Saturday, November 30, 2024
HomeசினிமாHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..! | Part 4

History Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..! | Part 4

History Of Film  உலகப்போர் ஓய்ந்து, இந்தியா சுதந்திரம் பெற்றபின், திரைப்படத்துறை மீண்டும் தொழில் ரீதியாக வளர ஆரம்பித்தது, திரைப்படத் தயாரிப்பு அதிகரித்தது.

படங்களுக்கு வரவேற்பும் கூடியது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டவுடன், போட்டோங் திரையரங்குகள் பெருகி, திரைப்படம் கிராமவாசிகளையும் எட்டியது.

இந்த ஆண்டுகளில், சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்கள் வெளிவந்தன.  அதே சமயத்தில், பாதாள பைரவி (1951),

கணவனே கண் கண்ட தெய்வம் (1955) போன்ற மாயாஜாலப் படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தின.

இன்றுவரை பெரிய Budget திரைப்படம் என்ற பெருமை இதற்க்கு உண்டு..அதே சமயம் தமிழில் எடுக்கப்பட்ட பெரிய budget படமும் இதுவே!

மாயாஜாலம், பக்தி, தமிழ்ப்பற்று இவை மூன்றும் கலந்த படைப்பாக வந்த முக்கிய படைப்புகளில் ஒன்று ஒளவையார். நாடக ஆசிரியர்களாகப் புகழ் பெற்ற சில திராவிட இயக்கத் தலைவர்கள், திரைப்படத்துறையில் ஈடுபாடுக் கொண்டனர்.

1949 இல் ‘நல்லதம்பி’ படத்திற்கு கதைவசனம் எழுதி, சி. என். அண்ணாதுரை திரையுலகில் பிரவேசித்தார். வேலைக்காரி‘ திரைப்படம் அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது.

எஸ். எஸ். வாசன் இயக்கிய சந்திரலேகா (1948) பொழுது போக்கு படங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, வியாபார ரீதியில் பெரும் வெற்றியைக் கண்டது.

அவரைத் தொடர்ந்து, மு. கருணாநிதி மந்திரி குமாரி (1950) படத்திற்கு வசனம் எழுதினார். சினிமா வரலாற்றாசிரியர்களால், திராவிட இயக்கத் திரைப்படங்கள் என்றழைக்கப்படும் திரைப்படங்கள் பலவும், இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன.

கருணாநிதி திரும்பிப்பார் (1953), மனோகரா (1954) உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் ஈட்டினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முரசொலி மாறன், ஏ. வி. பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றோரும் திரைப்பட உலகில் வசனகர்த்தாக்களாக பிரவேசம் செய்தனர்.

இந்தக் காலகட்டத்தில் வசனமே திரைப்படங்களில் மேலோங்கியிருந்தது. காட்சி பிம்பங்களுக்கு முக்கியத்துவம் குறைந்தது.

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் திரையுலகில் பிரவேசித்தது தமிழ்த் திரைப்படத்திற்கும் அரசியலுக்குமான உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. திரைப்பட வசனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் செய்யும் பாணி ஆரம்பம் ஆனது.

மு.கருணாநிதி வசனம் எழுதி வெளியான பராசக்தி (1952)யின் வெற்றிக்குப் பாத்திரப் பேச்சு முக்கிய காரணமானது. இந்த படத்தின் அடுக்குமொழி வசனம், இன்றுவரை எல்லோராலும் ரசிக்கபட்டுகொண்டு இருக்கிறது.

சிவாஜி கணேசனின் முதல் படம் என்றும், இந்த படத்திற்குத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு.

1951இல் தென்னகத்தில் முதல் முதலாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கே. பி. சுந்தராம்பாள், தமிழ்நாட்டு மேல்சபையில் உறுப்பினராக்கப்பட்டு, சட்ட சபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றார்.

1952இல் இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. சென்னை உட்பட மும்பை, கல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் பன்னாட்டுத் திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது எனலாம்.

1918 இல் அமுல்படுத்தப்பட்ட இந்தியன் “சினிமாட்டோகிராப்” சட்டம் 1952ல் மறுவடிவில் தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை.

இதே வருடம், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படமான “காடு” சேலம் மாடர்ன் தியேட்டர் ம் தயாரிக்க படம்  தயாரானது. 1955ல் திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் அளிக்கும் மரபு உருவானது.

அந்த வருடம் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கதையான மலைக் கள்ளன் (எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்தது) தேசிய விருது பெற்றது. 1956ல் தென்னிந்தியாவின் முதல் திரைப்படக் குழுமம் “தி மெட்ராஸ் பிலிம் சொசைட்டி”, திருமதி அம்மு சுவாமிநாதனால் அமைக்கப்பட்டது. History Of Film

1959 ஆம் ஆண்டு, திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு, தமிழ் நடிகர் சங்கம் இயக்குநர் கே. சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பட்டது.

எனினும் தொழிற்சங்க இயக்கம் திரையுலகில் வேரூன்ற பல ஆண்டுகள் ஆயின. (ஏற்கனவே 1940ல் சினி டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன்ஸ் என்ற அமைப்பை இயக்குனர் கே. ராம்நாத் நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது).

Next  – Part 3

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments