TamilRockers சினிமா தொழிற்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும். மிக பெரிய அசுரவளர்ச்சி என்பது தவறான பாதையை கூட காட்டும். அப்படி ஒரு அசுர வளர்ச்சிதான் இந்த தமிழ் ராக்கர்ஸ்.
கடந்த 10 வருடங்களாகதான் இதன் வளர்ச்சி கட்டுகடங்காமல் சென்றுகொண்டு இருக்கிறது. முன்பெல்லாம் திருட்டு VCD வந்துவிட கூடாது என்பதற்காக. படத்தின் ஆடியோ caste-ல் இலவச பொருட்கள்,நாணயம் போன்றவை வழங்கப்படும் என ஒரு விளம்பரம் ஒரிஜினல் ஆடியோ caste-ல் இருக்கும்.
முழுபடத்தின் caste-டிலும் கூட. அதனால் திருட்டு vcd என்பதை யாரும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. கீழே காண்பது ஜீன்ஸ் படத்தின் ஆடியோ cd. இதன் ஜீன்ஸ் துணி கவர்காகவே இதன் ஒரிஜினல் cd அதிகம் விற்றது.
ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. யார் இந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின். இது எங்கிருந்து செயல்படுகிறது. எப்படி பணம் சம்பாதிகின்றனர். ஏன் இதை தடுக்கமுடியவில்லை.
போன்ற எண்ணற்ற கேள்விகள் இயல்பாகவே எழுவது உண்டு. முன்பெல்லாம் பயத்தோடு தமிழ்ராக்கர்ஸ் படத்தை வெளியிட்டுக்கொண்டு இருந்தனர்
ஆனால் இன்றோ சவால் விட்டுக்கொண்டு புதுப்படங்களை வெளியிடுகின்றனர். சில படங்கள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பே இதன் பக்கத்தில் வெளியிடுகின்றனர்.
யாரும் எதிர்பாரா ஒரு பதிலில் இருந்து பார்க்கலாம். தமிழ்ராக்கர்ஸ் வளர்ச்சிக்கு பாதி காரணம் cinema தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள்.
ஆம் அதிக டிக்கெட் விலை.டிக்கெட்டை விட தின்பண்டத்தின் விலை(திரையரங்கின் உள்ளே) யார்தான் படம் பார்க்க வருவார்கள்.
தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் என ஒவ்வொருவரும் ஒரு படத்தின் விலையை தனி தனியே முடிவு செய்து ஒரு அவர்கள் ஒரு விலைக்கு தியேட்டர்க்கு தருவார்கள்.
அதிக லாபத்திற்காக சில மொக்கை திரைப்படங்களின் டிக்கெட் விலை கூட அதிகமாக இருக்கும். இதற்க்கு 400 mb-ல் புதுப்படம் 40 ரூபாயில் புதுப்பட dvd. யார்தான் விட்டுதருவார்கள்
.சரி தமிழ் ராக்கர்ஸ் பக்கம் வருவோம். நாம் படத்தை இண்டர்நெட்டிலே பார்பதால் தமிழ்ராக்கர்ஸ் பணம் சம்பாதிப்பது இல்லை. நீங்கள் ஒவ்வொரு படம் கிளிக் செய்யும் போதும் தானாக ஒரு ad page open ஆகும்.
அந்த adsக்கும் அதே போல் torrent File ஆக இருக்கும் படத்தின் Full Size யாருக்கும் தெரியாத ஒரு serverஇல் இருக்கும். அந்த serverக்கும் torrent fileக்கும் இடையில் இருக்கும் ஒரு மூன்றாம்தர website தான் உங்களுக்கு முழு படத்தையும் எடுத்து தரும். இதிலிருந்து அவர்களுக்கு Bitcoin மூலம் பணம் வரும்.
கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 60000 முதல் 5 லட்சம் வரை சம்பாதிகின்றனர். ads கம்பெனிக்கு தமிழ்ராக்கர்ஸ் என்பது மார்க்கெட்டிங் வெப்சைட் மட்டுமே. இன்று அதில் புதுபடங்கள் மட்டுமின்றி பழைய படங்களையும் மெருகேற்றி upload செய்கின்றனர்.
