Friday, November 15, 2024
Homeமிஸ்டரி வேர்ல்டுVampire is Still Alive? காட்டேரிகள் அழிவதில்லை!

Vampire is Still Alive? காட்டேரிகள் அழிவதில்லை!

Vampire Dark night Secret 

18 மற்றும் 19 ம் நூற்றாண்டில் பிரெஞ்சு மக்களால் அதிகம் நம்பப்பட்ட ஒரு விஷயம் Vampire (ரத்த காட்டேரிகள்) என்னும் மனிதர்கள்.

அதென்ன Vampire கள். இதை பற்றிய படங்கள், புத்தகங்கள் அதிகளவில் வெளிவந்துள்ளன. 18 ஆம் நூற்றாண்டில் மனிதர்களுக்கு பில்லி சூனியம் போன்றவைகள் வைக்கும் சிலர் இவ்வுலகம் தங்கள்வசம் வரவேண்டும் என எண்ணி தங்களை தாங்களே பலிகொடுத்து இந்த இனத்தை உருவாக்கினர்.

VAMPIRES

காட்டேரிகளின் மூதாதையர்கள் இவர்கள் என சொல்வதுண்டு. அடுத்த சில நாட்களில் இறந்துபோன அந்த சூனியக்காரர்கள் காட்டேரிகளாக மீண்டும் பிறந்தனர். பகல் நேரத்தில் குகை அல்லது கல்லறைக்குள் வாழும் இவர்கள் இரவு நேரத்தில் உலவி திரிந்ததாக சொல்லப்படுவதுண்டு.

எந்த வித உணவுகளும் இன்றி நாள்கணக்கில் வாழும் இவர்களின் ஒரே உணவு ரத்தம் மட்டுமே! மனிதர்களின் ரத்தம் மட்டும் இன்றி மிருகங்களின் இரத்தங்களையும் இவர்கள் உணவாக எடுத்துகொள்வார்கள்.

ஆனால் இவை எதுவும் உண்மை அல்ல கட்டுகதைகள் என கூறினாலும் ஒரு நாடே இவை உண்மை என குரல் எழுப்புகிறது.

VAMPIRE

மேலும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இவர்களின் இனம் சாபத்தால் அழிந்துவிட்டது என ஒரு கூற்று உண்டு.

ஆனாலும் இவர்களுக்கு  இறப்பு என்பதே இல்லை என ப்ரென்ச் மக்கள் நம்புகின்றனர்.

1819 ல் ஜான் பெலிடோரி என்பவர் VAMPIRE பற்றி எழுதிய ஒரு புத்தகம்விற்பனையில் சாதனை படைத்தது. அவர் காலகட்டம் வரை காட்டேரிகள் இனம்  உயிரோடுதான் இருந்தது என சில மேதாவிகள் சொல்கிறார்கள்.

நீண்ட கூறிய பற்கள், பறக்கும் இறக்கைகள் கொண்ட இவர்கள் பெண்களைதான் அதிகம் குறி வைப்பார்கள் என்ற பயம் இன்றும் உலவி கொண்டு உள்ளது. (அது டிராகுலாப்பா)

ஆனால் VAMPIRE என்று எதுவும் இல்லை மக்களை கட்டுக்குள் கொண்டுவர கட்டப்பட்ட கதைகள்தான் இது என சில ஆய்வாளர்கள் அடித்து சொல்கிறார்கள். ஆனால் இன்றும் பல தீவுகளில் இவர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது.

ஒரு தடவையாவது அவங்க எப்படி பறக்கராங்கனு பாக்கணும்.!

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவலுக்கு  Breaking Mystery

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments