இவ்வுலகில் விடைகிடைக்காத விடயங்கள் கோடிகணக்கில் கொட்டிக்கிடக்கிறது. அதில் ஒன்று நிலவு உண்மையாகவே உருவானதா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என்ற ஒற்றை கேள்வி. சமீபக்காலமாக இதை பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும் நடந்துகொண்டு இருக்கின்றன.
பூமி உருவாகி பல வருடங்களுக்கு நிலவு என்ற ஒன்றே இல்லையென்றும் ஏலியன்கள்தான் நிலவை உருவாக்கின என்றும், இன்றும்கூட ஏலியன்கள் நிலவுக்கு வந்துசெல்வதாக சில விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி தேடுதல் நடத்தினால் சரியா? தவறா? என்ற கேள்விக்கு பதில் கேள்விகுறியாகதான் இருக்கிறது. சூரியனில் இருந்து வெடித்து வடிவம் பெற்ற ஒரு கோள் பூமி. ஒவ்வொரு கோளுக்கும் துணைக்கோள் ஒன்று உள்ளது. அந்த கோள்களினல் இருப்பதுபோலவே 80% வடிவமைப்பு துணைகோளுக்கு இருக்கும். ஆனால் பூமியின் துணைக்கோள் என எடுத்துகொண்டால் அது நிலவு மட்டுமே அது பூமிக்கு நேர்மாறாக உள்ளது எப்படி? என ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.!
ஏலியன்கள் தங்களுக்காக உருவாக்கிய ஒரு இடம் காலபோக்கில் உருமாற்றம் அடைந்து இப்பொழுது நாம் காணும் நிலவாக மாறி உள்ளது என்பது ஒரு வாதம். அவற்றுள் இன்னும் ஏலியன்கள் இருப்பதாகவும். நிலவு ஒரு Spaceship தான் என்பது இன்னொருவாதம்.! நிலவு இரவு நேரத்தில் அதிக குளிர்ச்சி தருவது ஏன் என ஒரு கேள்வி எழுப்பினால் பதில் ஒன்றாகத்தான் இருக்கும் நிலவிலன் குளிரை சூரிய வெப்பம் தடுப்பதால் மட்டுமே இரவு நேரத்தில் குளிர்காற்றை நம்மால் உணர முடிகிறது.
ஒரு வேளை நிலவே இல்லையெனில் நமக்கு குளிர் தெரியாது எனவும் பூமி அதிக வெப்பமாகி வெடிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறுகின்றனர். (இதெல்லாம் நம்பலாமா? வேணாமா?) மேலும் நிலவு போல் அண்டத்தில் பல இருப்பதாகவும் அவை அனைத்தும் ஏலியன்களின் இருப்பிடங்கள் என்றும் சொல்கின்றனர்.! இதற்க்கு விடை ஏலியன்கள் வந்து சொன்னால்தான் கிடைக்கும் அல்லது TIME Travel செய்து அமீபா பிறந்த காலகட்டத்திற்கு சென்றால் விடை கிடைக்கும். (அப்போ நிலவுல பாட்டி வடை சுட்டது பொய்யா?)