Saturday, November 30, 2024
Homeசமையல்nonveg food recipe | தெறிக்க விடலாமா | நண்டு வறுவல் | மீன் பிரியாணி

nonveg food recipe | தெறிக்க விடலாமா | நண்டு வறுவல் | மீன் பிரியாணி

nonveg food recipe இன்னைக்கு இன்னொரு டிஷ் செஞ்சி சாப்டலாமா. என்ன சமைக்கலாம்.! ஆனா non veg தான். செமையான ஒரு டிஷ் இருக்கு. அது என்ன எப்படி செய்றது அப்டிங்கறத வாங்க பாக்கலாம்.!

நண்டு வறுவல்

தேவையான பொருட்கள்:

நண்டு – 6
பூண்டு – 2 (பெரிது)
மிளகு – 3 டீஸ்பூன்
கசகசா – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் – 1/2 மூடி
சாம்பார் வெங்காயம் – 5
பச்சை மிளகாய்/காய்ந்த மிளகாய் – 100 கிராம்
சோம்பு – 3 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 150 கிராம்

செய்முறை:

ஒரு வாணலியில் சிறிது அளவு எண்ணெய் ஊற்றி துருவிய தேங்காய், கசகசா, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த மசாலாவுடன் பூண்டு, மஞ்சள் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதில் சுத்தம் செய்த நண்டுகளை சேர்த்து, அவை நிறம் மாறும் வரை வதக்கவும். அரைத்த மசாலாவை இத்துடன் சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும். நண்டு வறுவல் ரெடி.

மீன் பிரியாணி

nonveg food recipe தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – இரண்டு கப்
தக்காளி விழுது – ஒரு கப்
தேங்காய் பால் – ஒரு கப்
தண்ணீர் – இரண்டு கப்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
முள் நீக்கிய மீன்துண்டுகள் – பத்து
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – எட்டு பல்
தயிர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – நான்கு
கொத்தமல்லி இலை – ஒரு கப் (நறுக்கியது)
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
ஊற வைக்க:
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கவும். இந்த விழுதில் மீனை புரட்டி ஊற வைக்கவும்.
செய்முறை
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரிசியை மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும். தக்காளி விழுது, தேங்காய்பால், தண்ணீர் ஒன்றை கப் சேர்க்கவும். உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும். பாத்திரத்தை மூடி அரிசியை வேக வைக்கவும். குறைந்த தீயில் இதை வைத்திருக்கவும் என்பது சதவிதம் வெந்தால் போதும் (குழையாமல் பார்த்துக் கொள்ளவும்).
மீன் செய்முறை
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். மசாலாவில் ஊற வைத்த மீனை சேர்த்து சிறிது நீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விடவும். வேக வைத்த
பாசுமதி அரிசியை இதனுடன் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments