Thursday, November 14, 2024
Homeமகளிர்Problem Of Periods |Periods'a? மூச்ச்ச்.. | என்ன கொடுமை சார் இது?

Problem Of Periods |Periods’a? மூச்ச்ச்.. | என்ன கொடுமை சார் இது?

Problem Of Periods பெண் உடலில் நடக்கும் இயல்பான உடலியல் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது இன்னமும் நம் சமூகத்தில் அருவருப்பானதாகவும் , அவமானமாகவும்  பார்க்கபடுகிறது.
பேசக்கூடாத விஷயமா மாதவிடாய்?
மாதவிடாய் என்பது வெளிப்படையான பேசக்கூடாத விஷயமல்ல. பெண்களின் உடலியல் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டிய  கடமை இந்த மனித சமூகத்துக்கு இருக்கவே செய்கிறது.
சமூகம் என்றால் அதில் ஆண்களும் அடக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
don't talk about periods ஆனால் ஒரு பெண், தான் பூப்பெய்தும்போதே அவளுக்கு கொடுக்கப்படும் முதல் அறிவுரை தன் அப்பாவிடம் கூட மாதவிடாய் பற்றி பேசக்கூடாது என்பதுதான். அந்த நாட்களில் ஒரு பெண் அசுத்தமாக இருக்கிறாள்,
அவள் உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் அசுத்தமானது, அதனால் அவள் கோயிலுக்குள் செல்லகூடாது. சமையலறைக்குள் செல்லகூடாது, ஊறுகாயைத் தொடக்கூடாது போன்றவற்றை இப்போதும் நாம் எதிர்கொள்ளவே செய்கிறோம்.
விபரம் தேடி அலையும் சிறுசுகள்
 
what is periods? அன்றிலிருந்து இன்றுவரை எதுவும் மாறவேயில்லை. குடும்பதோடு உட்கார்ந்து TV பார்கையில், இடையில் வரும் Napkin விளம்பரங்களை பார்த்து, எங்கே தனது மகன் இது என்ன என்று கேட்டு விடுவானோ என்று வேகமாக சேனலை மாற்றும் அம்மாக்களும் அப்பாக்களும்தான் இங்கு அதிகம்.
ஆனா நம்ம பையன் நம்லவிட விவரம். அத பத்தி அவங்க பிரண்ட்ஸ் கிட்டதான் கேட்பான். அந்த பையன் வேற விதத்துல சொல்ல நம்ம பையனும் நம்பிடுவான்.
ஆக இங்கருதுதான் ஆரம்பமாகுது பெண்கள் மீதான ஒரு தவறான  அல்லது தெளிவில்லாத ஒரு கண்ணோட்டம். இதுவே தொடரும் பட்சத்தில்தான் நாளை  தவறான பாதைக்கு அவனை இட்டுச்செல்லும்.
கற்பிதங்களை உடைக்க வேண்டும்
Come and see the blood on my skirt
மாதவிடாயை சுற்றிச் சுழலும் இந்த மாதிரியான கற்பிதங்களை உடைக்கும் விதமாகப் பல விழிப்புணர்வு முயற்சிகள் நம் நாட்டில் தொடங்கிருந்தாலும் இன்னமும் நாம் இந்த கோட்டிற்கு அப்பால்தான் உள்ளோம்.
சமீபத்தில் டெல்லி பழ்கலைக்கழக மாணவர்கள் “Come and see the blood on mu skrit”  என்ற பேரணியை நடத்தியிருந்தார்கள். அதில் ஏராளமான மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன் பெண்கள் மாதவிடயின் போது சந்திக்கும் பல பிரச்சனைகள் பற்றியும்,  சமூகம் மாதவிடாயை பார்க்கும் பார்வை பற்றியும், இந்தியாவில் மூன்றில் ஓரு பெண்ணுக்கு இருக்கும் PCOD (Polycystic Ovary Disorder) என்னும் மாதவிடாய் பிரச்சனை பற்றியும் பேசியிருக்கிறார்கள்.
இந்த முயற்சியை பல தரப்பினரக்களும் வரவேற்றுள்ளனர்.
சமீபத்தில் ஒரு எட்டாம் வகுப்பு மாணவி, மாதவிடாய் பற்றி ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத்தாண்டி, ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் இதைப்பற்றி பேசவே தயங்குகிறாள் என்றும்,
ஆணிடம் மாற்றத்தை எதிர் பார்க்கும் நாம் முதலில் மாற்றத்தை நமக்குள் இருந்து தொடங்க வேண்டும் என்று “தி இந்து” (நன்றி #தி இந்து) பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
மாற்றங்கள் வினா; மாற்றங்களே விடை! Problem Of Periods
மாதவிடாய் என்பது பேசக்கூடாத விஷயமல்ல என்பதை இந்த சமூகம் புரிந்து கொண்டால்தான் பெண்ணுடல் குறித்த ஆண்களின் தவறான பார்வை ஒராளவுக்காவது மாறும். அதேபோல் ஒரு பெண் என்பவள் யார் என்றும், அவள் இந்த சமூகத்தில் என்ன மாதிரியான மனவுளைச்சலுக்கு ஆளாகிறாள் என்றும், அவளின் உடலியல் சார்ந்த சவால்களை எப்படி  சந்திக்கிறாள் என்றும்  நாம் நம் பிள்ளைகளை சிறுவயது முதலே சொல்லி வளர்க்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments