தாய்லாந்து மகாராணி மரணத்தின் மர்மம்….?
mystery of death உலகில் பெரும்பாலான நாடுகள் இன்று ஜனநாயக முறைக்கு வந்துவிட்டன சில நாடுகளே மன்னர் ஆட்சியின் கீழ் உள்ளது. சில நாடுகளில் மன்னர் குடும்பம் இருந்தாலும், ஆட்சி பொறுப்பு அதிகாரம் ஜனநாயகமாக இருக்கிறது.
ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் ஆட்சி முறை தான் உலகில் பல இடங்களில் இருந்தது. பிரிட்டிஷ் காலத்திற்கு முன்பு இந்தியா முழுவதும் மன்னர் ஆட்சி முறை தான் இருந்தது.
இந்த மன்னர்களை வீழ்த்தி தான் இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கைபற்றினர்.
இப்படியான மன்னர் பரம்பரை உலகை ஆண்டாளும், அவர்கள் குடும்பங்களில் பலரது மரணங்கள் வித்திரமாகவோ, மர்மமாகவோ, வித்தியாசமானதாகவோ இருந்திருக்கிறது.
சிலர் பழி வாங்குவதற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிலர் வித்தியாசமான குணங்களால் உயிரை இழந்திருக்கிறார்கள்.
சிலர் சட்டங்களால் உயிரை இழந்திருக்கிறார்கள். இப்படியாக தற்போது தாய்லாந்தாக இருக்கும் இடத்தின் முன்னால் ராணி யாக இருந்த சுனந்தா குமாரி ரத்னாவின் மரணம் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.
தற்போது தாய்லாந்தாக இருக்கும் நாடு ஒரு காலத்தில் சியாமிஸ் என பகுதியாக அழைக்கப்பட்டது. இந்த நாட்டை சோழங்கோரன் என்ற மன்னன் ஆண்டுவந்தான்.
இவர் அந்நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களையும் புரட்சிகளையும் ஏற்படுத்தினான். அந்நாட்டில் இருந்த அடிமை முறையை ஒழித்து மக்களை சிறப்பாக வாழ கற்றுகொடுத்தே எந்த மன்னன் தான் என சொல்லும் அளவிற்கு ஆட்சி செய்தான்.
அந்த மன்னர் சுனந்தா குமாரிரத்னா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். திருமணம் செய்யும் போது ராணிக்கு வயது மிகவும் குறைவு தான். அவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
அந்த குழந்தைக்கு கண்ணபோரன் பிரஜா ரத்னா என பெயரிட்டிருந்தார். இந்நிலையில் மகாராணி சுனந்தா குமாரி ரத்னாவிடமும் தன் குழந்தையிடமும் மன்னர் சோழங்கோரன் மிகவும் பாசமாக இருந்தார்.
இந்நிலையில் மகாராணி சுனந்தா இரண்டாவது முறையாக கருத்தரித்திருந்தார்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மன்னர் குடும்பம் பாங் -பா இன் என்ற இடத்தில் உள்ள அவர்களது மாளிகைக்கு சென்று அங்கிருந்து அரசு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் அவர்கள் அந்த அரண்மனைக்கு செல்ல தயாராகினர். இவர்களது பொருட்களை எல்லாம் காவலர்கள் எடுத்து சென்றனர்.அந்த அரண்மனைக்க செல் தாய்லாந்தின் மிகப்பெரிய நதியான சவ் பைரயா என்ற இடத்தை கடந்து செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் அவர்களுக்கான தனிப்படகு ஒன்று தயார்படுத்தி அதில் அவர்களை ஏற சொன்னார்கள். மற்றவர்கள் வேறு படகில் ஏறி இவர்களுக்கு பாதுகாப்பாக செல்ல தயாராகினர்.
இந்நிலையில் மகாராணியும் அவரது குழந்தையும் அந்த படகில் ஏறும்போது யாரும் எதிர்பாராத விதமாக அவர்கள் தவறி தண்ணீரில் விழுந்துவிட்டனர்.
மகாராணிக்கும் நீச்சல் தெரியாது. அந்த 2 வயது குழந்தைக்கு நீச்சயல் தெரியாது. இவரும் தண்ணீரில் தத்தளித்தனர்.
அதை பார்த்து அருகிலிருந்த பாதுகாவலர்கள் அவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்தனர். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்நாட்டில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சதாரண மனிதர்கள் தொடக்கூடாது .
அப்படி தொட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். அதனால் அதற்கு பயந்து யாரும் அவர்களை காப்பாற்றவில்லை.
சுற்றி நூறு பேர் இருந்து யாரும் அரச குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை என்பதால் யாரும் அவரை காப்பாற்றாமல் மகாராணி, அவரது 2 வயது மகள் மற்றும் மகாராணியின் வயிற்றில் இருந்து குழந்தையும் தண்ணீரிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த செய்தியை கேட்டு அரசர் துடிதுடித்தார். பாதுகாவலுக்கு இருந்தவர்களிடம் சண்டை போட்டார்.
தேவையில்லாத ஒரு சட்டத்தால் தன் மனைவியும் குழந்தையும் இறந்ததை நினைத்து பெரிதும் வருந்தினார். மேலும் அந்த இடத்தில் மகாராணிக்கு பாதுகாவலாக இருந்தவர்களை கைது செய்தார்.
நாட்டில் ராஜ குடும்பத்தினரை சாதாரண மக்கள் தொடக்கூடாது என்று இருந்த சட்டத்தை முழுமையாக மாற்றினார்.
இதையடுத்து தன் அன்பு மனைவியின் இறுதி சடங்கை ஆசிய சாம்ராஜ்ஜியத்திலேயே இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக நிகழ்த்தினார்.
அதன் பின் அவர்கள் செல்லவிருந்த அரண்மனைக்கு பின்னால் மகாராணிக்கும் அவரது மகளுக்கும் மிகப்பெரிய நினைவிடம் ஒன்றை கட்டினார்.
ஒரு சிறிய உதவி செய்திருந்தால் மகாராணியின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் சுற்றியிருந்தவர்கள் அவர தொடவில்லை என்றாலும் ஒரு கயிற்றை வீசியிருக்கலாம்.
அதன் மூலமாவது மகாராணி உயிர் பிழைத்திருப்பார். ஆனால் அந்த சட்டத்திற்கு உயிர் போகும் தண்டனை என இருந்ததால் அந்த பயமே இவர்களை அதை தாண்டி யோசிக்க தடுத்துவிட்டது.
அந்த மோசமான சட்டத்தால் மகாராணியின் உயிரே போய்விட்டது. இன்றும் அந்த மகாராணிக்கு அந்த நாட்டில் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது.