தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் – ஐந்து (நான்காக கீறியது, வெட்டக்கூடாது)
- எண்ணெய் – நான்கு தேகரண்டி
- வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
- உப்பு – தேவைகேற்ப
பொடி செய்ய வேண்டியன:
- கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்
- தனியா – நான்கு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – நான்கு
- சீரகம் – இரண்டு டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- புளி விழுது – இரண்டு டீஸ்பூன்
செய்முறை: கடாயை சூடு செய்து அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு, அதில் மஞ்சள் தூள், புளி விழுது சேர்த்து கிளறி ஆறவைத்து பொடி செய்து கொள்ளவும். கத்திரிக்காய் நடுவில் பொடி ஸ்டப் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, ஸ்டப் செய்த கத்தரிக்காய் சேர்த்து கிளறவும். பின் மீதியுள்ள பொடி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி எட்டு நிமிடம் சிம்மில் வைத்து கத்தரிக்காய் வெந்தவுடன் கிளறி இறக்கவும்.