School and Politics
கல்வியும் கல்வி சார்ந்த இடமும் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் 5 இடத்தில் தமிழ்நாடு நிச்சயம் இருக்கும்.
என்னடா இது புதுசா ஒரு கருத்துக்கணிப்புனு நினைக்கவேணாம். இப்படி ஒரு லிஸ்ட் இருக்கும். ஆனா இது போகப்போகுதுனு சொன்னா உங்க உணர்வு எப்படி இருக்கும்.
ஒரு 50 வருசத்துக்கு முன்னாடி கல்வி அப்டின்னா இது ஏதோ அறிவு சார்ந்த ஒரு விஷயம் படிச்சா நல்ல இருக்கலாம்னு சொன்னாங்க. அதே மாதிரி கல்வியோட தரமும் நல்ல இருந்தது.
மக்களுக்கு பிடிச்சி இருந்தது. இதுக்கு முக்கியகாரணம் எளிமையான முறையில அத மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்துதான்.
அப்போ பியூசி படிச்சா ஒருத்தன் வாத்தியார். இப்போ என்னதான் முக்கி முக்கி படிச்சாலும் மேற்கொண்டு பணம்னு ஒன்னு தேவைப்படுது. அதுக்கு பேர் லஞ்சம்.
5 லட்சம் கொடுத்தா ஒருத்தனுக்கு ஆசிரியர் வேலை. இது இன்னும் நடந்துகிட்டு இருக்கு. +2 க்கு மட்டுமே பப்ளிக் பரிட்சை இருந்த நாள் காணாம போய் இப்போ ஐந்தாம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு என்கிற நிலை வந்துவிட்டது.
அதை செயல்படுத்தி மாணவர்களை அறிவுசார்ந்த இடத்திற்கு நகர விடாமல் பயம் என்ற போர்வையோடு அவர்களை பள்ளி என்ற சிறைச்சாலையில் தள்ளிவிட்டார்கள்.
ஒரு மாணவனோட மனசு இப்படித்தான் யோசிக்கும். அவனுக்கு பள்ளிக்கூடம் ஒரு ஜெயில் அவ்ளோதான். நம்ம பிள்ளைக பாத்து எப்படியாவது கஷ்டப்பட்டு படி கஷ்டப்பட்டு படின்னு அவனுக்கு ஒரு பயத்த தூண்டிவிட்டா.அவனுக்கு அயோ படிப்பானலே கஷ்டம் போல இருக்கு. கஷ்டப்பட்டுதான் படிக்கனும்போல இருக்கு அப்டினு தோணும்.
அட 3ம் வகுப்பு படிக்கற மாணவனுக்கு எதுக்கு இப்போ பப்ளிக். அந்த வயசுல அவனுக்கு Abcd, திருக்குறள்ள விட்டா ஏதும் தெரியாது.
இப்படி ஒரு கட்டத்துல யாருக்குமே என்னன்னே தெரியாத NEET அப்படிங்கற தேர்வு. மன்னர் ஆட்சி காலத்துல ஆட்சியினால மக்கள் உயிர் ஒன்னு போய்ட்டா கூட தன் ஆட்சியை துறக்க மன்னர்கள் முன் வருவார்கள்.
இது எத்தனை பேருக்கு தெரியும். நீட் தேர்வுனால இங்க பல உயிர்கள் போயிருக்கு. இது முதலும் இல்ல.. இது கடைசியும் இல்ல..
இங்க இடத்தை பிடிச்சாச்சு இனிமே நிலாவுக்கும் போய் இடம் பிடிச்சிரலாம்னு சந்திராயன் 2 வை அனுப்பி இருக்காங்க. முதல்ல இங்க வளம் இருக்கானு செக் பண்ணுங்கயா, அப்புறம் அண்டவெளிக்கு போகலாம்.
இங்க தண்ணிக்கு திண்டாடிகிட்டு இருக்கிறப்போ பலகோடி செலவுல ஆராய்ச்சி. மாசம் மாசம் கட்டவுட்(சரி அது நமக்கு எதுக்கு) கல்வியை கல்வியாக இருக்காவிட்டால் நல்லது.
அதையும் கெடுத்து படிப்பு என்ற ஒன்றை வியாபாரமாக்கி வெளிநாட்டிற்கு விற்று விடாதீர்கள். பின் இங்கே ஒரு இளைஞன் கூட இருக்க மாட்டான் உங்கள் ஆட்சியை பார்க்க வெறும் கொள்ளிடம் சென்றுதான் நீங்கள் ஒட்டு கேட்க வேண்டும். (இது மக்களின் கருத்து)