சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்
தற்போது ஃப்ரைடு ரைஸ் உணவு மிகவும் பிரபலமாக உள்ள ஒன்று . எங்கு ஹோட்டலுக்கு சென்றாலும், அங்கு ஃப்ரைடு ரைஸ் வாங்காதவர்களை பார்க்கவே முடியாது. அந்த அளவில் அந்த உணவானது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இதில் அந்த ஃப்ரைடு ரைஸில் ஒரு வகையான சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ் எனப்படும் பச்சை மிளகாய் மற்றும் பூண்டை மையமாக கொண்டு, எப்படி ஃப்ரைடு ரைஸ் செய்துவதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி – 2 கப் (ஊற வைத்து கழுவியது)
ஸ்ப்ரிங் வெங்காயம் – 4 (நறுக்கியது)
வெங்காயத் தாள் – 1 கப் (நறுக்கியது)
பூண்டு – 10 பல் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
அஜினமோட்டோ – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஸ்ப்ரிங் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து, வெங்காயத் தாள் மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் அஜினமோட்டோ சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பின்பு சோயா சாஸ் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் அதில் கழுவிய அரிசியை போட்டு 3-4 நிமிடம் வதக்கி, 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி, 8-10 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சைனீஸ் ஸ்டைல் சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ் ரெடி!!! இதனை அப்படியே அல்லது மஞ்சூரியன் கிரேவியுடன் சாப்பிடலாம்.
மீன் வறுவல்
மீன் யாருக்குதான் பிடிக்காது. ருசியான சமையல்களில் மிகவும் சவாலான விஷயம் மீன் வறுவல் செய்வது.! கொஞ்சம் மாறினாலும் ருசியே மாறிவிடும்.! இப்டி ஒரு ருசியான மீன் வறுவல் செய்து ருசிப்போம்!
தேவையான பொருட்கள்:
கடல் மீன் – ஒரு கிலோ
அரைத்த வெங்காயம் – 2
பூண்டு – 1 டீஸ்பூன்
ரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 1
தயிர் – கால் கப்
கேசரி கலர் – கொஞ்சம்
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணை – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
மீன்களை நன்றாக சுத்தம் செய்து மெல்லிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
மசாலாப் பொருட்களையும் உப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு விழுது கலந்து கழுவி வைக்கப்பட்டுள்ள மீன் துண்டுகள் மீது சமமாகப் பூசிவிடவும். தயிர் சேர்ப்பதால் மீனின் வாடை நீங்கி விடும்.
2 மணி நேரம் மசாலா மீனில் ஊறினால் வறுவலின் ருசி அதிகாறிக்கும். சூடாக்கப்பட்ட தவாவில் மீன் துண்டுகளையும் போட்டு கொஞ்சமாக எண்ணை விட்டு 2 புறமும், திருப்பிப்போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். இதன் ருசியே தனிதான்.