Wednesday, October 16, 2024
Homeசினிமாஒரு பக்க சினிமா கதை | Method of Films | World Cinema

ஒரு பக்க சினிமா கதை | Method of Films | World Cinema

Tamil movies சினிமாவை பற்றிய இந்த பதிவு முற்றிலும் பொழுதுபோக்கு மட்டுமே..! ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கில திரைப்படத்தை வலைதளத்தில் தேடிக்கொண்டு இருந்த பொழுது பட்டென ஞானத்தில் உதயமானது ஒரு கேள்வி.

ஆங்கில படம் மட்டும் ஏன் உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது.? இவர் ஹாலிவுட் லெவெல்ல படம் எடுத்து இருக்காருப்பா. என அடிக்கடி நாம் சொல்ல காரணம் என்ன.?

அதற்க்கு விடைதேடி பார்த்த பொழுது …ஏமாற்றமே மிஞ்சியது. ஏன்..? ஆங்கில படத்தில் கொண்டவரப்பட எல்லா தொழிற்நுட்ப விஷயங்களும் நம் தமிழ் சினிமாவிற்கு மிக மெதுவாகவே கொண்டுவரப்பட்டது.

இந்தியாவை தவிர வேறு நாடுகளில் வெளியாகி உள்ள படங்களில் எல்லா விதமான கதைகளும் வந்தாகி விட்டன.

ஆனால் நாம் 5-6 விதமான கதைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் எடுத்துகொண்டு இருக்கிறோம்.

(காமெடி படம்,பேய் படம்,மசாலா படம்,gangster film, psycho பற்றிய படம்) அதை தவிர வேறு கதைகள் என்று பார்த்தால் அதை விரல் விட்டு எண்ணி விடலாம்.

Tamil movies,5௦ காலகட்டத்தில் ஒரு மாயஜால திரைப்படமோ,சூப்பர் ஹீரோ திரைப்படமோ வெளிவரும். (மாயாபஜார் அண்ட் ஜெய்சங்கர் படங்கள்) ஜெய்சங்கர் தான் நாம் பார்த்த முதல் சூப்பர் ஹீரோ.

அதற்க்கு பின் சினிமா மசாலா பாணியிலையே பயணித்து வந்தது. பிரபல ஹீரோக்கள் அனைவருக்கும் மக்கள் தன்னை நல்லவர்களாக பார்க்க்க வேண்டும் என்னும் எண்ணம். இயக்குனர்களுக்கும் அதே

. அப்படியே படிப்படியாக வந்தால் 80 காலகட்டத்தில் சற்று மசாலா தூக்கலாக இருந்த நேரம். தடாலடியாக சினிமாவில் நுழைந்தனர் சில இயக்குனர்கள்(பாக்கியராஜ்-மகேந்திரன்,மணிரத்னம், பாலு மகேந்திரா போன்றவர்கள்)

அவர்கள் வருகைக்கு பின் மசாலா குறைந்து நல்ல கதை அம்சமுள்ள கதைகள் வெளியாகின.

எனக்கு தெரிந்து 2000 காலக்கட்டம் ஆரம்பித்த உடன் எல்லா இயக்குனர்களும் காதல் மற்றும் பழைய மசாலா பக்கம் திரும்பிவிட்டனர். புது முயற்ச்சிகள் கைவிட பட்டன.

காரணம் புதிய முயற்சியாக எடுக்கப்பட்ட அனைத்து படங்களும் தோல்வி. முதலில் இருந்து ஒரு லிஸ்ட் எடுத்தால். தமிழின் முதல் ஏலியன் அண்ட் SPACE film(டிக் டிக் டிக் இல்ல).

1963-ம் MGR அவர்கள் நடித்த கலைஅரசி திரைப்படம்.வேற்று உலகத்தில் எல்லாம் இருக்க கலை மட்டும் இல்லை. அதனால் வேற்றுகிரக வாசிகள் கலைகள் இருக்கும் இடம் தேட

அது பூமி என்ற கிரகத்தில் இருப்பதாக தகவல் கிடைக்க பூமிக்கு வந்து கலைகளில் சிறந்து விளங்கும் கதாநாயகியை கடத்தி சென்றுவிடுகின்றனர்.

அவரை MGR எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. அந்த காலத்தில் இப்படி ஒரூ கதை. ஆனால் படம் படுதோல்வி.

இந்த படம் வெற்றி அடைந்து இருந்தால் இன்னும் பல முயற்ச்சிகள் அரங்கேறி இருக்கும். அதற்க்கு பின் மாயாஜால படங்கள் என்ற பெயரில் கேலியான படங்களே கொண்டுவரப்பட்டன.

யாரும் கலைஅரசி போன்ற மாறுபட்ட கதைகளை எடுக்க முன்வரவில்லை.

அப்படியே வந்தால். 1986-ல் கமல் நடிப்பில் விக்ரம். (சுகிர்த்த ராஜா சத்யராஜ்)யை யாராலும் மறந்துவிட முடியாது. நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். ஆனால் படம் தோல்வியையே சந்தித்தது.

அந்நேரம் இயக்குனர் ஸ்ரீ தர் காணாமல் போய் இருந்தார். எனக்கு தெரிந்து 60 காலகட்டங்களில் மாறுபட்ட கதைகளை கையில் எடுத்தவர் இயக்குனர் ஸ்ரீதர்.

