Saturday, November 30, 2024
Homeசமையல்சமையலில் அப்பாடக்கராக இருந்தாலும் செய்யக்கூடாத விஷயங்கள் மற்றும் செய்ய வேண்டியன | Tips

சமையலில் அப்பாடக்கராக இருந்தாலும் செய்யக்கூடாத விஷயங்கள் மற்றும் செய்ய வேண்டியன | Tips

நாம் என்னதான் சமையலில் பெரிய அப்பாடக்கராக இருந்தாலும் சிலஅடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமானது..

சமையலில் செய்யக்கூடாதவை

  • ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
  • காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
  • மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
  • கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
  • காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
  • சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
  • தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
  • பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
  • பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
  • தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
  • குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
  • குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது



செய்ய வேண்டியவை

  • மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
  • புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
  • ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
  • போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
  • குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
  • பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
  • குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
  • வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
  • கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
  • வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

 

Next

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments