explain psycho Kings வரலாற்றின் வெற்றி பக்கங்களை ஒருமுறை திருப்பி பார்த்தால்..பல பல மன்னர்கள் தங்களுக்காகவும், தங்கள் நாட்டுக்காகவும் பல நாடுகளின் மீது போர் தொடுத்து வெற்றிகண்டு தன் பெயரை நிலைநாட்டினர்.
ஆனால் சிலரோ மூர்க்க தனத்தாலும் நாடுகளின் மீது உள்ள மோகத்தாலும் தங்களை மறந்து தங்கள் நாட்டு மக்களையே கொன்று தன கோவத்தை தீர்த்து கொண்டனர். அவர்கள் பெயர்கள் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்துள்ளது அப்படிப்பட்ட கொடூர குணத்தால் பெயர் பெற்ற சிலரை பாப்போம்.
விளாட் டெப்ஸ்
(கார்டூனிஸ்ட் மதன் பாணியில் சென்சார் கட்- இதயம் பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம்)
சாடிஸ்ட் கிங் என்ற பட்டத்தை பெற்ற வரலாற்றின் கொடூரமான தண்டனை வழங்கும் அரசராக இவர் அறியப்படுகிறார்.
மனித வரலாற்றில் கொடூரமான சம்பவம் என்னவென்றால், அவர் 20,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தோலுரித்து, வேகவைத்து, கழுத்தை நெரித்து, தூக்கிலிட்டு, உயிருடன் புதைத்து, ஆணியடித்து என பல கொடூரமான வழிகளில் கொன்று குவித்தார்
. இவரது ஆட்சிக்கலாம் ரோமானியாவின் சோதனைக்காலம் என்று கூறப்பட்டது. அந்த அளவிற்கு தன்னை மக்கள் முன் முன்னிறுத்தி கொண்டார். கடைசி காலத்தில் துரோகத்தால் மடிந்தவர்கள் லிஸ்ட்டில் இவரும் அடக்கம்.! இவரை பற்றி புத்தகம் கூட உண்டு.
ரஷ்யாவின் ஐவன் IV
இவர் ஒரு ஈவில் கிங் என்று அழைக்கப்படுகிறார் (அடைமொழி எங்கிருந்துதான் வைக்கிறார்களோ)
ஏனெனில் இவர் மக்களை துன்புறுத்துவதை இவர் மிகவும் விரும்பினார். மேலும் ஒவ்வொரு நாளும், சுமார் 500 முதல் 1000 பேர் வரை அவரது படைகளால் அவரது நீதிமன்றத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
அதில் பாதி பேர் சொந்த நாட்டு மக்கள். மீதி பேர் வேறு நாட்டு படைகளை சேர்ந்தவர்கள்.
இன்றும் உலகின் மோசமான அரசர்களில் இவரின் பெயர் தவறாமல் இடம்பெறும்.
ஹிட்லர்
சுயநலமும், ஆணவமும் ஒருசேர நிறைந்த எகிப்தின் மிக மோசமான சர்வாதிகாரியாக இவர் இருந்தார். எகிப்திய மக்கள் அனைவரும் அஞ்சி நடுங்கிய ஒரே மன்னர் இவர்தான்.
அவர் தன்னை கடவுள் என்று அறிவித்து, அவரை ஒரு கடவுளாக நம்பவும் வணங்கவும் மக்களை கட்டாயப்படுத்தினார், அதற்கு மறுத்த மக்களுக்கு அவர் மிகவும் மோசமான மற்றும் பரிதாபகரமான தண்டனைகளை வழங்கினார்.
தன் இறப்பிருக்கு பின்னும் இந்த நாடு முழுக்க எனது ஆட்சிதான் இருக்கும். எனது ஆன்மா உங்களை வழிநடத்தும் என அதிகார கூச்சல் இடுவாராம் கடைசி காலத்தில்.
புராணக்கதைகளின் படி, அவரது மரணத்திற்கு பிறகு பஞ்சபூதங்கள் அவர் உடலை ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் அனைவரும் அவரது உடலை நாட்டிகுற்குள் கூட வைக்க கூடாது என குரல் எழுப்பினர்.
