Vijay Biography | Thalapathy In Master Movie | ஒரு மனிதனின் கனவு

Master Movie | Thalapathy Vijay Movies

சினிமா சாதாரண விஷயம் இல்லை. சிறிது தவறினாலும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் ஒரு தளம். அத்தளத்தில் கம்பீரமாய் தனது வெற்றி கொடியை நாட்டி இன்று தளபதியாய் அமர்ந்திருக்கும் ஒருவர் நமது தளபதி விஜய் அவர்கள். தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் 27 ஆண்டுகளாக தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பது என்பது, கடும் சவாலான விஷயம்தான். இந்தச் சாதனையை சர்வசாதாரணமாக நடத்திக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். ரசிகர்களால் `இளைய தளபதி’ எனச் செல்லமாக அழைக்கப்படும் இவர், தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நுழைந்து 25 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். 1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி இயக்குநர் சந்திரசேகர் – பாடகி ஷோபா தம்பதிக்குப் பிறக்கிறார் விஜய் , சிறு வயதிலேயே அமைதியும் அடக்கம் அமைந்தவர் இல்லை. மிகவும் குறும்புத்தனமான ஒருவர்.  விஜய்யின் வரலாறு. தந்தையும் இயக்குநருமான சந்திரசேகரின் இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளியான `வெற்றி’ என்ற படத்தின் மூலம் கேமரா முன் தோன்றுகிறார். பிறகு `குடும்பம்’, `நான் சிகப்பு மனிதன்’, `வசந்தராகம்’, `சட்டம் ஒரு விளையாட்டு’, `இது எங்கள் நீதி’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கிறார் விஜய்.பள்ளிப் படிப்பை முடித்த அவர், லயோலா கல்லூரியில் சேர்ந்தார். நடிப்பின் மீது ஆர்வம்கொண்ட அவர், தன் தந்தையிடம் அதைக் கூறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான விஜய்யை தன் நண்பர்களிடம்  அப்போது ரிலீஸான `அண்ணாமலை’ படத்தில் வரும் வசனத்தைக் கூறி நடித்துக்காட்டுகிறார். நண்பர்களுக்கு பிடித்துபோக. விஜய் அதை தன் அப்பாவிடம் நடித்து காட்டுகிறார். அதன் பிரதிபலனாக 1992-ம் ஆண்டு `நாளைய தீர்ப்பு’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் விஜய்.


முதல் படமே தோல்வியை தழுவ…பல லட்சம் நஷ்ட்டமாகிறது. போததற்கு விகடன் நாளிதழ் அந்த படத்தை விமர்த்தது மட்டுமின்றி விஜய்யையும் விமர்சித்தது. “பிரபல இயக்குனரின் மகன் என்ற அந்தஸ்தில் யார் வேண்டுமானாலும் சினிமாவில் நுழையலாம் என்றாகிவிட்டது. துர்திச்ட்டமான அவரது முகம் மக்களை எப்படி சென்றடையும் என இயக்குனர் நினைத்தார். என்றும் விஜயை தகரடப்பா மூஞ்சி என்றும் விமர்சித்தது” நொறுங்கிபோனார் விஜய். ஆனால் நடிப்பின் ஆர்வம் மட்டும் குறையவில்லை. ஆனால் இவரைவைத்து படம் எடுக்க யாரும் முன்வரவில்லை. ஒரு அப்பாவாக SA.சந்திரசேகர் தன் கடமையை செய்தார். அடுத்த படமாக விஜயகாந்த்வுடன் நடிக்க வைத்தார்.

அந்த படம் செந்தூர பாண்டி.பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிகொண்டு ஓடியது இந்த படம் விஜய் எனும் ஒருவர் இருப்பதே இந்த படத்தில்தான் பலருக்கு தெரிந்தது. ஆனாலும் அவரை துருதிஷ்ட்டமான முகம் என்றே சினிமா ஒதுக்கி வைத்தது. மீண்டும் தன் அப்பா இயக்கத்தில் ஒரு படம் வெளிவருகிறது. ஆனால் இருந்த கொஞ்சநஞ்ச இமேஜ்ம் போய்விடுகிறது அந்த படத்தில். பத்திரிக்கைகளில் இது பிட்டு படம் என்றும் விஜய் பிட்டுபடத்தில் நடிக்கத்தான் லாயக்கி என்றும் வெளியிட. படம் flop. அந்த படம் “ரசிகன்” இதற்க்கு மேல் விஜய் சினிமாவில் இருக்கமுடியாது என்று சொல்லியவர்களுக்கு அடுத்த ஆண்டு மீண்டும் ஒரு படம் தருகிறார். “தேவா” தொடர்ந்து action-ல் தன் பயணத்தை தொடர நினைத்த விஜய்க்கு இந்த படமும் படுதோல்வி. அதுவும் அவர் அப்பா இயக்கியது.

மீண்டும் அடுத்த படமாக ஒன்று வெளிவருகிறது. அமராவதி மூலம் மக்கள் மனதில் பதிந்த அஜித். மற்றும் விஜய் இணைந்து நடிக்கிறார் என்றதும் சிறிது  எதிர்பார்ப்பு இருக்கிறது. (அமராவதி ரிலீஸின் போதுதான் அஜித்தும் விஜய்யும் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். விஜய் அப்போது ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் இமயவரம்பன். பிரபாகர் என்கிற பொது நண்பர் மூலமாக அந்த இமயவரம்பன் அஜித்துக்கும் அவர் சர்க்கிளுக்கும் பழக்கம். ‘அமராவதி’ ரிலீஸ் அன்று அஜித், இமயவரம்பன், பிரபாகர் உள்பட பலர் வடபழநி கமலா தியேட்டர் வெளியே பைக்கில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.

படம் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் இருக்கும். அப்போது வேகமாக வந்த இளைஞர் கூட்டம் ஒன்று விறுவிறுவென தியேட்டருக்குள் போனது. அந்தக் கூட்டத்திலிருந்து விலகி இவர்களை நோக்கி வந்த இளைஞர் ஒருவர், இமயவரம்பனைப் பார்த்து ‘ஹாய்’ சொல்கிறார். அவர்தான் விஜய். பிறகு இமயவரம்பன், ‘இவர் அஜித்… இவர் விஜய்’ என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திவைக்கிறார். ‘ஹாய் பாஸ். ஆல் தி பெஸ்ட்’ என்று ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு கடந்தனர். இருவரும் பின்னாளில் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் சேர்ந்து நடிப்போம் என்றோ, பெரிய ஹீரோக்களாக வளர்ந்து ரசிகர்களால் எதிரெதிர் துருவங்களாக நிறுத்தப்படுவோம் என்றோ அப்போது அவர்களுக்குத் தெரியாது.)

ஆனால் ராஜாவில் பார்வையிலே படம் அதுவும் தோல்வி. தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்த விஜய்க்கு மிகபெரிய அடி தன் தங்கையின் மரணம். போததற்கு மீடியா விஜயை தொடர்ந்து வசைபாடிகொண்டே வந்தது. நிச்சயம் ஹிட் கொடுப்போம் என்ற நம்பிக்கையில் அதே ஆண்டு வெளிவருகிறது விஷ்ணு. இதில் பாடிய தொட்டபெட்டா பாடல் ஹிட் ஆக படமும் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறுகிறது. அன்றைய கல்லூரி நடனங்களில் இந்த பாடல் கட்டாயம் இடம் பெறுமாம். மீண்டும் அதே ஆண்டு ஒரு படம் விஜய் நடிப்பில் வெளிவருகிறது. சந்திரலேகா. மதத்தை எதிர்த்து போராடும் காதலர்கள் என்ற ஒருவரி. மக்களை கவர்ந்தாலும் படம் கவர மறந்துவிட்டது. அடுத்த ஆண்டு மீண்டும் ஒரு படம். கோயம்புதூர் மாப்பிள்ளை. காமெடியுடன் காதலையும் சொல்ல வந்தாலும் எதர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை.

ஆனாலும் அதில் விஜயை மக்களுக்கு பிடித்தது.  திரை துறைக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியும் தனகென்று ஒரு இடம் கிடைக்காதது விஜயை வேதனைக்கு உள்ளாக்கியது. இனி action-கிளாமர் வேண்டாமென்று நினைத்த விஜய்க்கு பொக்கிசமாக ஒரு படம் தேடி வருகிறது. அந்த ஒரே படம் விஜய் என்ற மனிதரை முன்னணி நடிகராக மாற்றி இமாலைய வெற்றியை தருகிறது (ஆனால் அந்த படம் ஆரம்பமாவதற்கு முன் இயக்குனர் விக்ரமனிடம் பலபேர் விஜயை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று சொன்னார்கள். தயாரிபாளர்களும் விஜய் வேண்டாம் என்று தடுத்தும் விக்ரமன் விஜயை களம் இறக்கினார்” அந்த படம் “பூவே உனக்காக”

விஜய்யின் வரலாறு இந்த இடத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது.அதே ஆண்டு தொடர்ந்து மூன்று படங்கள் வெளியாகின்றன. “வசந்த வாசல்” “மாண்புமிகு மாணவன்” “செல்வா” அதில் “மாண்புமிகு மாணவன்” “செல்வா”  மட்டும் ஓரளவுக்கு வெற்றிபெற பெயரை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.தொடர்ந்து இனி காதல் நாயகனாக தொடரலாம் என நினைத்தார் விஜய். அடுத்த ஆண்டு R.சுந்தர்ராஜன் இயக்கத்தில் காலமெல்லாம் காத்திருப்பேன். ஆனால் இப்படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் பாடல்கள் வெற்றிபெற்றது. ஆனால் அந்த ஆண்டு(1997) இவர் வாழ்கையில் துருப்புமுனையாக மாறபோகிறது என்று அவர் நினைத்திருக்க மாட்டார். அந்த ஆண்டு வெளிவருகிறது

“லவ் டுடே” விஜய்யின் நடிப்புக்கு சற்று தீனி போட்டது அந்த படம்தான். அதன் கிளைமாக்ஸ் காட்சியில் தன் அப்பா இறந்தது தெரிந்ததும் அவர் வீட்டிற்கு ஓடிவரும் காட்சியில் இருந்து ஒரே டேக்கில் படமாக்கப்பட்டது. பார்ப்பவர் கண்களை கலங்கவைக்கும் அளவிற்கு நடிப்பில் வெளுத்துகட்டிய முதல் படம். (அந்த காட்சி படமாக்கும் பொழுது விஜய்க்கு கண்ணீர்வர கிளிசரின் பயன்படுத்தவில்லை. அந்த காட்சியை மீண்டும் பார்த்தால் புரியும் விஜயின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டு இருக்கும். அந்த காட்சியில் விஜய் அழுது நடித்துகொண்டு இருக்கும் பொழுது பக்கத்தில் இருந்த ஒருவர் சிரித்துவிட. நீளமான அந்த காட்சி முடிந்ததும் சரியாக நியாபகம் வைத்து சிரித்தவரை அழைத்து. ஒருவர் கஷ்ட்டப்பட்டு நடிக்கும்பொழுது இடையே நீங்கள் சிரிப்பது தவறு. இங்கே சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை. அது எங்கள் நடிப்பை  தாழ்த்திவிடும் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.) படம் பெரியளவு வெற்றி. கூடவே அவர் நடனமும் பெரிதாக பேசபட்டது. பாடல்களும் ஹிட். அதே ஆண்டு அடுத்த படமாக திரு.சிவாஜிகணேசனுடன் இணைத்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. விஜயின் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. நல்ல வெற்றியை ருசித்துகொண்டு இருந்தார் விஜய். மன்னிக்கவும் இளைய தளபதி விஜய். தன் நடிப்பை இன்னும் மெருகேற்ற திட்டமிட்டு அடுத்த படம் செய்கிறார்.

 அதே ஆண்டு வசந்த் இயக்கத்தில் “நேருக்கு நேர்” இன்றும் எனது fav movie. சூர்யாவின் முதல் படம். விஜய்யுடன். முதலில் சூர்யாவுக்கு பதில் அஜித் தான் நடித்தார். 2 நாட்கள் ஷூட்டிங் முடிந்து அஜித் ஏனோ வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் களம் இறங்கினார் சூர்யா. படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை விஜய்க்கு கொடுத்தது. ஆரம்பகாலத்தில் விஜயை தகரடப்பா மூஞ்சி என்று காலாய்த்த ஊடகங்கள் இந்த ஆண்டுகளில் விஜயின் கவர் போட்டோ வேண்டுமென்று கேட்டுக்கொண்டு இருந்தது) பின் அதே ஆண்டு வெளியாகிறது காதலுக்கு மரியாதை.(கடைசி வரையில் காதலர்கள் தொட்டுகூட பேசமாட்டார்கள்) இந்த படத்தில் பாடல்கள் நல்ல வெற்றிபெற படம் பார்க்க திரையரங்கிற்கு கூட்டம் குவிந்தது. நீண்ட நாளைக்கு பிறகு நல்ல படம் பார்த்த feeling. பிரம்மாண்ட வெற்றியை விஜய்க்கு கொடுத்தது. ஆண்கள் மட்டும் இன்றி பெண்களும் கூட்டம் கூட்டமாய் இப்படத்திற்கு படை எடுத்தனர்.

அடுத்த ஆண்டு நினைத்தேன் வந்தாய், நிலவே வா,ப்ரியமுடன். மூன்றும் வெளிவருகிறது. சாதாரண படமாக நினைத்தேன் வந்தாய் அமைந்தாலும் பாடல்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது.அடுத்த படமாக ப்ரியமுடன். இவ்வளவு நாள் எங்கிருந்தார் என சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு நடிப்பை கொடுத்தார். விஜய்க்கு இதில் nagative ரோல். ஒவ்வொரு காட்சியிலும் தனது எதிர்மறை நடிப்பை காட்டி ரசிகனை கட்டிபோட்டார். படத்தின் இறுதி காட்சியில் கிட்டத்தட்ட 6 நிமிடத்திற்கு ஒரு ஷாட்டில் நடித்து முடித்தார். (இப்படத்தற்கு  இரண்டு  கிளைமாக்ஸ் வைக்க பட்டது. முதல் கிளைமாக்ஸ். வசந்த் தன்னை பற்றிய உண்மையை சொன்னதும் பிரியா அதை ஏற்றுகொள்கிறாள். அந்நேரம் போலீஸ் வந்துவிட பிரியா அவரை தப்ப வைத்து இருவரும் அங்கிருந்து ஓடுகின்றனர். இனி எல்லாமே மாறிவிடும் என எண்ணி போலீஸ் அவர்களை ஏதும் செய்யாமல் செல்கிறது. இரண்டாவது கிளைமாக்ஸ். நீங்கள் படத்தில் காண்பது. பிரியா காதலை ஏற்கும் நேரத்தில் வசந்த் தூப்பாக்கிசூட்டில் சாகிறான். பிரியா ஒரு முத்தத்தில் தன் காதலை வெளிபடுத்துகிறாள்.)

அதே ஆண்டு அடுத்த படம் நிலவே வா. producer-ஆகவும் களம் இறங்கினார். ஆனால் படம் எதர்பார்த்த வெற்றி கொடுக்கவில்லை. பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட். நல்ல படம்தான்.நல்ல கிளைமாக்ஸ் ஏன் படம் ஓடவில்லை என தெரியவில்லை.

அடுத்த ஆண்டே 2 வெற்றிப்படம். “துள்ளாத மனமும் துள்ளும்”. 25 நாட்களில் எடுக்கப்பட்ட படம் .1 வருடத்தையும் தாண்டி ஓடியது. பாடல்களே படத்தை ஓட்டியது என சொல்லலாம். விஜயை தன் வீட்டில் ஒருவனாக மக்கள் பார்க்க தொடங்கியது இந்த படத்தில் இருந்துதான். தன் அம்மா இறந்த செய்தி கேட்டதும் ருக்குவிடம் மறைத்துக்கொண்டு அங்கிருந்து பாத்ரூம்க்கு வந்து அழும் காட்சியில் இளையதளபதி உச்சகட்ட நடிப்பை காட்டியிருப்பார். படம் பார்த்து வெளியே வந்தவர்கள் மனுஷன் பின்றாயா நடிப்புல என்று வாழ்த்திவிட்டு சென்றனர்.

அதற்க்கு அடுத்த வந்த இரண்டு படமும் சரியாக ஓடவில்லை. அதிலும் நெஞ்சினிலே பாடல்கள் செம ஹிட். படம் விமர்சனத்துக்கு உள்ளாகியது. பேசியே தீவிரவாதிகளை திருத்திவிடுகிராராம் அடேங்கப்பா என்று.)பின் k.s ரவிக்குமார் இயக்கத்தில் மின்சார கண்ணா. பாடல்கள் ஹிட் படம் பெரியவெற்றி பெறவில்லை என்றாலும் எதர்பார்த்த வெற்றியை கண்டது. இன்றும் KTV-இல் அந்த படத்தின் பிரிண்ட்டை மெருகேற்றி ஒளிபரப்பிகொண்டே உள்ளனர்.

அடுத்த படம் விஜயின் 25வது படம். பெரிய எதிர்பார்ப்பு. காதலுக்கு மரியாதை இயக்குனர். அதே கூட்டணி. எதர்பார்த்த வெற்றியை கொடுத்தது. விஜயின் நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டிய படம் இந்தப் படத்தில் அவர் பேசிய `மீசிக்… மீசிக்…’ என்ற வார்த்தைப் பிரயோகம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. நல்ல புகழுடன் 2௦௦௦மாவது ஆண்டில் அடி எடுத்து வைத்தார். அடுத்த படம் என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பிய ரசிகர்களுக்கு தீனியாக வெளிவந்து சக்கை போடு போட்டது S.J சூர்யா இயக்கத்தில் விஜய்-ஜோதிகா நடிப்பில் வெளிவந்த “குஷி” ரசிகர்களின் மனதை இருக்க கட்டிபோட்ட ஒரு மைல்கல் படம். அன்றைய காதலர்கள் நிச்சயம் இப்படத்தை மறந்திர்க்க மாட்டர்கள்.

இன்றைய காதலர்களும் கூட. இன்றும் எனது லேப்டாப்பில் இப்படம் உள்ளது. பாடல்களும், வசனங்களும் நல்ல ஹிட். மீண்டும் இப்படி ஒரு படம் வருமா என்றால் கேள்விதான்? அதே ஆண்டு பிரியமானவளே நல்ல படம் பெண்கள் மத்தியில் பாராட்டை பெற்ற சிறந்த படம். அடுத்த படமாக மீண்டும் விஜய்-சூர்யா கூட்டணி

 ஒரு நல்ல feel good movie. நண்பர்களால் கொண்டாடி தீர்த்த படம். பாடல்களும் சரி படமும் சரி பாராட்டியே பெற்றது. இறுதிகாட்சியில் விஜயை புதிய பரிமாணத்தில் காட்டிய படம். தொடர்ந்து பத்ரி,ஷாஜகான் போன்ற படங்கள் சாதாரண வெற்றியே பெற்றது. ஷாஜகான் இன்றும் ரசிகர்களின் fav movie.தொடர்ந்து  வந்த தமிழன்,யூத் போன்றா படங்கள் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் பாடல்கள் வரவேற்ப்பை பெற்றது. அங்கிருந்து actionக்கு களம் இறங்க நினைத்த விஜய்க்கு பகவதி சொல்லிகொல்லும்படி இல்லை. படம் வெற்றிதான் ஆனால் விமர்சனம் அதிகமாக எழுந்தது. பின் மீண்டும் லவ். வசீகரா. ஜெயா டிவி-யின் fav movie. ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். feel good movie. விஜயின் கடைசியாக வந்த feelgood படமும் இதுதான். இதற்க்கு பின் action-ல் தனது நடிப்பை கட்ட நினைத்தார். அதன் பலனாக வந்த புதியகீதை படுதோல்வி.இருந்தும் மீண்டும் அதே பாணி அடுத்த படம் விஜய்யின் action பாணியை துவக்கி வைத்தது. “திருமலை” புதுபேட்டை நாயகனாக வாழ்ந்து காட்டி இருப்பார். படத்தின் முதல் வசனம் “நான் ரெடி.” அவரின் நடனத்தின் இன்னொரு முகம் தெரிய ஆரம்பித்த படம். producerகளின் செல்ல பிள்ளையாக மாறினார். அதே ஆண்டு வெளிவந்த நீண்டகாலம் கிடப்பில் இருந்த ஒரு படம் வெளியானது உதயா. பலபேருக்கு இப்படி ஒரு படம் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. பாடல்கள் வெற்றி. உதயா வெளியான இரண்டு மாதங்களிலேயே இளையதளபதி சினிமா பயணத்தில் மைல்கல் படமாக வெளிவருகிறது.

