History Of Cinema | திரைப்பட வரலாறு | Season 2 | History of film

History of cinema ஆரம்பத்தில் இருந்து வரலாம்.! அதாவது திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டம் என்று சொல்லலாம். அதாவது நகரும் படம் வந்த காலகட்டம். 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் லூமியேர் சகோதரர்களின் கண்டுபிடிப்பான நகரும் படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது.

1897 ஆம் ஆண்டு “எட்வர்டு” என்ற ஆங்கிலேயர், சென்னையில், “விக்டோரியா பப்ளிக் ஹால்” என்ற அரங்கில், முதல் நகரும் படக்காட்சியை திரையிட்டுக் காட்டினார்.

“சினிமாஸ்கோப்” என்று விளம்பரப்படுத்தப்பட்டு, திரையிடப்பட்ட அக்காட்சி, தமிழ்த்திரையில் பல மாறுதல்கள் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது.

(ஆனால் 50, 60 காலகட்டத்தில் தான் CinemaScope என்றாலே என்னவென்று மக்களுக்கு தெரிந்தது. அதை முழுவதுமாக பயன்படுத்திய படம் ராஜ ராஜ சோழன்)

இவ்வெளியீட்டைத் தொடர்ந்து, பல நகரும் படக் காட்சிகள், சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன.

1900 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின்  முதல் திரையரங்கு, ‘மவுண்ட் தெரு’வில் “வார்விக் மேஜர்” என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் ‘எலெக்ட்ரிக்’ திரையரங்காகும்.

மின் விளக்கு மூலம் ஒளிவீசும் வசதியுடன் இருந்ததால், இந்த அரங்கிற்கு அப்பெயர் வழங்கப்பட்டது.

1905 இல் திருச்சி புகையிரதத்தில் வேலை பார்த்து வந்த “சுவாமிக்கண்ணு வின்சென்ட்” என்பவர், ‘எடிசன் சினிமாட்டோகிராப்’ என்ற, திரைப்படம் காண்பிக்கப்படும் நிறுவனத்தை (Theatre)ஆரம்பித்தார்

தென்னிந்தியாவின் முதல் அரங்காக இத்திரையரங்கு விளங்கியது.”சுவாமிக்கண்ணு வின்சென்ட்”, பல ஊர்களுக்குச் சென்று “இயேசுவின் வாழ்க்கை” என்ற படத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த, “ரயிலின் வருகை’ (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினார்களாம்.  இதுபோன்ற  படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்.

இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள், பல ஆண்டுகளுக்குப் பின்னர், கோயம்புத்தூரில் “வெரைட்டி ஹால்” என்ற அரங்கை அமைத்து, “வள்ளி திருமணம்” போன்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத நேரத்தில், அவரே அதற்கான உபகரணங்களோடு, தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டிருக்கிறார். ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும், இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக, அப்போது வெளிநாட்டில் இருந்த, படம் தயாரிக்கும் கம்பெனியிடம், ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். சினிமா மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு, தமிழகம் முழுதும் டெண்ட் திரையரங்குகள் நிறைய உருவாக்கியிருக்கிறார்.

1914 ஆம் ஆண்டு சென்னையில் “வெங்கையா” என்பவரால் கட்டப்பட்ட “கெயிட்டி” அரங்கே, இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட, முதல் திரையரங்கு (இத்திரையரங்கு இன்றளவும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது).

முதல் தென்னிந்தியத் திரைப்படம்

இத்திரையரங்கை அடுத்து, சில நிரந்தரத் திரையரங்குகள் கட்டப்பட்டன. 1912 ஆம் ஆண்டிற்குப் பின், மும்பையில் தயாரான, “ஹரிச்சந்திரா” போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இத்திரைபடங்கள் பெற்ற வரவேற்புகளின் காரணத்தினால், மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் ஆர். நடராஜ முதலியார், கீழ்ப்பாக்கத்தில், “இந்தியா பிலிம் கம்பெனி” என்னும் நிறுவனத்தை நிறுவி, 1916 இல், “கீசக வதம்” என்ற சலனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.

1916 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மௌனப் படத் தயாரிப்பைத் தொடர்ந்து, மேலும் சில தயாரிப்பாளர்கள், படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் “ஏ.நாராயணன்”.

“ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, தென்னிந்தியாவின் திரைப்படத் தொழிலுக்கு, முக்கியமான பங்கு வகிப்பவராவார். சென்னையில், நூற்றுக்கும் மேற்பட்ட சலனப்படங்கள்(Feature Films) தயாரிக்கப்பட்டன.

 

இவை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விபரண அட்டைகளுடன் தென்னிந்தியாவின் பல நகரங்களிலும் திரையிடப்பட்டன. ஆனால், நாகர்கோயிலில் தயாரான “மார்த்தாண்டவர்மன்” என்ற ஒரு படம், இன்றுவரை பாதுகாத்து வைக்கப்பட்டு வருகிறது.)(history of cinema)

திரைப்படக் காட்சிகள் நிலை கொள்ள ஆரம்பித்ததைக் கண்ட பிரித்தானிய அரசு, இந்த மக்கள் தொடர்பு சாதனத்தைத் தன் கட்டுபாட்டுக்குள் வைக்கத் தீர்மானித்தது.

தொடர்ந்து இந்திய ஒளிப்பதிவு சட்டத்தின் மூலம், தணிக்கைத் துறையை 1918 ஆம் ஆண்டில் செயல்படுத்தியது. 1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான “தி மெட்ராஸ் பில்ம் லீக்” நிறுவப்பட்டது.

NEXT – Season  1

Leave a Comment Cancel Reply