மேலும் புது சாப்ட்வேர்ஸ் கூட அதில் உடனுக்குடனே கிடைக்கிறது. (அநியாயம் பண்றாங்கப்பா) சரி எப்படி படம் இங்கு வெளியாவதற்கு முன்பே முழுபடத்தையும் upload செய்கின்றனர்.?
வெளிநாடுகளில் ஒருநாள் முன்பே திரையரங்கிற்கு படங்கள் சென்றுவிடும். இங்கே இரவு என்றால் அங்கே அடுத்த நாள் பகல் ஆரம்பித்து இருக்கும். படங்கள் வெளியாகி இருக்கும். அதன் விளைவாகத்தான் படங்கள் முன்கூட்டியே upload ஆகின்றன.
அதை தடுக்க QUBE நிறுவனம் சில திட்டங்களை கொண்டு வருகிறது. 2008-ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய websiteதான் tamilrockers. அதன் முதல் பெயர் lyca movies என்றுதான் ஆரம்பிக்கப்பட்டதாம்.
அதாவது இப்பொழுது இருக்கும் lyca productions-தான் முதலில் இந்த website-யை நடத்தி வந்தது ஒரு வதந்தி உண்டு அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
மீண்டும் புதியபெயரில் ஆரம்பிக்கப்பட்டது அதுதான் தமிழ்ராக்கர்ஸ். அன்று முதல் இன்று வரை அதை தடுக்கவே முடியவில்லை. நிச்சயம் முடியாதா..? அவர்களின் பலம் domain’s மட்டுமே. .com-ல் ஆரம்பிக்கப்பட்ட tamilrockers. .net,.gy,.mu,.mv,.su,.sv,.gr என்று சென்று இன்று ஏதேதோ domainகளில் தொடர்ந்துகொண்டு உள்ளது.
அதாவது www.tamilrockers.by. “by” domain-யை நிறுத்தினால் அவன் “PK” என்ற domain வாங்கி செயல்படுத்துவான் அது பாகிஸ்தான் domain நிச்சயம் அந்த அரசாங்கம் நமக்கு உதவி செய்யாது. தமிழ்நாட்டில் tamilrockers தடைசெய்தாலும் IPVPN போன்ற பல softwares பயன்படுத்தி இன்னும் டவுன்லோட்டிங் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இன்று tamilrockersக்கு போட்டியாக பல website-கள் வரதொடங்கிவிட்டன. அதில் MSLBD, TAMILMV, TamilGUN என பல உண்டு. நமது விஷால் அணி தொடர்ந்து போராடிக்கொண்டு இருந்தாலும் தமிழ்ராக்கர்ஸ்-ன் ஆணிவேரை கண்டுபிடிக்கக்கூட முடியவில்லை என்பதே நிஜம்.
சமீபத்தில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது செய்யபட்டார் என ஒரு செய்தி வந்தது. விசாரித்துபார்த்ததில் அது tamilrockers-ன் இன்னொரு சிறிய website-playtamil-ன் அட்மின் அவர்.
இதை மொத்தமாக தடுக்க serverயே தடை செய்யவேண்டும் என சொன்னால் நிச்சயம் முடியாது. அதை கண்டுபிடிக்க முடியுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி. முடிந்தவரை சினிமாகாரர்கள் அவர்களது தவறை திருத்திகொண்டால் மட்டுமே tamilrockers-யை மக்கள் பயன்படுத்தாமல் இருப்பார்கள்.
(எப்படி படத்த முதல் நாளே எடுக்கறாங்கன்னு விஷால் அணி தனி குழு கூட்டி திட்டம் தீட்ராய்ங்கலாம்பா. எல்லா தியேட்டர்ளையும் CC TV வைக்கறாங்களாம். வைங்க வைங்க ஆனா பட்டன் கேமரா முதற்கொண்டு HD-ல வந்துரிச்சி.
பாப்போம்” ஆனால் ஒன்று எங்கள் படத்தை வெளியிட்டால் tamilrockers-யை ஒழிப்போம் என ஆவேசபடுபவர்கள் சற்று யோசித்து பேசவும். “அவங்களும் பதிலுக்கு சவால் உடுவாங்க முதல் நாளே உங்க படத்த HD-ல விடறோம்னு.”
