History Of Film | ஓ..! இப்படிதான் இருக்குமா ? | Part 3 | திரைப்பட வரலாறு

History Of Film அன்றைய திரைப்படங்களில், பாட்டே முக்கிய அம்சமாக விளங்கியது. இரவல் (Voice Dubbing) (குரல் கொடுக்கும் தொழில் நுட்ப வசதி அறிமுகமாகாத அந்தக் காலத்தில், பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக நடிக்க முடிந்தது.

பி. யு. சின்னப்பா, எம். கே. தியாகராஜ பாகவதர்,டி. ஆர். மகாலிங்கம் என அன்று புகழ்பெற்ற நடிகர்கள் யாவரும், வாய்ப்பாட்டில் வல்லவர்கள், கர்நாடக சங்கீதம் நன்கு பயின்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசை வல்லுநர்களான எம். எம். தண்டபாணி தேசிகர்,ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி போன்றோரும் தமிழ்த் திரையுலகில் பிரகாசித்தனர்.

இரவல் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின், பின்னணி பாடகர்கள் வர, இசை வல்லுனர்கள், நடிகர்களாக ஜொலித்த காலம் முடிவுற்றது.

இப்போது, பல கர்நாடக இசை வல்லுநர்கள், வெற்றிகரமான பின்னணி பாடகர்களாக வளர்ந்து வருகிறார்கள். இதை பற்றி தனியாக ஒரு பதிவில் பார்க்கலாம்.

History Of Film வசனங்களின் வளர்ச்சி

திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர(character) பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது.

1940 ஆம் ஆண்டில் வெளிவந்த மணிமேகலை திரைப்படத்திற்கு சோமையாஜுலுவும், 1943 ஆம் ஆண்டு வந்த சிவகவி திரைப்படத்திற்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள்.

இந்தப் படங்களில் இலக்கியத் தமிழ்க் கொண்ட சொல்லாடல் முக்கிய இடம் பெற்று, வசனகர்த்தாக்கள் நட்சத்திர அந்தஸ்த்துப் பெற்றனர். திரைப்படத்தில், வார்த்தை ஜாலங்களின் ஆதிக்கத்தை இது மேலும் வலுப்படுத்தியது. மாறாக பிம்பங்கள்(Scenes) மூலம் கதையை நகர்த்தும் திறமை வளரவில்லை.

இன்றளவும் பாத்திரப் பேச்சு, தமிழ் திரைப்படங்களில் ஓங்கியிருப்பது திரைப்படத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றது  என்றுதான் சொல்லவேண்டும். தமிழின் தொன்மை, இனிமை, தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு ஆகியன, உரையாடல் மற்றும் பாடல்களாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடம் பெற்றன.

1953 ஆம் ஆண்டு வெளிவந்த ஔவையார் திரைப்படம் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. History Of Film

இந்திய திரைப்பட வரலாற்றில், தனியிடம் பெற்ற விவரணப் படம்(Biography), ஏ. கே. செட்டியார் தயாரித்து 1940 இல் வெளிவந்த ‘மகாத்மா காந்தி’. ஏ.கே.செட்டியார் தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்து, பல்லாயிரக்கணக்கான அடிகள்(Film Role)  கொண்ட இந்தப் படத்தைத் தயாரித்தார்.

காணாமல் போனதாகக் கருதப்பட்ட, 1953 இல் ஹாலிவூட்டில் எடுக்கப்பட்ட இதன் ஆங்கிலப் படியானது, டாக்டர் வெங்கடாசலபதி என்பவரால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, ஜனவரி 19, 2006 இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது.[1]

தமிழ்நாட்டில் விவரணப் படம் எடுப்பது, சலனப்படக் காலத்திலேயே தோன்றியிருந்தாலும், அதன் வளர்ச்சி குன்றியேயிருந்தது.

விவரணப் படங்களுக்கென்றே உருவான 16 மில்லி மீட்டர் காமிராவும், புரொஜக்டரும் தமிழ்நாட்டில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் இந்திய அரசின் திரைப்படப் பிரிவு பல சீரிய விவரணப் படங்களை தயாரித்தது.

இவை மொழி மாற்றம் செய்யப்பட்டு, தமிழக திரையரங்குகளில் காட்டப்பட்டன. ஆனால் திரையரங்க உரிமையாளர்களின் பொறுப்பின்மையாலும், விளம்பரப் படங்களின் ஆக்கிரமிப்பாலும், விவரணப்படங்களைக் கதைகள் கொண்டப் படங்களுடன் திரையரங்குகளில் திரையிடும் வழக்கம் தற்போது மறைந்து விட்டது.

இந்த நிலையில், அண்மையில் விவரணப் படங்கள் திரையரங்குகளில் கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. விவரணப் பட இயக்கம், தமிழ்நாட்டில் குன்றிபோனதற்கு ஒரு முக்கிய காரணம்,

மக்களிடையே திரைப்பட ரசனை வளராமல் போனதும், டாக்குமென்டரி என்ற திரைப்பட வகைக்கான ஆர்வலர்கள் உருவாகாததும்தான். திரைப்படம் என்றவுடன் கேளிக்கைத் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எண்ணும் நோக்குதான், இந்த வளர்ச்சியை தடுத்து விட்டது.

ஆயினும் ‘ஒரு கண் ஒரு பார்வை’ (1998) விவரணப் படமெடுத்த ஞான. ராஜசேகரன், ‘அதிசயம் அற்புதம்’ (1997) எடுத்த சிவகுமார் போன்றோரை விவரணப்பட இயக்குநர்களாக குறிப்பிட வேண்டும். 1990இல் சலம் பென்னுர்கர் எடுத்த ‘குட்டி ஜப்பானின் குழந்தைகள்’, விருதுகள் பெற்ற ஒரு விவரணப்படம்.

NEXT – PART 2

 

Leave a Comment