்கு இருக்கற  நம்மளோட சுற்றுச்சூழலின் நிலை. இந்த உலகத்துல 130 வகையான உயிரினங்கள் இருக்காம். அதுல ஒரு உயிரினம்தான் மனிதன் ஆனா நம்ம வாழ்றதுக்காக எதையும் செய்ய துணிஞ்ட்சிடோம்.

ஒரு ஆறாம் வகுப்பு மாணவனிடம் பள்ளி ஆசிரியர் கேட்டாராம்

“முட்டையில் இருந்து என்ன வரும் ? என்று!

“ஆம்லெட்” னு அந்த மாணவன் சொல்லி இருக்கான்.

முட்டைக்குள் ஒரு உயிர் வளரும் என்பதை நாம் நம் பிள்ளைகளுக்கு உணர்த்தாமல் அதை வெறும் உணவு பொருளாக அறிமுகம் செய்கிறோம்.!

தமிழ்நாட்டுல மட்டும் 40,000 ஏரிகள் இருந்ததாக நம்மாழ்வார் சொல்லி இருக்காரு. ஆனா இன்னைக்கு பாதி ஏரிகள் இருந்ததற்கான தடமே தெரியல.! அழிஞ்சி போச்சு. 30 வருஷத்துக்கு முன்னாடி காசு கொடுத்து தண்ணிய வாங்கற நிலை வரும்னு யாரும் நினைச்சு கூட பாத்துருக்க மாட்டோம். அதுமாதிரி சுவாசிக்கும் காற்றும் கூட காசு குடுத்து வாங்கற நிலைமை ரொம்ப தூரத்துல இல்ல.! வரும் காலத்துல ஆக்சிஜன் சிலிண்டர தோல்ல மாட்டிகிட்டு சுத்திட்டு இருப்போம்னு சொன்னா இப்போ சிரிப்பா இருக்கும்.

பள்ளி குழந்தைகள நாங்களும்  Environment camp கூட்டிட்டு போறம்னு சொல்லி ஒரு 2 நாள் அங்க இருக்கற குப்பைகள சுத்தம் பண்ண சொல்லிட்டா மட்டும் நம்ம சுற்றுப்புறச்சூழல காப்பாத்த முடியாது.

World-Environment-Day

சுற்றுச்சூழலையும் அதோட முக்கியத்துவத்தையும் ஒரு ஆசிரியர் ஒரு மாணவனோட ஆள் மனதுல போய் உணர்த்தணும். இயற்கைய நேசிக்க கற்று குடுக்கணும், மரங்களின் தேவைய உணர்த்தணும், நீரின் இன்றியமையாமையை புரிய வைக்கணும்! பிற உயிர்களோட மதிப்பையும் அதன் சங்கிலித்தொடர் பிணைப்பையும் அவனோட ஆரம்ப பள்ளிகளிலேயே ஆழமாக விதைக்கணும்!!

மனிதன் இல்லாமல் பறவைகள் வாழும்! ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதனால வாழ முடியாதுன்னு சமிபத்துல வந்த 2.0 படம் நமக்கு உணர்திச்சி. இதும் ஒரு முயற்ச்சிதான்.

ஏன்னா இன்னிக்கு நம்ம அறிவியல்  ஆசிரியர் ரஞ்சிதா சொல்லி கேட்காத விஷயத்த கோடா ரஜினிகாந்த் சொன்னாகேட்டுகரான் நம்ம பையன்.!

காரணம் இன்னைக்கு ஊடகத்தின் வளர்ச்சி அந்த அளவுக்கு வந்துரிச்சி. ஆனா நாம பேச வந்த விஷயம் இது இல்லன்னு நினைக்கறேன். So நம்ம விஷ்யத்துக்கு வந்துடுவோம்.

பூமி மனிதனுக்கு சொந்தமில்லை, மனிதன்தான் பூமிக்கு சொந்தம்.! இயற்க்கை எல்லோருக்கும் பொதுவானது. சுற்றுசூழலை பாதுகாப்பதன் மூலம் நாம் நம்மை காத்து கொள்கிறோம். நம் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல நீர், நல்ல உணவு, சுத்தமான காற்று, ஆரோக்கியமான சுற்றுசூழலை தருவதே நிஜமான சொத்துக்கள்.

இந்த ஆரம்பத்தின் விதை திறம்பட விதைப்பதில் ஒரு பள்ளியின் பங்கு எந்த அளவுக்கு கடமைப்பட்டு இருக்கறது என்பதே நிதர்சனமான உண்மை. பள்ளிகள் மட்டுமல்லாமல் நாமும் நம் வீட்டு பிள்ளைகளுக்கு இதை உணர்த்த மறந்துவிட கூடாது!

இயற்கையோடு இணைந்திடுவோம்.. இயற்கையோடு இயற்கையாய் வாழ்வோம்.!

மேலும் இதுபோன்ற தகவலுக்கு : Click

Leave a Comment