முதலில் விஷாலும் Lyca தான் tamilrockers-ன் தொடக்கபுள்ளி என்று பேசினார். ஆனால் விஷாலின் இரும்புத்திரை படத்தை Lyca productionsதான் வெளியீட்டு உரிமையை வாங்கியது. அதிலிருந்து விஷால் Lyca என்ற சொல்லியே பயன்படுத்தவில்லை. (சரி நமக்கு எதுக்கு வம்பு..நம்ம பேசவந்தது தமிழ்ராக்கர்ஸ் பத்தி)
நீங்களும் தமிழ்ராக்கர்ஸ்ஸில் இருந்தால்?
கிட்டத்தட்ட தமிழ்ராக்கர்ஸ்ஸில் பல லட்சம் பேர் அக்கௌன்ட் வைத்துள்ளனர் என்பதே உண்மை. அந்த லட்சம் பேரில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களும் கலந்துள்ளனர். அக்கௌன்ட் வைத்துள்ள ஒவ்வொருவருக்கும் சில நிபந்தனை உண்டு.
1.இன்னொரு தளத்தில் உள்ள அக்கௌன்ட்டை பதிவிட கூடாது.
2. அட்மின்கள் தவிர மற்றவர் படங்களை பதிவிட கூடாது.
3. அதிக கேள்விகள் கேட்ககூடாது.
தமிழ்ராக்கர்ஸ் ஒரு தனி ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா.? இன்று அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது.!
காரணம் இவர்களின் மார்க்கெட். ஒரு படத்திற்கு இவ்வளவு என ஏற்கனவே வியாபாரம் செய்கின்றனர். அதை திருட்டுத்தனமாக எடுக்க பல வேலைகள் நடக்கின்றன.
கடைசியில் ஏதோ ஒரு இடத்தில் படத்தை HD தரம்கொண்ட கேமராவில் படம் பிடித்து தமிழ்ராக்கர்ஸ்க்கு எடுத்துவரப்பட்டு பதிவிறக்கம் செய்யப்படுகிறது.! ஒரு படத்தின் டவுன்லோட்க்கு 700 mb க்கு 25$ என வைத்துகொள்ளலாம்.
ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 5000 பேர் முதல் 60000 பேர் வரை பதிவிறக்கம் (download) செய்கின்றனர். அப்படி என்றால் மாதம் அவர்களின் வருமானம்.!
அதை சாத்திய படுவது நாமேதான்.! உங்கள் ஊரில் ஒவ்வொரு தெருவிலும் ஒருவராவது தமிழ்ராக்கர்ஸ்ஸில் அக்கௌன்ட் வைத்துள்ளனர் என்பதே இங்கு நிதர்சனம். அக்கௌன்ட் ஆரம்பிக்கும் ஒருவர் அவர்கள் படங்களை அந்த தளத்திற்குள் Upload செய்ய permission கொடுக்க அவர்கள் 2000 போஸ்ட் வரை பதிவிட வேண்டுமாம்.
அதற்க்கு பின் promotion.(இது கம்பெனியா)இவர்களை ஒழிக்க பல நடவடிக்கைகள் எடுக்க படுகிறது. ஆனால் ஏனோ இன்றுவரை முடியவில்லை. என்னதான் domain மாற்றினாலும் ஒருகட்டத்தில் மாட்டிதான் ஆகவேண்டும்.! பாப்போம்.இனி என்ன?
முன்பெல்லாம் vcd,dvd பரவலாக இருந்து இன்று இன்டர்நெட் வரை சினிமாவின் அழிவு தொடர்ந்துகொண்டு உள்ளது. நல்ல படங்கள் வந்தால் மட்டுமே திரையரங்குகளில் இனி கூட்டம் இருக்கும். சென்ற 5 வருடங்களில் மட்டும் 355 படங்கள் வெளியாகாமல் நின்றுவிட்டதாம்.
OTT தளத்தில் வரும் படங்கள் கூட அடுத்த சில மணி நேரத்தில் இதில் வந்துவிடுகிறது.! Telegram Account கூட இருக்குதான்பா
இனி Tamilrockers என்னதான் ஆகிறது என்று பொறுத்திருந்து பார்போம்.