ஹிட்லர், இடிமீன் வரிசையில் இன்று ஜொலித்துக்கொண்டு இருப்பவர் நரேந்திரமோடி அவர்கள். அப்படி என்னதான் பண்ணாரு அவரு என்று ஒரு குடிமகனை கேட்டால்கூட பெரிய லிஸ்ட் போட்டு தரும் அளவிற்கு அவர் செய்திருக்கிறார்.
ஆனால் அவர் செய்த ஒன்றுகூட மக்களுக்கு பிடித்ததாக எந்த தகவலும் இல்லை. எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் நான் வருவேன் என்று கிருஷ்ணர் சொல்வதுபோல் எப்பொழுதெல்லாம் மக்களின் அன்றாட தேவையில் மாற்றம் வருகிறதோ அதற்கு பின்னாடியெல்லாம் மோடி இருப்பார். விவசாயிகளின் நில அபகரிப்பில் இருந்து மின்சார கம்பம் வரை அவரின் ஊழல் புகழ்பெற்றதாக உள்ளது.
ஆரம்பத்தில் மக்களின் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி Highway கட்ட ஆரம்பித்த கட்டத்தில் பல விவசாயிகளுக்கு இலவச வீடுகள் தரப்படும் என்று அறிக்கை விட்டது மோடி அரசு.
கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் குளிர்பான பொருட்கள் விற்கப்படும் நாடு தமிழ்நாடு ஆனால் இவை அனைத்தும் வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும் அதன் முதல் கட்ட அனுமதி மோடி மூலமாகத்தான் வந்தது எனலாம். பால் விற்பனையில் தமிழ்நாடுக்கு இரண்டாவது இடம் ஆனால் ஜெர்சி பசுக்களின் பால் உற்பத்தி தமிழ்நாட்டில் குறைவு சத்தும் குறைவு அதை இங்கே அதிகமாக்கி ஊழல் செய்ய மோடி அரசு செய்த பிளான்தான் ஜல்லிக்கட்டு தடை.
அதை எப்படியோ கண்டுகொண்ட இளைஞர்களை ஓட ஓட விரட்டியது மோடி அரசு (முதலமைச்சர்க்கும் பங்கு இருக்குமோனு ஒரு சந்தேகம்).
அதன் பின் பல மோசமாக அறிக்கைகள். பணம் செல்லாது என்ற அறிக்கை. வாண்வெளி ஆராய்ச்சியில் இந்திய முதல் இடம் என்று சொன்னது. (சிலது நினைவிலையே இல்லை….ஒன்று இரண்டாக இருந்தால் பரவாயில்லை)
இன்னும் 5 வருடம் மோடி இருந்தால் போதும் மொத்த தமிழகமும் ஏழை நாடாக ஆகிவிடும் என்பது மட்டும் உறுதி. எல்லா திரையரங்குகளிலும் இந்தி விளம்பரம்தான் அதிகம் அதில் பாதி மோடி பற்றிய தற்பெருமை. (நம்ம ஊருல எவனுக்குடா ஹிந்தி தெரியும்னு அத செய்றிங்க) இந்தி திணிப்பு தமிழ்நாட்டில் சரியா என்றால் மிக பெரிய தவறுதான்.
தமிழ்நாட்டில் எந்த குறையும் இல்லை எனக்கு தெரியும் என மோடி அறிக்கை விட்டாரே அவர் தமிழ் நாட்டுக்கு வந்து எந்த மக்களிடம் பேசினார். கூட்டத்திற்கு ஹிந்தி கற்றுகொடுத்துவிட்டு பறந்து சென்றுவிடுவார். மீண்டும் ஆட்சி தொடர்ந்தால் இன்னும் எத்தனை அறிக்கைகள் காத்திருகிறதோ? (கடவுளே காப்பத்துப்பா).