சினிமாவின் வளர்ச்சி Part 2
80 காலகட்டத்தில் பல புதிய முயற்ச்சிகள் தமிழ்சினிமாவில் அரங்கேறின. அதுவரை ஸ்டுடியோவில் மட்டுமே நடந்துகொண்டு இருந்த படப்பிடிப்புக்கள் நகர தெருக்களிலும், கிராமபுறங்களிலும் நடத்தப்பட்டது.
இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், மகேந்திரன், ருத்ரையா போன்றோர் தங்களுக்கென ஒரு பாணியை வைத்துகொண்டு அதில் கதை சொல்ல தொடங்கினர்.
- தமிழின் முதல் 70 MM Screen திரைப்படம் “மாவீரன்“
மாவீரன் போன்ற புதியமுயற்ச்சிகள் வரவேற்ப்பை பெற்றாலும் திரைப்படம் தோல்விதான். அந்நாட்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் சிவாஜி,MGR பாணியையே பின்பற்றினர், சகலகலா வல்லவன், முரட்டுக்காளை போன்ற படங்கள் இவர்களை கிராம புறங்களிலும் அடையாளம் காட்டியது.
-
கமல் ஆங்கில படங்களின் தழுவலில் அதிகம் நடிக்கத்தொடங்கினார்.
-
ரஜினி ஹிந்தி படங்களின் தழுவலில் அதிகம் நடிக்கத்தொடங்கினார்.
இவர்களை அடுத்து விஜயகாந்த், சத்யராஜ் போன்றோர் முன்னணி நாயகர்களாக வலம் வர தொடங்கினர். விஜயகாந்த், சத்யராஜ், ரஜினிகாந்த் ஆகியோர் ஆரம்பகாலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தையே எற்றுனடிக்க தொடங்கினர்.
அந்தகாலத்தில் வில்லன்களுக்கு பெரியவேலை இல்லை. 10 காட்சிகளில் வந்து 7 காட்சிகளில் பல்ப் வாங்கிகொண்டு செல்வார்கள். மீதி 3 காட்சிகளில் அடி வாங்கிகொண்டு செல்வார்கள்.
பழிவாங்கல் கதைதான் 90 சதவிகிதம் இருக்கும். இப்படி மசாலா படங்களையே பார்த்துசளித்த நம் ஊர் ஜாம்பவான்களுக்கு பாரதிராஜா படங்கள் அல்லது பாக்கியராஜ் படங்கள் திருப்தியை தரும், கிழக்கே போகும் ரயில், மண்வாசனை, 16 வயதினிலே போன்ற படங்கள் பாரதிராஜாவை கண்டெடுத்தன.
பொய் சாட்சி, முந்தானை முடிச்சி, அந்த 7 நாட்கள் போன்ற படங்கள் பாக்யராஜை வேறு Level க்கு உயர்த்தியது. ஆனால் இவர்களின் புகழும் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் செல்லும் நேரம் வந்தது. மகேந்திரன் படங்களுக்கு மக்கள் கொட்டாவிவிடத்தொடங்கினர், பாக்கியராஜ், பாரதிராஜா படங்கள் இப்படிதான் இருக்கும் என ஒரு முடிவு மக்களுக்கு புரிந்தது..
- பாக்யராஜ் படங்கள் சிலது பழைய தமிழ்ப்படங்களின் Copy
அவசரபோலீஸ் 100 படத்தில் விழுந்த பாக்யராஜ் இன்றுவரை சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை என்பது உபதகவல்.
90 காலகட்டம் நெருங்க நெருங்க தமிழ் சினிமாவின் புகழ் உச்சத்தை அடைந்து இருந்தது.
ஆனால் புதிய முயற்ச்சிகள் கைவிடப்பட்டன. பார்த்த கதையே திரும்ப திரும்ப மக்களின் அமைதியை சோதித்துகொண்டு இருந்தது. இவர்கள் வரும்வரை. ஆம் 90 களின் இறுதி மற்றும் தொடக்கம் ரசிகர்களுக்கு விருந்தாக காத்துக்கிடந்தது.
To be Continued @ Next Part