cinema-untold-story-part-1

சினிமா! | A Untold Story of Tamil Cinema

ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கும். சினிமா கண்டுபிடிக்கப்பட்ட 1913-ம் வருடம் முதல் இன்றுவரை பல மாற்றங்களை கண்ட சினிமா கற்பனைகூட செய்துபார்க்க முடியாத மாற்றங்களை கொண்டுவந்து இருக்கின்றன.

பாகவதர் காலம் தொட்டு இந்த தமிழ் சினிமாவின் வளர்ச்சி ஆரம்பிக்கிறது. சார்லி சாப்ளின் செய்த அதே செயலை தமிழ் சினிமா செய்ய ஆரம்பித்த பேசும்படம் முடிவுக்கு வந்து புராண படங்கள் மூலம் வசனங்களை குறைத்து பாடல்கள் அதிகமாக கொண்டுவரப்ப்பட்டது. ( ஹீரோயின் கடத்தப்பட்டால் எங்கோ ஒரு காட்டுக்குள் ஹீரோ பாடுவார் அது வில்லன் காதில் கூட கேட்காமல் ஹீரோயின் காதுக்கு கேட்கும்) இது போன்ற அபத்தங்கள் அன்று மக்களால் ரசிக்கபட்டவையாக இருந்தன.

  • தமிழின் முதல் பேசும் படம் “கீசகவதம்”
  • தமிழின் கடைசி பேசும்படம் “பேசும்படம்”

அப்படியென்றால் மெர்குரி படம் பேசும்படம் இல்லையா என்றால் அது பேசும் படம் அல்ல என்பது என் கருத்து (அங்கங்க சில பேர் பேசறது கேட்கும்)

சரி சற்று பின்னோக்கி செல்வோம். பாடல்களால் மக்களை கவர்ந்த சினிமா வசனங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியது.

அங்குதான் மிக பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தது. பல நடிகர்கள், வசனகர்த்தாக்கள் சினிமாவில் நுழைந்தனர். ஈஸ்ட்மேன் கலர் படம். கேவா கலர்படம். கொரியன் கலர்படம் என மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தது.

முதலில் புத்தகமாக சக்கைபோடுபோட்ட அலிபாபாவும் 40 திருடர்களும் பின் படமாக வெளியானது. பின்  அன்றுவரை யாரும் செய்யாத செயலை நிகழ்த்தி பிரம்மாண்ட செலவில் வெளிவருகிறது சந்திரலேகா என்னும் படம் முதல்முறையாக 1000 துணை நடிகர்களை ஒரே Frame-ல் கொண்டுவந்த படம்.

இன்று இந்த படத்தின் BUDGET கணக்கு போட்டால் 200 கோடி(இதில்தான் MGR அவர்கள் அறிமுகம்) அதன் பின் ஸ்ரீதர் என்ற இயக்குனர் தன்னால் முடிந்த மாற்றங்களை கொண்டுவந்தார்.

இவர் எடுத்த நெஞ்சம் மறப்பதில்லை (மறுபிறவி கதை)இன்று பார்த்தாலும் சற்று பயமாகத்தான் இருக்கும். நெஞ்சில் ஒரு ஆலயம் (ஒரே அறையில் எடுக்கப்பட்ட படம்). காதலிக்க நேரமில்லை (தமிழின் முதல் முழுநீள நகைச்சுவை படம்). சிவந்தமண் (முதல்முறையாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படம்).

இதுபோன்ற பலமாற்றங்கள் நிகழ்ந்தன. சாய்ந்துபோய் இருந்த தமிழ் சினிமாவை இப்படங்கள் உலகெங்கும் அறிய வைத்தது. பின் மக்கள் கமர்ஷியல் படங்கள் பக்கம் திரும்பினர். உடனே ரீமேக் படங்கள் வர தொடங்கியது.

  • தமிழின் முதல் ரீமேக் படம் “தியாக பூமி”

MGR மக்களுக்கு பாடம் புகட்டி கொண்டு இருந்த நேரத்தில் சிவாஜி அழ வைத்துகொண்டு இருந்தார். இவர்களுக்கு நடுவில் ஜெயஷங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் போன்றோர் ரசிக்கவைத்துகொண்டு இருந்தனர்.

எல்லாம் கொஞ்சம் காலம்த்தான் என்பது போல் இவர்கள் காலம் முடிந்து 80 காலகட்டம் தமிழ் சினிமாவை வேறு ஒரு காலத்திற்கு எடுத்து சென்றது.

To be Continue @ Next Part

Leave a Comment Cancel Reply