Saturday, November 30, 2024
Homeமிஸ்டரி வேர்ல்டுஆப்கானிஸ்தான் அதிர்வு - பூக்களம் முதல் போர்களம் வரை

ஆப்கானிஸ்தான் அதிர்வு – பூக்களம் முதல் போர்களம் வரை

 

 தாலிபான்கள் யார்…..?

முதலில் ஒரு அர்த்தத்தை தெரிந்துகொண்டு உள்ளே செல்வோம்.

‘தாலிபான் என்பதற்கு பஸ்தோ மொழியில் மாணவர்கள் அர்த்தம்”

1994-ல் தான் இந்த இயக்கம் முதலில் தொடங்கப்பட்டது. உருவாகிய இடம் ஆப்கானிஸ்தானில்  உள்ள காந்தகார் நகர்.

பலப்படங்களில் நாம் தீவிரவாத இயக்கம் பற்றி பார்த்தும் கேள்வி பட்டும் இருக்கிறோம். ஆனால் இன்று கண்முன் நடக்கும்போது நெஞ்சம் பதறத்தான் செய்கிறது.

என்ன பிரச்னை…?ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது. சற்று புரியும்படி பார்ப்போம் .

ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாக இருந்த சோவியத் படைகள் அந்த நாட்டிலிருந்து வெளியேறிய பின்…ஆட்சி கவிழ்ந்தது.

அப்போது அந்த நாட்டில் அதிகாரத்தை பிடிக்க உள்நாட்டு போரில் பல படைகள் முற்பட்டன அதில் ஒரு படைதான் “தாலிபான்கள்”

சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விரட்ட 1980 களில் “முஜாகிதீன்” என்ற தீவிரவாத அமைப்பை அமெரிக்கா உருவாக்கியது. அந்த அமைப்பில் இருந்தவர்களையே தாலிபான் ஈர்த்தது.

 

பல ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய இயக்கமாக மாறியது தாலிபான் அமைப்பு 1996-ல் முழு ஆப்கானிஸ்தானையும்   தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.      “இஸ்லாமிய எமிரேட்” எனும் பெயரில் ஆட்சியை தொடங்கியது. ஆ னால் 2001-ல் ஆட்சி கவிழ்ந்து  போனது.

2001 – செப்டெம்பர் செப்டம்பர் 11-ல் . அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் பகுதிகளில் தீவிரவாதிகள் சுமார்    நடத்திய தாக்குதலில் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டனர்

இந்த தாக்குதலை நடத்தியது அல்கொய்தா மற்றும் ஒசாமா பின் லேடன் என்று அமெரிக்கா நம்பியது. இதனால்  பின் லேடன்னை தங்களிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச தலைவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு  தந்தனர்

.ஆனால்  பின் லேடன்னை  ஒப்படைக்க மறுத்துவிட்டனர். இதனால் கோபப்பட்ட அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி தாலிபான்களை அதிகாரத்தில் இருந்தது தூக்கியது .

ஆப்கானிஸ்தானை மாற்றி ஜனநாயக ஆட்சி தருவதாக அமெரிக்கா வாக்குறுதி அளித்தது. ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய அரசு நியமிக்கப்பட்டது.

அமெரிக்க பல நாடுகளை இதுக்காக ஒன்றாக இணைத்து கொண்டது. ஆனால் தாலிபான்கள் ஆட்சியில் இல்லையென்றாலும் ஆப்கானிஸ்தானுக்கு துணையாக நின்ற பல சர்வதேச படைகள் மீது  தாக்குதல்  நடத்திக்கொண்டு இருந்த்தது

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக போர் நடந்த நிலையில் 2019-ல் அமெரிக்காவும் தாலிபானும் பேச்சுவார்த்தைக்கு தயாராகினர்.

இதன்படி அமெரிக்கா தன்  படைகளை திரும்ப பெற்றுக்கொள்ளவும். ஆப்கானிஸ்தானில் புதிய அரசிடம் அதிகாரத்தை ஒப்படைக்கவும் முன்வந்தது. இதில் இருந்து தொடங்கிய பிரச்சனைதான் இன்று நாம் காண்பது.

செப்டம்பர் 11 க்குள் தனது படைகளை பெற்றுக்கொள்கிறோம் என்று அமெரிக்க உறுதி அளித்தது . அமெரிக்கா விலகினாலும் ஆப்கானிஸ்தானை காக்கும் பொறுப்பு  அந்நாட்டு அரசுக்கு உள்ளது என அமெரிக்கா அறிவித்தது. தாலிபான்கள் இனி ஒன்றும் செய்யமுடியாது என கூறியது.

ஆனால் அமெரிக்கா  மற்றும் உலகநாடுகளே அதிர்ந்துபோகும் அளவிற்கு ஒரு நிகழ்வுதான் நடந்துவருகிறது .

20 ஆண்டுகளாக அமெரிக்காவால் பாதுகாக்கப்பட்ட ஆப்கானிஸ்தானை 20 நாட்களில் அதாவது

ஆகஸ்ட் 15-ல்  தாலிபான்கள் தங்கள் வசமாக்கி தனது அதிகாரத்தை நிலைநாட்டியது.

தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் கானி தப்பி சென்றார்.உடனே ஆப்கானிஸ்தானில் போர் முடித்து விட்டதாக தாலிபான்கள் அறிவித்தனர்.

இந்த அதிகார நிகழ்வில் பல மனித அவலங்கள் நடந்தேறியுள்ளன. மனித தலைகள் துண்டிக்கப்பட்டன . பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். சிலர் நாட்டைவிட்டே துரத்தப்பட்டனர். இனி ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தாலிபான்களின் அமைப்பின் இணை நிறுவனரான அப்துல் காணி பராத்தார் பதவி ஏற்பார் ஏன் எதிர்பார்க்க படுகிறது.

So What Next …?

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments