Saturday, November 30, 2024
Homeமிஸ்டரி வேர்ல்டுMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்

Mystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்

Urben legend-Mystry Of Agartha City  அப்டிங்கற வார்த்தைக்கு ஏற்றமாதிரி பல கட்டுக்கதைகள் இன்னமும் உண்மை அப்டின்னு நம்பப்படுது,

அதுல ஒரு Urben legend தான் இந்த அகர்தா நகரம். மாய நகரம்னு அழைக்கபட்ற இந்த அகர்தா நகரம் பற்றி கொஞ்சம் விரிவா பாக்கலாம்.

இதுவரைக்கும் யாரும் போகாத ஆனா இருக்கணு நம்பபட்ற இந்த உலகத்தோட 4th டைமென்சன்லதான் இந்த நகரம் இருக்கறதா சொல்றாங்க.

What is 4th Dimension இந்த கேள்வி பல பேருக்கு இருக்கு இதை முதல்ல பாத்துருவோம் அப்போதான் பின்னாடி சொல்லபோறது உங்களுக்கு புரியும்.

நம்ம வாழ்ற இந்த உலகம் மூன்று டைமென்சன்கள் கொண்டது. அதாவது நீங்க உங்க வீட்டு பால்கனியில நின்னு வானத்த சுத்தி பாக்றீங்க அந்த வானம் எங்கயோ பொய் முடியற மாதிரி உங்களுக்கு தெரியும்.! நீங்க நடந்துபோனா அந்த வானம் நீண்டு போய்கிட்டே இருக்கு.

அதுக்கு End Point ன்னு ஒன்னு கிடையவே கிடையாது. இதேதான் 4th Dimension அப்டிங்கறதும் அந்த வானம் மாதிரியே இன்னொரு வானம் இருக்கும் அது உங்க கண்ணுக்கு தெரியாது. இன்னும் புரியற மாதிரி சொல்லனும்னா கடந்தகாலம், எதிர்காலம் இரண்டுமே 4th Dimensionல இருந்துதான் உருவாகுது. நிகழ்காலம் மட்டும்தான் 3rd Dimensionல நம்ம கண்ணனுக்கு தெரிஞ்சி நடக்கற ஒரு விஷயம். 4th Dimensionல இந்த உலகம் மாதிரியே இன்னொரு உலகம் இருக்கு. இங்க பாலைவனம் இருக்குனா அதே இடத்துல 4th Dimensionல ஒரு நகரமே இருக்கும். இதுதான் 4th Dimension தியரி.

இப்போ அகர்தா நகரம் பற்றி பாக்கலாம்

ஹிட்லர் காலத்துல ஹிட்லர் தனியா ஒரு குழு உருவாக்கி ஷாம்பலா அப்டிங்கற ஒரு மாய நகர்த்த தேட சொல்லி அனுப்பி வச்சாரு ஆனா அந்த நகரத்த அவங்களால எவ்ளோ தேடியும் கண்டுபிடிக்க முடியல.

இந்த நேரத்துலதா அந்த குழு இன்னொரு மாய நகரத்த கண்டுபிடிச்சாங்க. இந்த விஷயத்த ஹிட்லர்கிட்ட நாங்க இன்னொரு மாய நகரத்த கண்டுபிடிச்சதாகவும்…

ஆனா அதோட நுழைவாயில மட்டுமே பாத்ததாகவும். அந்த நுழைவாயில் பக்கதுலகூட போகமுடியல அங்க சில விசித்திரமான மிருகங்கள் காவலுக்கு இருப்பதாகவும் சொன்னாங்க.

பத்தொன்பதாம் நூற்றாண்டுல பிரெஞ்சு மறைநூல் அறிஞர் “அலெக்ஸாண்ட்ரே செயிண்ட்-யவ்ஸ் டி ஆல்விட்ரே” ஐரோப்பாவுல  அகார்த்தாவோட முதல் “நம்பகமான” விஷயங்கள  வெளியிட்டார்.

அவரைப் பொறுத்தவரைக்கும் , “அகர்தாவின்” இரகசிய உலகமும் அதன் ஞானமும் செல்வமும் “எல்லா மனிதர்களுக்கும் சரியானதா இருக்கும், அவ்ளோ செல்வங்கள் அங்க கொட்டி கிடக்கறதா சொன்னாரு.

இது எங்க இருக்குனு அவரே சொன்னாரு, இது திபெத் அல்லது இமயமலையில் அமைந்துள்ள ஒரு இடம் அப்டின்னு ஆனா சிலர் அத நம்ப மறுத்துட்டாங்க.

ஆய்வாளர் ஃபெர்டினாண்ட் ஒசென்டோவ்ஸ்கி 1922 இல் மிருகங்கள், ஆண்கள் மற்றும் கடவுள்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். புத்தகத்தில, பூமிக்குள்ள இருக்கற  ஒரு நிலத்தடி ராஜ்ஜியம் குறித்து அவருக்கு கிடைச்ச ஒரு கதையைப் பற்றி சொல்றாரு. இந்த ராஜ்ஜியம் அகர்தி அப்டின்னு சொன்னாரு.

அதுக்குள்ள ஆயிரகணக்கான மக்கள் வாழ்வதாகவும்…எல்லாருமே அங்க செல்வமிக்கவர்களா மட்டும்தான் இருபாங்கனும்..மேலும் அங்க பசிங்கற ஒருவிஷயமே இருக்காதுனும் சொன்னாரு. அங்க வாழ்ற மக்கள் இப்பவும் அடிக்கடி இமயமலை பக்கத்துல வந்துட்டு போறதா சொல்றாங்க. ஆனா இது எந்த அளவுக்கு உண்மையுனு தெரியல.

அகர்தா (சில சமயங்களில் அகரதா, அகர்தி அல்லது அகர்தா என்று குறிப்பிடப்படுகிறது)

இந்துக்கள் இதற்க்கு ஆரியவர்த்தா ன்னு ஒரு பெயர் வச்சாங்க.! அதாவது ஆரியர்களின் நகரம். ஆரியர்களால உருவாக்கப்பட்ட அந்த நகரம் ஒரு சாபத்தால யார் கண்ணுக்கும் தெரியாம மறைஞ்சி போய்டிசினும் ஒரு சிலர் சொல்லிட்டு இருக்காங்க.

இது ஒரு அமைதியான இடம் அப்டினும்…மனிதர்கள் இதுக்குள்ள சாக வரத்தோட வாழ்துட்டுதான் இருக்காங்க அப்டினும் ஒரு கருத்து நிலவீட்டு இருக்கு.

ஆனா இப்போ வரைக்கும் இந்த நகரத்த யாரும் பாக்கவே இல்லையினும்…இது கட்டுகதையினும் சொன்னங்க. ஆனா இப்படி ஒரு நகரம் இருக்குனும்…!  4th டைமென்சன்ல தான் இந்த உலகம் தெரியும்அப்டினும் பல அகழ்வாராய்ச்சி மேதைகள் ஒரு விஷயத்த முன்வச்சாங்க.!

இத தேடி பல பேர் உலகமுழுக்க இருக்கற நிறைய மலைசார்ந்த பகுதிகளுக்கு சுற்றி வந்தாங்க இப்போ வரைக்கும் யார் கண்ணுக்கும் இது தென்படவே இல்ல.! ஆனா இமயமலைக்கு பக்கத்துல இந்த அகர்தா மாயநகரம் இப்டியெதான் இருக்குனும்.

அதுக்கு போற நுழைவாயில் அவ்ளோ சீக்ரம் யாருக்கும் தெரியாதுன்னும். அப்டி தெரிஞ்சிகிட்டு அதுக்குள்ள போக முயற்சி பண்ணினா அவங்க காணாம போய்டுவான்கனும் அங்க இருக்கற சிலரால சொல்லபடுது. இது கட்டுகதைகளா சொல்லபட்டாலும் 500 ஆண்டுகளுக்கு வாழ்ந்த மூதாதையர்கள் இது கடவுள்கள் வாழ்ற இடம் அப்டினும்…! துறவிகளுக்கு மட்டும்தான் இந்த இடம் கண்ணனுக்கு தெரியும் அப்டினும் சொன்னங்க.

17th century ல உலகம் முழுக்க இப்படி பல இடங்கள் மர்மம் சார்ந்து இருக்குன்னு அகழ்வாராய்ச்சியாளர்கள் அத கண்டுபிடிச்சாலும் சில விஷயங்கள் உலகத்தோட பார்வைக்கு தெரியாம இருக்கறதே நல்லதுன்னு அத யாருக்கும் சொல்லாம அந்த ரகசியத்த பாதுகாத்தங்க…அவங்களோடவே அந்த அந்த ரகசியமும் அழிஞ்சி போய்டிசினு ஒரு கூற்று பல வருடங்களா உலா வருது.

இதே மாதிரி ஹம்பலாங்கற ஒரு மாய நகரமும் இருக்கு. ஹிட்லர்கூட நம்பின அந்த நகரமும் இப்போ வரைக்கும் ஒரு மர்மமாகத்தான் பார்க்கபடுது.!

ஆனா Urben legendஆக பார்க்கப்டுற பல விஷயங்கள் கேட்க நல்லா இருந்தாலும் அது உண்மையாகவே இருந்தா நல்லாத்தான் இருக்கும்.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments