அறை எண் 105 ல் ஒரு பெண்
2 ஸ்டேட்டஸ் என்ற பிரபலமான புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் சேதன் பகதின் இந்நாவல் முற்றிலும் வேறுஒரு களத்தில் பயணிக்கக்கூடியது எனலாம்.
இது காதல் கதை அல்ல என புத்தகத்தில் சொல்லி இருந்தாலும். காதல் கதையாகத்தான் செல்கிறது. ஆனால் வெறும் காதல் கதையாக மட்டுமே அல்ல.
அவன் பெயர் கேசவ் படித்தபடிப்புக்கு வேலைகிடைக்காமல் ஒரு டியூஷன் சென்டர்ரில் பாடம் சொல்லிக்கொடுத்து வருகிறான். அவனுக்கு ஒரு நண்பன். எல்லாம் இருந்தும் ஒரு விரக்தியில்லையே இருக்கிறான். காரணம் அவனது காதல் தோல்வி. அவள் பெயர் ஸாரா லோன் ஒரு காஷ்மீரி பெண். கேசவ் சாரா இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்து காதலித்து பிரிந்துவிட்டனர்.
அவளுக்கு இப்பொழுது திருமணம். ரகு என்ற ஒருவனோடு. ஒரு நாள் ஸாரா கேசவை சந்திக்க அழைக்கிறாள். அவள் தங்கி இருக்கும் ரூம்க்கு வருகிறான். ஆனால் அங்கு அவள் இறந்து கிடக்கிறாள்.
இங்கிருந்து பயணிக்கிறது மொத்த கதையும்.
எவண்டா ஸாராவ கொலை பண்ணது என தேடி கண்டுபிடிப்பதே கதை.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஒரு படம் பார்த்த உணர்வு எழாமல் இல்லை. படிக்க படிக்க அடுத்து என்ன என்ற கேள்வியும். ஒவ்வொருவர் மீது சந்தேகமும் நிச்சயம் எழும்.
தான் ரசித்த பெண் உயிரற்று கடக்கும் அந்நேரம். இனி அவள் எழுந்து வரபோவதில்லை என்னும்போது அவன் என்ன ஓட்டம். அவளை வைத்த கண் வாங்காமால் கடைசியாக பார்க்கிறான்.
Happy Birthday ஸாரா என சொல்லி அவளது உயிரற்ற நெற்றியில் ஒரு முத்தமிட்டு செல்கிறான்.
அவை வார்த்தைகளாக அல்லாமல் நம் ஆழ்மனதை நிச்சயம் பதம் பார்க்கும் வரிகளாக இதில் அமைத்ததுதான் அந்த எழுத்தாளரின் சிறப்பு.
பல விருதுகளை இந்த புத்தகம் தமிழ் பதிப்பில் அமேசான் தலத்தில் உங்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது. யாம் பெற்ற இன்பம் வையகமும் பெறுக.