Saturday, November 30, 2024
Homeசினிமாசினிமா! | A Untold Story of Tamil Cinema | Part 4

சினிமா! | A Untold Story of Tamil Cinema | Part 4

90’s Tamil Movie-Part 4

90’s Tamil movie களின் காலகட்டத்தில் தமிழ் சினிமா வேறு ஒரு களத்திற்கு செல்ல முற்பட்டது எனலாம்.

பழிவாங்கல், பாம்பு சேட்டைகள் போன்ற அபத்தங்கலான கதைகளுக்கு நடுவில் அதுவரை பார்க்காத கோணத்தில் படங்கள் வெளியானது.

idhayam

இயக்குனர் மணிரத்னம் எடுத்த பகல்நிலவு பட்டிதொட்டி எங்கும் முரளி என்ற நாயகனை கொண்டு சேர்த்தது எனலாம்.

அதற்க்கு பின் வந்த சில படங்கள் பகல்நிலவு சாயலில் இருந்தது இங்கே குறிப்பிடத்தகுந்த ஒன்று. இணைந்த கைகள் படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. இடைவேளை காட்சிக்காக மட்டுமே அரங்கு நிரைந்த கூட்டம் இருந்தது அன்று.

inaintha kaigal

ராம்கி, அருண்பாண்டியன் போன்றோர் அதற்க்கு பின் முன்னணி கதாநாயகர்கள் ஆனது வேறு கதை. 1991, 92 வருடங்களில் பல முயற்சிகள் அரங்கேறின. Action படங்களுக்கான முக்கியத்துவம் குறைந்து காதல் கொண்ட படங்கள் வெளிவரதொடங்கின.

அதற்க்கு முதல்படி “இதயம்” திரைப்படம். கடைசிவரை காதலை சொல்லாமலையே செல்லும் கதை. ரசிகர்களின் ஆழ்மனதை பதம் பார்த்த திரைப்படம் சிலர் அழுததாககூட சொல்கிறார்கள்.

இதைதொடர்ந்து ரஜினிகாந்த், கமல் படங்கள் மசாலாவை கொஞ்சம் குறைத்துகொண்டன. செயற்கையான காட்சிகள் மக்களை ஐயோ போட வைத்தது. இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என கேட்கும் அளவிற்கு புது புது கதைகளுடன் இயக்குனர்கள் களம் இறங்கினர்.

90’s Tamil movie ல் சில முன்னணி இயக்குனர்கள் தனது பாணியை மாற்ற தொடங்கிய நேரம். இயக்குனர் S.A சந்திரசேகர் தன் மகன் விஜயை களம் இறக்கினார்.

ஆனால் மற்ற நடிகர்களுக்கு இவரால் ஈடுகொடுக்க முடியவில்லை படம் படுதோல்வி. மீடியா விஜயை திட்டி தீர்த்தது.

  • முதன் முதலில் டூப் போடாமல் சண்டைகாட்சியில் நடித்த நடிகர்  விஜய்”

90

கருப்பு ரோஜா, ராஜஸ்தான், சூரியன் போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற படங்கள். பிரபுதேவா போன்ற நடிகர்கள் உள்ளே நுழைய ஆரம்பித்தனர்.

மசாலா தூக்கலான கதைகள் மூட்டை கட்டி குழி தோண்டி புதைக்கப்பட்டன.

பின் (விஜய், அஜித், பிரபுதேவா, மாதவன், கார்த்திக், அர்ஜுன்,) இவர்களின் ஆட்சி  சினிமாவில் ஆரம்பமானது.

அஜித் நடித்த முதல் படமே மிகபெரிய ஹிட். அந்நேரத்தில் விஜய் தனக்கான இடத்தை பிடிக்க முயன்றுகொண்டு இருந்தார். செண்டிமெண்ட் தூக்கலான கதைகள் கார்த்திக்கை மொய்த்தன.

90's Tamil movie

விஜயகந்த பாணியில் அர்ஜுன் முழுதாக களம் இறங்கினார். தனக்கே உண்டான ஸ்டைல்களுடன் பிரபுதேவா சினிமாவில் நுழைந்தார்.

முன்னணி நடிகர்கள் பலர் திணற ஆரம்பித்தனர்.

To be Continue @ Next Part

இதன் முந்திய பாகங்கள் படிக்க | Part 1 | Part 2 | Part 3 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments