14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா? | Pudhupettai Movie

Pudhupettai Movie பாட்ஷா, நாயகன் என்று ஸ்டார் மதிப்பு கொண்ட நாயகர்களுக்கு பல Gangster படங்கள் அவ்வபோது வெளிவந்து வெற்றி பெரும். ஆனால் உண்மையாகவே ஒரு gangster பற்றிய படம் எது என்று ஒரு லிஸ்ட் எடுத்தால். இந்தியன் சினிமாவில் முதலில் வந்து நிற்பது புதுப்பேட்டை மட்டும்தான்.

வாங்க கொஞ்சம் Short அண்ட் Sweet ஆ பாக்கலாம்

காதல் கொண்டேன், 7g ரெயின்போ colony படத்த எடுத்துட்டு அடுத்தது வேற எதாவது ஒரு படம் பண்ணனும்னு செல்வராகவன் ஒரு கதை எழுதினார். தனுஷ் தான் ஹீரோ படம் பெயர் ஒரு நாள் ஒரு கனவு.

ஆனா அந்த படம் பாதிலயே drop. தனுஷோட மொத்த நடிப்பையும் வாங்கனும்னு செல்வராகவன் யோசிச்சி எழுதன கதைதான் புதுப்பேட்டை.

2006 ல வெளியான அந்த படம் நல்ல எதிர்பார்புல இருந்தாலும் படம் Flop. ஆனா இப்போ? 2019 படம் Re release ஆனப்போ 39 கோடி பாக்ஸ்ஆபீஸ் ஹிட்.

இந்த படம் பார்த்தவங்களுக்கு கொக்கிகுமார், கிருஷ்ணவேணி , செல்வி இந்த பெயர் மறந்திருக்க வாய்ப்பே இல்ல.!  முழுக்க முழுக்க ஒரு gangster film எப்படி எடுக்கனும்னு இந்த படம் பார்த்து தெரிஞ்சிக்கலாம்.

படத்தோட ஆரம்பத்துல ஹீரோவோட அம்மாவை கொலை பண்ணிடறாரு அப்பா.! அவர்கிட்ட இருந்து தப்பிச்சி போற ஹீரோ. எப்படி பெரிய gangster ஆகறாரு அப்டிங்கறத frame by frame அவ்ளோ சூப்பரான ஸ்க்ரீன்ப்ளேல செல்வராகவன் விளையாடி இருப்பாரு.

நேரத்துக்கு ஏத்தமாதிரி ஹீரோ மாறிகிட்டே இருப்பாரு. உதாரணமா. சாப்பாட்டுக்கு வழி இல்லாம பிச்சை எடுத்து சாப்ட போவாரு.

அதே இடத்துல கஞ்சா விக்கற கும்பல் கூட சேர வாய்ப்பு கிடைச்சதும் யோசிக்காம சேர்ந்துருவாறு. கஞ்சா விக்கணும். வித்துட்டு இருப்பாரு.! அங்க கிருஷ்ணவேணிங்கற பொண்ண பாத்து ஆசை பட்றாரு. அவளுக்காக யோசிக்காம தனக்கு வேலை குடுத்தவரையே வெட்டி கொன்னுடறாரு.

இப்படி ஒவ்வொரு இடத்துலையும். தனக்கு என்ன தேவையோ அத மட்டுமே செஞ்சிட்டு இருப்பாரு. ! அரசியல்வாதியான தமிழ்செல்வன்கிட்டயே போய். ! எனக்கு ஏரியா வேணும்னு கேப்பாரு.! நீங்க என்ன உயிரோட விட்டா நான் உங்கள உயிரோட விட்றேன் அப்டின்னு சொல்லி தனக்காக மட்டும்தான் யோசிப்பாரு ஹீரோ கொக்கி குமார். தனக்கு எல்லாமே வேணும்ங்கற ஒன்னு அவரோட மனசுல இருந்துகிட்டே இருக்கும்.

அவ்வளவு ஏன் நண்பனோட தங்கச்சிகே எதிர்பாக்காம தாலிகட்டி நான் மட்டும்தான் பெரிய ஆளுங்கற அந்த ஆளுமைய முழுசா காட்டி இருப்பாரு கொக்கிகுமார்.

