Actor Karthik சினிமாவில் மறக்கமுடியாத காலகட்டம் எது என்று கேள்வி எழுப்பினால் அதில்
80-க்கள் 90-க்கள் காலகட்டம் நிச்சயம் இடம் பெற்று இருக்கும். புதிய இயக்குனர்கள்(மகேந்திரன்,ருத்ரையா,பாக்யராஜ்,பாண்டியராஜ்,பாரதிராஜா,ராஜசேகர்,s.p முத்துராமன், சந்தானபாரதி,மணிவண்ணன்) போன்ற இயக்குனர்கள் புதிய களத்தில் தங்களது கதைகளை திரைப்படமாக்கிகொண்டு இருந்தனர்.
அதே நேரத்தில் நடிகர்களும்(ரஜினிகாந்த்,கமல்,t ராஜேந்திரன், முரளி,மோகன்,சத்யராஜ்,பிரபு,விஜயகாந்த்,ராம்கி, மேலும் பலர்) தங்களது மேம்பட்ட நடிப்பாற்றலை கொடுத்துக்கொண்டு இருந்த காலம்.
இவர்கள் அனைவரும் தன்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு அதில் அதில் வெற்றி பெற்றனர்.
இந்த வரிசையில் அன்றைய சாக்லேட் பாய் அந்தஸ்தில் திகழ்ந்த நடிகர்களில் ஒருவர்தான் நவரச நாயகன் கார்த்திக்.
நடிகர் முத்துராமனின் மகன் என்ற பெருமையோடு அறிமுகமாகி இருந்தாலும் தன் திறமையால் மட்டுமே சினிமாவில் வளர்ந்து வந்தவர்.
இயக்குனர் பாரதிராஜா ஒரு நாள் முத்துராமன் வீட்டிற்கு வர அவரை முறைத்தவாரே கமெண்ட் அடித்து வரவேற்ற கார்த்திகை தனது அடுத்த படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினார்.
பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் மீசையில்லா கிச்சாவாக அறிமுகமானர்.
அப்போது இருந்தே இவருக்கு பெண்கள் விசிறி அதிகமாகி விட்டனர். தொடர்ந்து நினைவெல்லாம் நித்யா,ஆகாயகங்கை,அதிசய பிறவிகள் ஆகிய படங்கள் இவருக்கு முன்னணி கதாநாயகன் அந்தஸ்தை கொடுத்தது.
தமிழ்நாட்டின் ஜாம்பவான் இயக்குநர்கள் அத்தனைப் பேர் கையினாலும் மோதிரக் குட்டு வாங்கிய திறமைசாலி நடிகர் என்று இவரைச் சொல்லலாம். ஆரம்பத்தில் விடலைத்தனமான கேரக்டர்களிலேயே நடித்து வந்தாலும் இவருக்கான திருப்புமுனை தந்தது இயக்குநர் மணிரத்னம்.
தேசியவிருது பெற்ற ‘மெளன ராகம்’ படத்தின் ஹீரோ கார்த்திக் அல்ல. படத்தில் வெறும் அரைமணி நேரம் மட்டுமே வரும் மனோ என்ற அந்த கதாபாத்திரம் படம் முழுவதும் ஆக்ரமித்தது மட்டுமன்றி தமிழ்நாட்டு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றது.
துள்ளலும் துடிப்பும் நிறைந்த கேரக்டர் என்றாலே நடிகர் கார்த்திக்தான் என்று அப்போதைய இளசுகளின் மனதில் அசையா இடம் பெற்றிருந்தார். படத்தில் வரும் ‘சந்திரமெளலி…மிஸ்டர் சந்திரமெளலி’ வசனம் அப்போதைய ட்ரெண்ட்.
திரையில் தோன்றியதுமே பார்வையாளர்கள் மனதில் கரன்ட் பாய்ச்சுவதில் கார்த்திக்கின் உடல் மொழியும் நடிப்பும் இருந்தன. உதாரணத்துக்கு ‘அக்னிநட்சத்திரம்’
படத்தில் பிரபுவும் ஒரு ஹீரோ என்றாலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப ரொமான்ஸையம் இறுக்கமாகத்தான் வெளிப்படுத்துவார்.
ஆனால் கார்த்திக்கோ அவரின் வயதுக்கேற்ப நண்பர்களுடன் ஜாலி அரட்டை, திருட்டுத்தனமாக நிரோஷா வீட்டு நீச்சல் குளத்துக்குள் வந்து ஐ லவ் யூ சொல்வது என்று படத்தின் அக்னி வெப்பத்தைக் குறைக்கும் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருப்பார்.
அவ்வளவு ஏன்… இன்றும் இளைஞர்கள் ஹார்ட் பீட்டில் ட்ரம்ஸ் வாசிக்கும் ‘ ராஜா… ராஜாதி ராஜனிந்த ராஜா’ பாடலுக்கு கார்த்திக்கின் டான்ஸ் ஸ்டெப்ஸ் அப்போதைய இளைஞர்களின் ரிதமிக் பாடி லாங்குவேஜ்.
‘வருசம் 16’ படம் இயக்குநர் ஃபாசிலுக்கு விசிட்டிங் கார்டு மட்டுமல்ல.
கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வரும் கார்த்திக்கை தங்கள் வீட்டுப் பிள்ளையாக ஒவ்வொரு குடும்பமும் நினைக்க வைத்தது அந்தப் படம்தான்.
குடும்பத்தின் மீதான பாசம், குஷ்புவின் மீதான காதல் என்று எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருப்பார் Actor Karthik.