 கலைப் பயணத்தில் 2004-ம் ஆண்டு பெரும்மாற்றம் நிகழ்ந்தது. அதுதான், ஆக்‌ஷன் கலந்த யதார்த்த நாயகனாக நடித்து, 50 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த `கில்லி’ படத்தின் வெளியீடு. தமிழ்நாடு முழுக்க சொல்லி அடித்த படம். அந்த இன்டர்வெல் காட்சி ஒரன்று போதும். விஜயின் மாஸ் உச்சநிலைக்கு சென்றது.அதன் பிறகு அவர் நடித்த `திருப்பாச்சி’, `சிவகாசி’ போன்ற படங்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக்  கிளப்பின.  இதுபோன்ற யதார்த்தமான படங்கள் மூலம் பெண்களின் ஆதரவைப் பெற்றார். `சச்சின்’ படத்தில் மூலம் தனது பழைய ரொமான்டிக் ஹீரோயிசத்தைக் காட்டினார். பின் வெளிவந்த `போக்கிரி’ படம் மூலம் இளைய தலைமுறையை மனங்களில் ஆழமாகப் பதிந்தார் விஜய். இறுதி காட்சியில் suspense உடைபடும் பொழுது. ரசிகர்களின் கைதட்டல் விஜயை இமாலைய நடிகராக உயர்த்தியது. 1 வருடம் ஓடி சாதனை படைத்த படம்.2007 முதல் 2010 வரை, தொடர் தோல்விகளைச் சந்தித்தார். அவர் நடித்து வெளிவந்த `அழகிய தமிழ்மகன்’, `குருவி’, `வில்லு’ போன்ற படங்கள் அவருக்குத் தோல்வியைத் தந்தன. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான அவரது 50-வது படமான `சுறா’ பெரும் தோல்வியடைந்தது. ஒரே மாதிரியான கதைக்களம், தேவையற்ற வசனம் எனப் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த விஜய்க்கு, அடுத்த படமான `காவலன்’ பெரும் வெற்றியைப் பெற்றது. காவலனில் action காட்சிகளையும் மாஸ் காட்சிகளையும் கொஞ்சம் குறைத்து இருந்தால் மீண்டும் ஒரு feel good படமாக இருந்து இருக்கும்.

 தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி சாதனை படைக்கிறது.

தளபதிக்கு தங்கை பாசம் அதிகம். அதன் விளைவாக தனது சில படங்களை தங்கை பாசதிர்காகவே தேர்ந்தேடுந்தார். அல்லது அவருக்காகவே தங்கை பற்றின கதைகளம் வைக்கப்பட்டது

.வேலாயுதம்’, `நண்பன்’ போன்ற படங்கள், விஜய்யை மீட்டெடுத்து, பெரும் வெற்றியைக் கொடுத்தன. 2012-ம் ஆண்டு விஜய் – ஏ. ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான `துப்பாக்கி’, விஜய் இதற்குமுன் செய்த அனைத்து படங்களின் சாதனையை முறியடித்து, பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்தது. இந்தப் படத்துக்குப் பல பிரச்னைகள் எழுந்தாலும், வசூலை அள்ளிக்குவித்தது. விஜய் நடிப்பில் `100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம்’ என்ற பெருமையை இந்தப் படம் பெற்றது.அதற்கடுத்து விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் `தலைவா’. தன் அரசியல் ஈடுபாட்டை இந்தப் படம் மூலம் வெளிப்படுத்தினார் விஜய். அதன் பிறகு அவர் `ஜில்லா’வில் தனது மசாலா-ஆக்‌ஷன் பாணியில் நடித்தது  கமர்ஷியல் படமாக அமைந்தது.

2014-ம் ஆண்டின் தீபாவளி விருந்தாக, `கத்தி’ வெளியாகி, தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. ஏ.ஆர்.முருகதாஸின் எழுதிய கூர்மையான வசங்களும் அதற்கு இணையாக விஜய்யின் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றன.

Actor Vijay in Kaththi Movie Posters

இந்தப் படத்தில் வரும் `பிரஸ் மீட் சீன்’ பார்த்த அனைவரையும் சிந்திக்கவைத்தது.2015-ம் ஆண்டு வெளிவந்த `புலி’ விஜய்க்கு மீண்டும் ஒரு தோல்வியைத் தந்தது. சமூக வலைதளங்களின் ட்ரோல்ஸுக்கு  இரையாக மாறியது. இருப்பினும், இந்தப் படம் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் வெளியவதர்க்கும் ஏகப்பட்ட தடைகள். போததற்கு அரசியல் வசனங்கள் ரசிகர்களை கடுபெற்றின என்பதே உண்மை.  அட்லி இயக்கத்தில் வெளியான `தெறி’ விஜய்யை  மீண்டும் உச்சத்தில் அமரவைத்தது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான `பைரவா’, கலந்த விமர்சனத்துக்குள்ளானது. என்னைகேட்டால் ஜில்லா,பைரவா இரண்டும் விஜய் சினிமா பயணத்தில் தேவையில்லாத படம்..

