Hoolywood Movie Review : The Call | தி கால்-விமர்சனம் | Hollywood Movie Review

இன்னைக்கு நம்ம Review பண்ணபோற படம்- தி கால்(the call)-2013-ல ஒரு sheet Edge Thriller-ஆக வெளியான படம். வழக்கமாவே ஹெல்லா பெர்ரி படங்கள் ரசிகர்களுக்கு வேறமாதிரியான ஒரு Treat இருக்கும். இந்த படமும் அப்படிதான்.

கதை-

ஜோர்டன் என்கிற பெண் 911-ல் வேலை பார்க்கிறாள்..(நம்ம ஊரு 1௦௦ மாதிரி) ஆபத்து என call செய்பவர்களுக்கு உதவி செய்யும் வேலை.ஒரு நாள் ஒரு call வர அதில் ஒரு பெண் தன்னை ஒருவன் கொலைசெய்ய வருகிறான்.காப்பாற்றுங்கள் என்கிறாள்.ஜோர்டன்னும் போலீஸ்க்கு தகவல் அனுப்பி காப்பாற்ற முயல்கிறாள்.ஆனால் அது முடியாமல் போக அந்த பெண் கொலைசெய்யப்படுகிறாள்.(இங்கிருந்து படம் ஸ்டார்ட் ஆகுது.) ஒரு 6 மாசத்துக்கு அப்பறம்.  ஜோர்டன் trainer-ஆக இருக்கிறார். அந்நேரம் ஒரு call வருகிறது. ஒரு பெண் தன்னையாரோ கடத்திவிட்டதாகவும்.தான் ஒரு காருக்குள் இருப்பதாகவும் சொல்கிறாள். அந்த பெண்ணிடம் பேச ஆரம்பிக்கிறாள்  ஜோர்டன். அதற்க்கு பின் அந்த பெண்ணை எப்படி காப்பற்றினாள் என்பதே முழு படமும்.!

candy அப்டிங்கற கதாபாத்திரத்தில நடிச்ச அந்த பெண். சும்மா சொல்ல கூடாது அவ்ளோ அழகு. முதல் 1௦ நிமிடத்துலையே படம் ஆரம்பமாகி கடைசி வரைக்கும் அவ்ளோ வேகத்துல போகுது திரைக்கதை. psyco-வாக நடிச்ச மைக்கல் செம சாய்ஸ்.

கிளைமாக்ஸ் ட்விஸ்ட் மட்டும்தான் படத்த முடிக்க உதவுது.மத்தபடி வேறு கிளைமாக்ஸ் இதுல யோசிக்கவே முடியாதுங்கறது இதுல மிக பெரிய plus. ஒரு பரபரப்பான திரைப்படம் பார்க்க விரும்புபபவர்கள் நிச்சயம் இப்படத்தை பார்க்கலாம். i am already done-ங்கற இந்த வசனம் வரும் ஓவ்வொரு இடம் ஒரு ட்விஸ்ட் open ஆயிட்டே இருக்கு.! இந்த படம் தமிழ்ல எடுத்தா த்ரிஷா நடிக்கலாம்.அவ்ளோ Perfect-ஆ இருக்கும். அண்ட் இதுல வர சில Cemara angle-s. துப்பாக்கி போன்ற படங்கள்லயும் use பண்ணி இருக்காங்க.! மறக்காம ஒரு தடவையாவது பாக்கலாம். நன்றி

Leave a Comment Cancel Reply