ponniyin-selvan-movie பொன்னியின் செல்வன் திரைப்பயணம்?
பொன்னியின் செல்வன்- இந்த பெயரை கேட்டால் முதலில் நம் நினைவில் வருவது அமரர் கல்கி மற்றும் அதை திரைப்படமாக்கிய முயற்சி.
பொன்னியின் செல்வன் முழுக்க முழுக்க உண்மை கதை அல்ல.
உண்மையான சில நிகழ்வை வைத்து மற்றும் அதில் உள்ள மனிதர்களை அடிப்படையாகக்கொண்டு கற்பனையுடன் எழுதப்பட்ட ஒரு கதை.
இத்தனை வருடங்களாக இன்னமும் இது மக்கள் மத்தியில் பேசும்பொருளாக உள்ள காரணம் அந்த கதை சொல்லப்பட்ட விதமும் அதை திரைப்படமாக்கும் முயற்சியில் சிலர் தோற்றுபோனதும்.
சரி நேரடியாக சொல்ல வந்த விஷயத்துக்குள் செல்வோம்.! 1950 ல் வெளியான இந்த புத்தகம் அப்போதிருந்த சினிமா இயக்குனர்களை ஈர்த்தது. இதன் விளைவாக அப்போதிருந்த இளம் இயக்குனர்கள் இந்த கதையை படமாக எடுக்க முன்வந்தனர்.
முதல் கட்டமாக 1958 -ல் நடிகர் திரு MGR அவர்கள் அந்த கதையை திரைப்படமாக எடுக்க முடிவுசெய்தார்.
அதற்கான திரைக்கதைகளையும் அமைத்து பட்ஜெட்ம் ஒதுக்கபட்டது.
அப்போதிருந்த இயக்குனர் மகேந்திரனிடம் திரைக்கதை பொறுப்பை MGR ஒப்படைத்தார் என இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அதில் நடிக்க இருந்தவர்கள் ( MGR, சிவாஜிகணேசன்,ஜெமினிகணேசன் நம்பியார்) போன்ற அப்போதிருந்த முன்னணி நடிகர்கள் அனைவரும் ,
ஆனால் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட கூடுதலாக ஆனதால் பாதியிலையே படம் நின்றுபோனது. அதன் பிரதி கூட இப்போது இல்லை. MGR-ன் இந்த ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை.
அதன்பிறகு இந்த பொன்னியின் செல்வன் கதையை எடுக்க முடிவு செய்தவர் கமல்ஹாசன். 1996 -ல் இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது.
(ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், போன்றோர் நடிக்க இருந்தனர்.இளையராஜா இசை.) ஆனால் இதுவும் நடக்காமல் போக இந்த கதை பெரிதாகப்பட்டது. பின் இயக்குனர் மனோபாலாவும் அதை முயற்சி செய்தார் முடியவில்லை.
அதன் பின் இயக்குனர் மணிரத்தினம் அதை படமாக எடுக்க திட்டமிட்டார். ஆனால் பணம் போட யாரும் முன்வரவில்லை.
பின் என்ன எத்தனையோ முன்னாள் இயக்குனர் பல மொழிகளில் இதை படமாக்க முயற்சித்து முடியாமல் போனது.
அடுத்தக்கட்டமாக அனிமேஷன் பிளான்.!
ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இதை அனிமேஷன் SERIES ஆக எடுக்க திட்டமிட்டார். 2019 ல் இதற்கான அறிவிப்பு வெளியானது. SERIES எப்போது வெளியாகும் என பார்போம்.
அதற்க்கு பின் MGR அவர்களை அனிமேஷன் மூலம் மீண்டும் உருவாக்கி பொன்னியின் செல்வன் படமாக எடுக்கலாம் என் முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்றுவந்தது.
முதல்கட்டமாக வந்தியதேவன் கதாபாத்திரத்தை உருவாக்கி ஒரு பாடலே உருவாக்கி வெளியிட்டனர்.
சிறப்பான க்ராபிக்ஸ்…நல்ல பாடல். முழுதாக உருவாக்கி அதை வெளியிட்டால் காலம்கடந்தும் பேசப்படும் ஒன்றாக இருக்கும். அதையும் பார்க்கலாம்.
கடைசியாக இப்போது ஒருவழியாக மணிரத்தினம் அதை கையில் எடுத்தார்.முதலில் இதற்கான திரைக்கதை பணியே பலநாட்கள் சென்றது. விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து பின் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, பிரபு, பார்த்திபன் போன்றவர்கள் கொண்டுவரப்பட்டு கிட்டத்தட்ட பாதிபடம் முடித்து விட்டார் மணிரத்தினம்.
நிச்சயம் இப்படம் வெளிவந்தபின் தமிழ் சினிமாவில் இது ஒரு மைல்கல் படமாகவும், இத்தனை ஆண்டு தமிழ் சினிமாவில் இது ஆகசிறந்த ஒரு படைப்பாகவும் இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
இன்னொரு சிறிய குறிப்பு : மேடை நாடகங்கள் அதிகம் போடப்பட்டது ரத்தகண்ணீர் கதை தான். அதற்க்கு பிறகு இன்னமும் மக்கள் பார்க்க செல்வது இந்த பொன்னியின் செல்வன் நாடகம்தான்.
திரைப்படம் பொறுத்திருந்து பாப்போம்.