அடுத்து வெளிவருகிறது மெர்சல். நடிப்பில் மிரட்டிய படம். பல விருதுகளை வாரி குவித்ததோடு. தமிழனின் பெருமையை உலகெங்கும் சொன்ன பாடல் உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. அதன் விளைவாக விஜய்க்கு கிடைத்த பரிசு best international actor award.தற்போது சர்க்கார்காக வெயிட். ஒரு மேடையில் விஜய் சொன்னது.

எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒரு ஆணோ பெண்ணோ இருப்பாங்கனு சொல்வாங்க ஆனா என் வெற்றிக்கு பின்னாடி நிறைய அவமானங்கள்தான் இருந்து இருக்கு,” என்று அது முற்றிலும் உண்மை முதல் படத்தின் விமர்சனம் அந்த வயதில் விஜய்க்கு பெரிய அடியாகத்தான் இருந்து இருக்கும். பிட்டு பட நடிகர் என்றும், ராசியில்லா நடிகர் என்றும் அவர் பெயரை உச்சரித்த மீடியாவே அதிகம். வேறு யாரேனும் இருந்து இருந்தால் சினிமாவை விட்டே நகர்ந்து இருப்பார்கள். அன்றைய சகிப்பு தன்மைதான் இன்று விஜயை தளபதியாக மக்கள் மனதில் வைத்துள்ளது.தமிழ் மட்டுமின்றி ஆசியா அளவில் பல நடிகர்கள் முன்னணி நடிகர்கள்,நடிகைகள் போன்றவர்கள் விஜய்க்கு விசிறியாக உள்ளனர். ஜூனியர் NTR-ye விஜய் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அளவுக்கு என்னால ஆட முடியாது என கூறியுள்ளார். இதை கேட்ட போதும் ப்ரியமுடன் ஷூட்டிங்கில் நடந்ததுதான் நினைவில் வந்தது.  ஒவ்வொரு நாளும் தன்னை மேருகேற்றிகொண்டே இருந்தார்.

இளையதளபதி.தனது 64 படங்களில், கிட்டத்தட்ட 22 படங்களுக்கு புது இயக்குநர்களுக்கு விஜய் வாய்ப்பு அளித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே தனது படங்களில் சமூகப் பிரச்னைகளையும் சமூகக் கருத்துகளையும் எடுத்துவைக்கிறார். முன்னணி நடிகர், அதுவும் பல கோடி ரசிகர்கள் பட்டாளம்கொண்டுள்ள ஒரு நடிகர், நல்ல கருத்தைக் கூறும்போது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.இவரது நடிப்பை கௌரவிக்கும்விதத்தில் 1998-ம் ஆண்டு `கலைமாமணி’ விருது வழங்கப்பட்டது. மாநில அரசின் `சிறந்த நடிகருக்கான’ விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டு `எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்’ இவருக்கு `கெளரவ டாக்டர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது. அவரது நடனம் மற்றும் பாடல்களுக்கு தனியே ரசிகர் கூட்டம் உருவானது. மேலும் பல படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக காத்துகொண்டு இருக்கிறது. ஒருபக்கம் விஜய் வெற்றி அடைய கூடாது என்று சிலர் எழுந்தாலும். அவ்வபொழுது விஜய் செய்யும் சில நல்ல விஷயங்கள் அவரை மக்கள் மனதில் உடைக்க முடியாத நிலையில் வைத்துகொள்ள தவறவில்லை.

 விஜய் அரசியலுக்கு வருவார். வந்தால் நன்றாக இருக்கும் என பலர் சொன்னாலும். வரமால் இருப்பதே நல்லது. திரைப்படத்தின் வாயிலாக தமிழகத்தை மாற்றமுடியும் என்ற வாக்கியம் என்றும் பொய்யாகாது. ஒரு வேலை விஜய் சர்கார் அமைத்தால். விதி வலியது. பார்ப்போம். விரைவில் இந்த பதிவு வீடியோவாக நமது தளத்தில் பதிவேற்றப்படும்.

 

Next Post

Leave a Comment Cancel Reply