Saturday, November 30, 2024
Homeபுத்தகம்Ponniyin Selvan | பொன்னியின் செல்வனின் பயணம்

Ponniyin Selvan | பொன்னியின் செல்வனின் பயணம்

பிரம்மாண்ட பயணம்(Ponniyin Selvan)

(Ponniyin Selvan Story)தஞ்சாவூர் பெரியகோவில் எப்படி ஒரு வரலாற்று பிம்பமாக திகழ்கிறதோ அதே போல்தான் ராஜராஜ சோழனின் கதையும்.

ராஜராஜ சோழனின் பரம்பரையின் சில நிகழ்வுகளை ஒரு பிரம்மாண்ட புத்தகமாக கொண்டு வெளியானது பொன்னியின் செல்வன்.

ponniyin selvan book

அக்காலத்தில் சுந்தரசோழன் என்ற மன்னனின் ஆட்சி உலகம் முழுக்க பேசப்பட்டு வந்தது.

ஒருநாள் சுந்தரசோழன் படுத்த படுக்கையாகிவிட. தனக்குப்பின் ஆட்சி யார் கைக்கு போகவேண்டும் என யோசித்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு மூன்று பிள்ளைகள். ஆதித்திய கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன் (ராஜ ராஜ சோழன்) இந்த மூன்று பேரும் ஒவ்வொரு நகரை ஆண்டுகொண்டு வருகிறார்கள்.

ponniyin selvan

இவர்களது சொந்தக்காரரான மதுராந்தக சோழன் சுந்தரசோழனுக்கு பின் ஆட்சியை தான் பிடிக்க வேண்டும் என எண்ணுகிறார்.

அச்சமயத்தில் நந்தினி என்ற இளவரசி வீரபாண்டியன் என்ற மன்னனை காதலிக்க, ஒருநாள் ஆதித்திய கரிகாலன்  வீரபாண்டியனை கொள்வதற்காக துரத்துகிறான்.(இருவரும் எதிரிகள்)

அதை தடுக்க வந்த  நந்தினியை பார்த்து அவள் அழகில் மயங்கி விடுகிறான் கரிகாலன்.

ponniyin selvan

நந்தினியை அடைந்தே தீரவேண்டும் என எண்ணிய ஆதித்திய கரிகாலன் வீரபாண்டியனது தலையை வெட்டி எடுத்து சென்று விடுகிறான்.

இதனால் கோபமுற்ற நந்தினி ஆதித்திய கரிகாலனை கொல்ல வேண்டும் என சபதம் எடுக்கிறாள்.இந்த விஷயம் கரிகாலனது நண்பனான வந்தியதேவனுக்கு தெரிந்து விடுகிறது.

இதை கரிகாலனிடம் சொல்லும் வந்தியதேவனிடம் நான் உனக்கு இரண்டு ஓலைகளை தருகிறேன் அதை நீ குந்தவையிடமும், அருள்மொழிவர்மனிடமும் தர வேண்டும் என சொல்கிறான் கரிகாலன்.

ஓலையை பெற்றுக்கொண்டு செல்லும் வந்தியதேவனிடம் இருந்து ஆரம்பிக்கிறது இதன் கதை.ஒரு கட்டத்தில் ஆதித்திய கரிகாலன் இறந்துவிட பின் யார் ஆட்சியை பிடித்தார்கள் என்பதே மீதமுள்ள கதை. நான் சொன்னது கொஞ்சம்தான்.

ponniyin selvan

கிட்டத்தட்ட 8 பாகங்கள் கொண்ட இந்த கதை படிப்பவரை ஒரு பிரம்மாண்ட உலகத்திற்கும் காலபயணம் செய்த உணர்வையும் முழுதாக தரக்கூடியது. தஞ்சாவூர் எப்படி இருந்தது. அன்றைய அரசர்களின் அரண்மனை தோற்றம், மெய்சிலிர்க்க வைக்கும் வசன உச்சரிப்புகள், குகை வடிவங்கள், சிலிர்க்க வைக்கும் கோட்டைகளின் கதவு பற்றிய வர்ணனைகள் என இன்றுவரை அழிக்க முடியாத ஒரு புத்தகமாக இருக்கிறது பொன்னியின் செல்வன்.

Ponniyin Selvan அடுத்து என்ன நடக்கபோகிறது என யாராலும் யூகிக்க முடியாத கதை. நிஜத்தையும் கற்பனையையும் ஒருசேர கோர்த்து தந்திருக்கிறார் எழுத்தாளர் “கல்கி”

விரைவில் இந்த தளத்தில் புத்தகங்களின் Download வசதி தரப்படும்

இதன் விலை Rs : 975/- Buy Book

மேலும் புத்தகங்கள் பற்றிய தகவலுக்கு  : புத்தகம் பேசுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments