ஒய்ஜா மர்மம் | ஆவியுடன் நீயும் | Ouija Board in tamil

ஆவிகளுடன் பேச உதவும் ஓயிஜா போர்டு… நிஜம்தானா? #OuijaBoard Ouija Board in tamil

பேய் இருக்கா இல்லையா என்ற கேள்விக்கே விடை இன்னும் அறியப்படவில்லை. ஆனால், இந்த ஒயிஜா போர்டை வைத்து ஆவிகளுடன் பேச முடியும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர்.

அது என்ன ஓயிஜா போர்டு? சற்று விரிவாக பார்ப்போம்.

19 ஆம் நூற்றாண்டில். 1848 இல் நியூ யார்க் நகரத்தை சேர்ந்த “ஃபாக்ஸ் சிஸ்டர்ஸ் (fox sisters)” என்று அழைக்கப்பட்ட Leah Margret மற்றும் kate தங்களால் ஆவிகளுடன் பேச முடியும் என்றும் ஆவிகள் இவர்களிடம்  பதில் கூறும் என்றும் கூறியிருக்கின்றனர்.

இதற்கு பிறகுதான் இறந்தவர்களிடம் பேசப்படும் முறை  “seances ” அமெரிக்கா முழுவதும் வலம்வர ஆரம்பித்தது. 1862 இல் ஆபிரகாம் லிங்கன் மனைவி தனது இறந்துபோன 11 வயது மகனுடன் seances நடத்தியிருக்கின்றனர்.

இருந்தாலும் இப்படி ஆமை வேகத்தில் பதில் வருவதை கேட்க பொறுமையில்லாமல் மக்கள் எளிய வழியை தேடும் போதுதான் ஆன்மீகவாதிகள் பேசும் பலகையை கண்டுபிடித்துள்ளனர்.

வித்தை காட்ட வித்தைக்காரன் தான் தேவை என்பதை இந்த போர்டு முறியடித்தது. ஆன்மீகவாதிகள் மட்டுமே நடத்த முடிந்த “seances ” பிறகு யார்வேண்டுமானாலும் நடத்த முடியும் என்றானது.

Planchette என்ற கருவியின் மேல் விரல்களை வைத்துக்கொண்டு கேள்விகளை கேட்க, அது அந்த பலகையின் மேலுள்ள எழுத்துக்களுக்கு நகர்ந்து பதிலை சுட்டிக்காட்டும்.

இந்த போர்டு-ஐ தான் பால்டிமோர் ஐ சேர்ந்த சார்லஸ் கென்னர்ட் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து “ஓயிஜா போர்டு” என்ற பெயரில் தயாரித்து விற்றனர்.

இதற்குக் காப்புரிமையும் பெறப்பட்டது. இதன் பேருக்கு பின்னாலும் ஒரு பெரிய கதை இருக்கிறது. இதற்கு பெயர் வைத்தது ஓர் ஆவி. இந்த போர்டு-ஐ சோதித்து பார்க்க நினைத்தவர்கள், அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அந்த போர்டிடம் வினவிய போது “OUIJA “ என்று காட்டியிருக்கிறது.

“ஓயிஜா” என்றால் என்ன என்று கேட்ட போது “குட் லக் ” என்று காட்டிவிட்டு , உடனே குட் பைக்கு Planchette நகர்ந்திருக்கிறது.

அதனால் வந்த ஆவி “ouida” என்ற எழுத்தாளர் உடையது என்றும் அதனை மாற்றி உச்சரித்து OUIJA என்றானதும் பெயரின் கதையாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் ராபர்ட் பார்ச் என்பவர் ஆராய்ந்து கண்டறிந்துள்ளார்.

ஓயிஜா போர்டை கண்டறிய பல நாட்கள் ஆகியிருந்தாலும் ஓயிஜா போர்டு-ஆல் கண்டறியப்பட்டவை ஏராளம்.

உதாரணமாக 1978 ஆம் வருடம் இத்தாலியின் 38 வது பிரதம மந்திரியான “ஆல்டோ மோரோ” தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போது போலோக்னா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் இந்த போர்டை பயன்படுத்தி அவர் கடத்தப்பட்ட பகுதியை கண்டறிந்துள்ளனர்.

இதை வைத்து பேய் வந்ததை விட படங்கள் வந்தது தான் அதிகம். தி எக்ஸார்சிட் போன்ற பல படங்கள் வெளியாகி இருக்கின்றன

கடவுளுக்கு மட்டும் தெரிந்த பிறப்பு, இறப்பு ஆகிய பல விஷயங்களை ஓயிஜா கணித்தது. கடவுளுக்கே அறிவியல் விளக்கம் அளித்த இவ்வுலகம் இந்த அமானுஷ்யம் நிறைந்த போர்டுக்கும் அளித்திருக்கிறது.

அதாவது இந்த planchette கருவி தானாக இயங்குவதற்கு காரணம் ideomotor effect என்ற கொள்கை தான் என போட்டுடைத்தனர்.அதாவது நம்மை அறியாமலே நாம் unconcious mind எனப்படும் அடிமனதில் நமது உடலில் அசைவுகளை ஏற்படுத்துகிறது.

இந்த போர்டின் பெயர் கூட ஹெலன் பீட்டர்ஸ் மனதில் ஆழமாக இருந்த பிரபல எழுத்தாளருடைய பெயர் “ouida” என்றும் அவரின் அடிமனதில் இருந்த அந்தப் பெயரை எழுதி “OUIJA ” என்று தவறாக படித்ததாக சொல்லப்படுகிறது.

ஓயிஜா போர்டு பொய் என்று நிரூபிக்க பல ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்தாலும் மக்கள் அதை நம்புவதும், அனுபவித்ததாக கூறப்படும் கதைகளும் செவிப்பறையில் விழுவதை தடுக்க முடியவில்லை.

நிச்சயம் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் இந்த உலகில் இருக்க முடியாது. Thanks To vikatan – Some Info. Ouija Board in tamil

 

Next Page : Click

 

Leave a Comment Cancel Reply