‘கிழக்கு வாசல்’ படம் இப்போது பார்த்தால் பல லாஜிக் மிஸ்டேக்ஸும் அபத்தங்களும் கண்ணுக்குப் படலாம். ஆனால் அப்போதும் சரி இப்போதும் சரி
Actor Karthik ஏற்று நடித்த பொன்னுரங்கம் கதாபாத்திரத்தைக் குறை சொல்ல முடியாது. தன் அம்மாவின் மரணத்துக்கு குஷ்புவின் அப்பாதான் காரணம் என்பதை அறிந்ததும் கொள்ளிவைத்த கையோடு அழுகையும் ஆத்திரமுமாய் அவரிடம் சென்று
தன் பக்க நியாயத்தைக் கூறும் காட்சியில் நடிப்பில் மிரட்டியிருப்பார்.
காதல் நாயகனாகவே கலக்கி வந்த கார்த்திக்கின் சினிமா வரலாற்றில்
அவரின் ‘அமரன்’ பெரும் திருப்புமுனை. படம் முழுதும் மிக ஸ்டைலிஷான டானாக பிரமாதப்படுத்தியிருப்பார் கார்த்திக்
.ஒளிப்பதிவாளர் பி.சி ஶ்ரீராமின் கேமராவில் அதிகம் சிக்கியவர் கார்த்திக்தான். ‘மெளன ராகம்’. ‘அக்னி நட்சத்திரம்’, ‘அமரன்’, ‘கோபுர வாசலிலே’, ‘இதயத் தாமரை’ என அவரின் ஒளிப்பதிவில் ஐந்து படங்களின் ஹீரோ இவர்.
‘அமரன்’ படத்தில் ‘வெத்தல போட்ட ஷோக்குல’ பாடல் முலம் பாடகராகவும் அறியப்பட்டவர் கார்த்திக். அந்தப் பாடல் தமிழ் சினிமாவுக்கான முதல் கானா எனச் சொல்லலாம்.
அப்புறமும் தேவா, இளையராஜா(சூர்யா மரியாதை,சின்ன ஜமீன்,சிஷ்யா,பிஸ்தா,பூவேலி,ஹரிச்சந்திரா போன்ற படங்கள்) இசையமைப்பில் பாடல்கள் பாடினார்.
சிட்டியில் மட்டுமின்றி கிராமத்து ஹீரோவாய் இவர் நடித்த படங்களின் வெற்றி
அனைத்து சென்டர்களிலும் இவரை நெருக்கமான ஸ்டாராக மாற்றியது. ‘பாண்டி நாட்டுத் தங்கம்’, ‘பெரிய வீட்டுப் பண்ணக்காரன்’, ‘பொன்னுமணி’ போன்ற படங்கள் உதாரணம்.
சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த ‘உள்ளத்தை அள்ளித்தா’. காமெடி கலகலப்பில் வெள்ளிவிழா கொண்டாடியது படம். கார்த்திக் கவுண்டமணி காமெடி பலே ஹிட்டாக தொடர்ந்து இந்தக் கூட்டணி ‘மேட்டுக்குடி’. ‘உனக்காக எல்லாம் உனக்காக’ என்று வெற்றிப்படங்களைத் தந்தன.
தொடர்ந்து ஹரிச்சந்திரா,நிலவே முகம் காட்டு,ஆனந்த பூங்காற்றே,ரோஜாவனம் போன்ற படங்களில் தன் அமைதியான நடிப்பால் ரசிக்க வைத்தார். அதே சமயம்
சுயம் வரம்,உனக்காக எல்லாம் உனக்காக,சின்ன ரோஜா போன்ற படங்களில்
தனது குரும்பிதனமான நடிப்பையும் வழங்கி தன்னை நிரூபித்தார். சத்யராஜ்,பிரபு,அர்ஜுன்,சிவாஜி,விஜயகாந்த் போன்ற நடிகர்களுடன் இணைந்தும் நடித்துள்ளார்.
2000 மாம் ஆன்று தொடக்கிலையே அவரது திரைவாழ்க்கை சற்று அஸ்தமனத்தை கண்டது. தொடர்ந்து வந்த அனைத்து திரைப்படங்களும் தோல்வியை தழுவின.தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு கார்த்திக் படங்களில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டாவது இன்னிங்ஸாக தன் வெற்றிப்பயணத்தை மாஞ்சவேலு திரைப்படம் மூலம் மீண்டும் தொடர்ந்தார்.
நடிப்பில் பழைய கார்த்திக் சாயல் இல்லாமல் தன நடிப்பை தொடர்கிறார். இதில் வந்த அனேகன் திரைப்படம் அவருக்கு நல்ல comeback படமாக அமைந்தது.
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
1988 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – அக்னி நட்சத்திரம்
1989 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – வருசம் பதினாறு
1990 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – கிழக்கு வாசல்
1993 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – பொன்னுமணி
தமிழக அரசின் விருதுகள்
1981 – சிறந்த அறிமுகம் (ஆண்) – அலைகள் ஓய்வதில்லை
1988 – சிறந்த நடிகருக்கான விருது – அக்னி நட்சத்திரம்
1990 – சிறந்த நடிகருக்கான விருது – கிழக்கு வாசல 1998 – சிறந்த நடிகருக்கான விருது – பூவேலி மற்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
கலைமாமணி விருது
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
1998 – சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது – உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
1987 – நந்தி விருது (சிறப்பு நடுவர் விருது) – அபிநந்தனா
தன் மகன் கெளதம் ஹீரோவாக வந்தபின்னும் நடிப்பில் தன்னை அசைக்க ஆள் இல்லை என நிரூபித்தார். தொடர்ந்து வரும் அமரன் 2, போன்ற படங்கள் இவரின் நடிப்புக்க்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.