இந்த காலகட்டத்தில் தான். ரஜினி-கமல்-விஜயகாந்த் அனைவரும் மசாலா படங்களையே கொடுத்து வந்தனர்.

பின் 1989-ல் வேலு பிரபாகரன் இயக்கத்தில் வெளியானது நாளைய மனிதன். தமிழின் முதல் zombie திரைப்படம்(மிருதன் இல்ல)

இறந்து போன மனிதனை உயிர்பிழைக்க வைக்க முயற்சிக்கிறார் ஒரு விஞ்ஞானி.

ஆனால் அந்த மனிதன் zombie யாக மாறிவிட பின் என்ன ஆகிறது என்பதே கதை. ஏதோ ஓடியது என்று நினைக்கிறேன்.

பின் அதன் இரண்டாம் பாகம் வெளியானது. அதிசய மனிதன்.

அதற்குபின் மூன்றாம் பாகமாக எலும்பு மனிதன் வருமென கூறப்பட்டது. இன்றுவரை வரவில்லை.

அப்டியே பேய் படம் மற்றும் பாம்பு படம் பக்கம் சினிமா திரும்பியது.(நீயா,நானே வருவேன்,நாகம்,ராஜ நாகம்.ext…..Tamil-Movies…)

பேய் படம் (13-நம்பர் வீடு,உருவம்,ஆயிரம் ஜென்மங்கள்,அந்தி வரும் நேரம்.பேய் வீடு. ஜமீன் கோட்டை..ext…..) ஆனால் இந்த காலகட்டத்தில் அறிவியல் சார்ந்த படங்கள் ஒன்றோ இரண்டோ மட்டுமே வந்தது.

அறிவியல் புனைவு படங்கள் அதிகம் ஏன் யாரும் எடுக்க முன்வரவில்லை என்பதே கேள்வி.! அதற்க்கு பின் வந்தது சின்ன வாத்தியார்.

இது அறிவியல் சார்ந்த படம். கூடுவிட்டு கூடுபாயும் கதை ஆனால் படம் தோல்வி. பின் சில அறிவியல் படங்களே இன்றுவரை வெளிவந்து உள்ளன.

அதில் முக்கால்வாசி படங்கள் தோல்வி. வெற்றி பெற்றது இரண்டு மூன்று படங்களே.(நியூ,எந்திரன்,தசாவதாரம்,நேற்று இன்று நாளை,2.0,டிக் டிக் டிக்) அவ்வளவுதான்.

இதில் இது வெற்றியா தோல்வியா என்னும் நிலைக்கு தள்ளப்பட்ட படங்கள்(அதிசய உலகம், போன்றவை) ஆனால் சில முயற்சிகள் அன்றைய படங்களில் தலைகாட்டின

.(சிவன்-கொலைசெய்யபட்ட மனிதன் மீண்டும் ரோபோவாக உருவாவது,(எந்திரன் இல்ல முதல் ரோபோடிக் film)

பின் (மாயாபஜார்-ராம்கி நடித்த படம்-பேய் படமாக இருந்தாலும் சில அறிவியல் சார்ந்த விஷயங்கள் வைக்க பட்டன.)(கருப்பு ரோஜா-நர பலி கொடுக்கும் கும்பலிடம் இருந்து ஒரு பெண்ணை காப்பாற்ற நினைக்கும் ஆணின் கதை. .) இது போன்ற சில படங்கள்.

ஆனால் இன்று அறிவியல் புனைவு கதைகள் பெரிய கதாநாயகர்களுக்கு மட்டுமே வைத்து எடுக்கபடுகிறது.

பிரம்மாண்டம் என்ற பெயரில் அதில் கதை என்று ஒன்றும் இருக்காது.

அவ்வபொழுது ஒரு நல்ல கதை கிடைக்கும் அதையே அடுத்து வருபவர்கள் எந்த அளவிற்கு கெடுத்து கொலைசெய்ய முடியுமோ அந்த அளவிற்கு கண்டிப்பாக வைத்து செய்து விடுவார்கள்.

அதனால்தான் ஆங்கில படங்கள் என்றும் முன்னணியில் இருக்கிறது.

போன வருட SCI-FI Movies என்று google-ல் தேடினால் 97 சதவீதம் மற்ற நாட்டு படங்களே.

நல்ல நல்ல படங்களை எடுத்தால் நிச்சயமாக ஓடுமா என்று இயக்குனர்களுக்கு சந்தேகம் போல. எனக்கும் சந்தேகம்தான்

Pursuit of happiness மாதிரி ஒரு படம் இங்கு வெளியானால் அழுவாச்சி காவியம் என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள். அட avengers மாதிரியாவது எடுங்களேன் என கேட்டால்.

avengers-ஏ தூக்கு மாட்டி சாகும் அளவிற்கு படம் எடுத்து பிரம்மாண்டம் என பெருமை பேசுவார்கள்.

இனியாவது அரைத்த மாவையே அரைக்காமல் புதிய கதையை தேர்ந்தெடுத்து சிறந்த திரைக்கதையுடன் கொடுத்தால் நன்று. ரசிகர்களும் மக்களும்.

இனி சினிமாவை ஒரு கலை யாக பார்ப்பதும் நன்று. இன்னும் ஒரு ஆள் 10 பெற ஒரே அடியில் அடித்து பூமிக்குள் இறக்குவது…ஓவர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments