Ghost Explain – மருத்துவ உலகில் இன்று வரை ஆவி, அமானுஷ்ய நிகழ்வுகள் பற்றி பல கருத்துகள் சொல்லப்படுவதுண்டு.
ஒருவர் எப்படி இருந்தார் என்றுகூட கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு சில மர்மமான மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இன்று அதுபோல நிகழ்ந்துகொண்டும் உள்ளன.
இதற்க்கு பல பேர் சொல்லும் காரணம் ஆவி, பேய், பிசாசு இவைகள்தான். மனிதன் தான் நம்பியவற்றை கேட்டவற்றை அல்லது கண்முன்னே பார்த்தவற்றை மட்டுமே நம்புகிறான்.
அமானுஷ்ய நிகழ்வுக்கும் அதுவே காரணம். ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டால் அந்த இடத்தில் பல நாட்களுக்கு ஒரு துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும் என சிலர் சொல்ல காலபோக்கில் இறந்தவர் அங்கேயே இருப்பார் என மாறி இன்று அந்த இடத்திற்கு போனால் நீயும் இறந்துவிடுவாய் என்று சொல்லும் அளவிற்கு நமது கற்பனை சக்தி மாறியுள்ளது.
ஆவியை நேரில் கண்ட பலர் அவை வெள்ளை உடையில் இருந்தது, ஒரு ஒளி போல இருந்தது என சொன்ன கருத்துக்கள் நாம் பலவற்றை கேட்டிருப்போம். ஆனால் ஆவிகளுக்கு உருவம் இல்லை என்பது நமக்கு தெரியும். இருந்தாலும் யாரோ திடீர் என்று நம்மை பயமுறுத்தி சென்றாலோ அல்லது ஒரு நொடியில் சற்று தொலைவில் பார்த்தவர் இல்லை என்றாலோ அது ஆவி என நாம் நம்ப தொடங்குகிறோம்.
நம் உடலை விட்டு பிரியும் ஆன்மா. இலக்கில்லாமல் சுற்றி திரியுமே தவிர அவை யார் கண்ணிற்கும் தெரியாது என்பதே அறிவியல் விளக்கம். ஆனால் ஆவியே இல்லை நம் மூளைதான் சில உருவங்களை நமக்கு கட்டுகிறது. என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
உதாரணம் தூங்கும்போது திடிரென கரண்ட் அடித்ததுபோல் உணர்ந்து எழுந்துவிடுவோம். இது மூளையில் ஏற்படும் அதீத பயம் காரணம்தான். அதிக பயம் இருக்கும் ஒருவனுக்கு யாரை பார்த்தாலும் ஒரு பதட்டம் இருக்கும்.
அது போலதான் மூளையும் சில உருவங்களை, நிகழ்வுகளை அவை முன்கூட்டியே சேமித்துவைத்து இருக்கும். அவை கனவுகளாக வெளிப்படும். அந்த மூளை அதித செயல்பாட்டால் Refresh ஆகும்போது அதாவது புத்துணர்ச்சி அடையும்போது நம் ஆழ்மனதில் இருக்கும் உருவத்தையோ அல்லது நிகழ்வையோ கண்முன் கொண்டுவரும்
அதன் விளைவாகவே திடிரென உருவம் தோன்றுதல், யாரோ follow செய்யும் சத்தம் நமக்கு எழுகிறது. நம் ஆன்மாவிற்கு நமது கடைசி நாள் தெரியும் அது மூளைக்கு என்றோ சிக்னல் அனுப்பிவிடும்
பின் அந்த மூளை அதை நமக்கு கனவாக காண்பிக்கும். ஆப்ரகாம் லிங்கன் சுட்டுகொள்ளபட்டதும் அப்படி ஒரு நிகழ்வே. சாவதற்கு முன் இரவில் தன்னை யாரோசுட்டுகொல்வது போல் கனவு கண்டார். அடுத்தநாளே அது நடந்தது. நாம் இவ்வாறுதான் சாகபோகிறோம் என்பது நமது முன் ஜென்ம கர்மாவை பொறுத்தது.(இது கொஞ்சம் ஆத்திகம்தான் இருந்தாலும் இதுவும் நிருபிக்கபட்டதே)
நம் முன் ஜென்மத்தில் இருக்கும் தொடர்பு இன்றும் நம்முடன் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். உதாரணம்: 1000 பேர் இருக்கும் ஒரு கடையில் திடிரென ஒருவரை நாம் எங்கோ பார்த்ததுபோல இருக்கும்.
அல்லது. ஒரே நாளில் சம்மந்தமில்லாத நபரை அடிக்கடி நாம் தற்செயலாக காண வேண்டி வரும். சிலரை முதல்முறை பார்த்தவுடன் நமக்கு பிடிக்காமல் போகும். இப்படி உடனே நம்முடன் ஈர்ப்பை தரும் சிலர் நம்முடன் ஜென்ம ஜென்மமாக பயணிக்கும் ஆட்கள்தான்.
சரி ஆவி பேய், இவை உண்டா என்றால் நிச்சயம் உண்டு. அதீத ஆற்றல் கொண்ட ஆன்மாக்கள் தாங்கள் விட்டுசென்ற கடமையை முடிக்காமல் ஒரு இடத்தை விட்டோ அல்லது ஒரு நபரை விட்டோ நகராது. பிடித்தவர்களை அல்லது எதிரிகளை ஆவிகள் பின்தொடரும். நம்மை அழைக்கும். நம்முடன் பேச துடிக்கும்.
ஆனால் ஆவியோடு யார் பேசுவார்கள். இது இதை நீங்கள் படிக்கும் வேளையில் உங்கள் அருகில் உங்களுக்கு பிடித்த ஒருவரோ அல்லது உங்களை பிடித்த ஒருவரோ ஆவியாக அமர்ந்திருக்கலாம். அப்படி இருப்பதை உணர்ந்தால் நம் தளத்திற்கு Subscribe செய்யவும். அப்படியே அருகில் இருக்கும் Facebook தளத்தில் ஒரு like போடவும். அது உங்களை ஏதும் செய்யாது.