ஒரு கட்டத்துல அந்த ஆளுமைதான் அவருக்கு எதிராவே மாறுது.! தேர்தல்ல தனக்கும் ஒரு சீட் வேணும்னு கட்சி ஆபீஸ்ல அன்னைக்கு நைட் எல்லாரையும் மிரட்டுற அந்த இடம்தான் தான் பெரிய ஆள் இல்லைங்கற நினைப்பு கொக்கிகுமார் மனசுல வரும்.!

Survive Of Fittest ங்கற வார்த்தைக்கு ஏத்தமாதிரி…தன்ன எல்லா இடத்துலையும் முன்னிலை படுத்திகிட்டு. கொஞ்சம் கொஞ்சமா வளந்துட்டு இருப்பாரு கொக்கி குமார்.!

முக்கியமான சீன் ன்னு படத்துக்குள்ள ஒரு லிஸ்ட் எடுத்தா. கிட்டத்தட்ட எல்லாமே முக்கியமானதாகத்தான் இருக்கும்.

கொக்கிகுமாரோட ஒவ்வொரு காட்சிகள்ளையும். background வர லைட் effect அவ்ளோ நல்லா பண்ணி இருப்பாங்க.அதுவே கதை சொல்லும்.

100 பேர் இருக்கும்போது தனி ஆளா வில்லனோட தம்பிய கொன்னுட்டு வர அந்த இடம்தான் கொக்கிகுமார் gangster ஆகறதுக்கு தூண்டுதலா இருக்கும்.! அந்த இடத்தோட அவரோட நடிப்பு எல்லாராலையும் பேசப்பட்ட ஒரு விஷயம்.

ஆனா இந்த படத்துக்காக தனுஷ்க்கு எந்த விருதும் வழங்கப்படவே இல்லைங்கற விஷயம் வருத்தப்படவேண்டிய ஒன்று.

இப்டி ஒரு பக்காவான gangster படம் இன்னமும் வெளிவரவே இல்லைங்கறதுதான் இங்க Highlight.

கிளைமாக்ஸ்ல தன்னோட குழந்தைய குப்பதொட்டில போட்டுட்டு. “உயிரோட இருக்கனும்டா” ன்னு பேசற அந்த இடம். அவ்ளோ ரியல்லா இருக்கும்.! அந்த இடத்துல தன்னோட உயிர் மேல அவருக்கு வர பயம் பாக்கற நம்மளுக்கும் கொடுத்து இருப்பாரு.!

இந்த படத்துக்கு போட்ட Pudhupettai Movie 10 Audio Track க்குமே இப்போ வரைக்கும் பல பேரோட Favourite.

1.Pudhupettai Main Theme: “Survival Of The Fittest”,

2. Peek Into Assassin’s Life: “Neruppu Vaayinil”, 

3. Our Story: “Enga Yeriya”, 

4. Selling Dope: “The Beginning”, 

5. It All Comes Down To this!: “Oru Naalil”,

6. Going Thru Emotions!: “Prelude”,

7. Gangster’s Marriage Party: “Pul Pesum Poo Pesum”,

8. Night Life: “Varriyaa”,

9. Clash Of The Titans: “The War Cry”, 

10. “Oru Naalil”: Composer’s Dream Mix.

14 Years அப்பறமும் ஒரு படத்த இந்த அளவுக்கு பேசப்படுதுன்னா அதுதான் செல்வராகவனோட வெற்றி.!

அண்ட் இந்த படத்துக்கு வசனங்களும் ரொம்பவே முக்கியமான ஒன்னு. பாலகுமரானோட வசனம் படம்முழுக்க தெறிக்க விட்டு இருப்பாங்க.!

புதுப்பேட்டை எப்பவுமே ஒரு Cult Classic தான்.

இப்போ புதுப்பேட்டை 2 வரபோகுது. கிருஷ்ணவேணி, செல்வி கதாபாத்திரங்கள் இருக்காது ஆனாலும் கொக்கிகுமார் Is Back.

Next

 

Leave a Comment Cancel Reply