இதன் விளைவாக, அவரது இறந்த உடல் இன்னும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மாசிடோனின் அலெக்சாண்டர்
எந்தவொரு சர்வாதிகாரியையும் விட அதிக அரசியல் அதிகாரத்தை மோசமாக அவர் பயன்படுத்தியதால் அவர் வரலாற்றில் மிகவும் ஆபத்தான மற்றும் கொடூரமான ஆட்சியாளராக கருதப்படுகிறார். 1920 முதல் 1953 வரை இவரது ஆட்சி காலம்
சின்ன தவறு செய்தாலும் மரண தண்டனை….அதிகாரத்தால் மக்களில் வாழ்வாதாரத்தை சுரண்டி தனக்கென வைத்துகொண்டவர்..! எதிரி நாட்டு மக்களை சிறைபிடித்து கொடூரமான கொலைகளையும் செய்தவர்.
தனது 29 ஆண்டுகால ஆட்சியில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்ததற்கு காரணமானார்.!
பெல்ஜியத்தின் லியோபோல்ட் II
இவர் பெல்ஜியத்தின் அரசராக இருந்தார், காங்கோ சுதந்திர அரசை மிருகத்தனமாக சுரண்டியதற்காக இவர் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்,
ஏனெனில் அவரது கட்டாய உழைப்புக் கொள்கையின் விளைவாக 3 மில்லியனுக்கும் அதிகமான காங்கோ மக்கள் இறந்தனர்.
மக்களின் உழைப்பை உறிஞ்சுவதில் உலகின் மற்ற அரசர்களை விட இவர் கொடூரனமானவராக இருந்தார்.
தன் பெயரை பயன்படுத்து தவறு செய்யும் சொந்த நாட்டு மக்களையே தனக்கு கீழ் உள்ளவர்களை எதுவேணாலும் செய்யலாம் என உத்தரவிட்டவர்.
அட்டிலா தி ஹன்
இவர் மனித வரலாற்றின் தீய ஆட்சியாளர்களில் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். அவரது கடைசி படையெடுப்புகள் இரத்தக்களரிப் போராக நினைவுகூரப்பட்டுள்ளன,
ஏனெனில் அவர் கிராமப்புறங்களை ஆக்கிரமித்து, கிராம மக்கள் அனைவரையும் படுகொலை செய்தார். அவர் படையெடுக்கும்இடத்தில் இருக்கும் ஒருவரையும் உயிரோடு விடமாட்டார். இவரது படைகளை பார்த்தே எதிர் நாட்டு மக்கள் பயந்து நடுங்கினர்.
கொடூர குணம் கொண்ட இவரது இறுதி காலம் மிகவும் கொடூரமாக அமைந்தது எனலாம்.
செங்கிஸ் கான்
(இந்த லிஸ்ட்டில் இவரது பெயர் இடம்பெறாமல் எப்படி..) இவர் மங்கோலியத் தலைவராக இருந்தார், இராணுவ அமைப்பு, அரசியல் தந்திரம் மற்றும் இரத்தவெறி பயங்கரவாதத்தால் புகழ் பெற்றவர் செங்கிஸ்கான்.
இவர் ஒவ்வொரு போருக்குப் பிறகும் பிழைத்தவர்களின் குறிப்பிட்ட உயரத்தை வெட்டிவிடுவார் என்று நாட்டுப்புற கதைகள் உள்ளது. இவர் 40 மில்லயன் மக்களின் இறப்பிற்கு காரணமாக இருந்தார்.
இவரது ஆட்சியை மக்கள் அதிக அளவில் வெறுத்தனர். இவரை பற்றிய புத்தகம் கூட தமிழில் மிக பிரபலம்…! வாங்கி படிக்க வேண்டிய ஒன்று.
மாக்சிமிலியன் ரோபஸ்பியர்
இவர் ஒருபோதும் தன்னை சுற்றியிருந்தவர்களை நம்பாமல் இருந்தார், நண்பர்கள் கூட இவருக்கு மிக குறைவுதான். அதனால் அவர் தான் சந்தேகப்படும் அனைவரையும் எந்தவித விசாரணையும் இல்லாமல் தலையை துண்டித்தார்.
மற்ற நாட்டு மன்னர்கள் இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதென எல்லா இடத்திலும் தண்டோரா போட்டனர்.
ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக சுமார் 5 மில்லியன் மக்களை துன்புறுத்தி அவர்கள் தலை துண்டித்தார். நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு இவரது ஆட்சி செயல்பட்டது.
explain psycho Kings | இப்படி பல மன்னர்கள், என் நாடு என் மக்கள் என இல்லாமல் பார்க்கும் அனைத்தும் என் சொந்தம்தான் எனவும்…எனக்கு கீழ் தான் அனைவரும் எனவும் அதற்கும் மேல் கொடூரமான எண்ணம் கொண்டு இறுதி காலத்தில் மோசமான மரணத்தை சந்தித்தவர்கள்.
வரலாறு முக்கியம் அமைச்சரே……!