2000 Tamil Movies | சினிமா Untold Story | Part 9

2000 Tamil Movies

2000 Tamil Movies, 2005, 2006, 2007 ஆண்டுகளில் விஜய், சூர்யா, விக்ரம், மாதவன், போன்றோர் முன்னணி நாயகர்களாக வலம் வர தொடங்கினர்.

பாபா என்ற மிகபெரிய தோல்வி படம் குடுத்த ரஜினிகாந்த்க்கு அடுத்ததாக வெளிவருகிறது P.வாசு இயக்கத்தில் “சந்திரமுகி” படையப்பா வெற்றிக்கு பிறகு மக்களுக்கு பிடித்த படமாக அமைந்தது அது.

ஜோதிகாவின் நடிப்பும், கதை சொல்லப்பட்ட விதமும் மாறுபட்டு இருந்தது அதன் சிறப்பு. இந்த படத்தோடு போட்டி போட்டு வெளியானது விஜய் நடிப்பில் சச்சின். இயக்குனர் ஜான் என்பவர் (இயக்குனர் திரு. மகேந்திரன் மகன்) படம் இளைஞ்ஞர்களை கவர்ந்தாலும் தோல்வியை சந்தித்தன.

இந்த படத்தோடு கமலின் மும்பை Express, மாதவனின் ப்ரியசகி படமும் வெளியானது.

  • தமிழின் முதல் டிஜிட்டல் கேமரா படம்(Red epic camera) மும்பை எக்ஸ்பிரஸ்

சச்சின் தோல்வியை திருப்பாச்சி, சிவகாசி படம் மூலம் பெற்ற வெற்றியில் தகர்த்தெறிந்தார் விஜய்.

சத்யராஜ் இப்பொழுதும் ஹீரோவாகவே நடித்தார் அவர் நடிப்பில் வந்த இங்கிலிஷ்காரன் படம் ஓரளவுக்கு வெற்றிபெற்றது. பிரசாந்த் மார்க்கெட் சரிய ஆரம்பித்த நேரம் ஆயுதம் என்ற படம் மிகபெரிய தோல்வி. அதை ஈடுகட்டும் வகையில் வந்த லண்டன் படம் சில நாட்களுக்கு மட்டும் ஓடின.

12B படத்துக்கு பின் ஷியாம், ஜீவா கூட்டணி உள்ளம் கேட்குமேவில் இணைந்தது. இது நம்ம படம் என கல்லூரி மாணவர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர்.

Cinematography presentation ரசிகர்களை கவர்ந்திழுத்தன.

  • தமிழின் முதல் Butterfly Effect படம் 12B

சத்யராஜ் மகன் சிபிராஜ், RB சௌத்ரி மகன் ரமேஷ், ஆரியா போன்றோர் தங்களுக்கென ஒரு பிடித்த வருடம் 2005. ஆர்யாவின் அறிந்தும் அறியாமலும், ரமேஷின் ஜித்தன் படம் பெரிதும் பேசப்பட்டது.

இயக்குனர் SJ சூர்யா தன்னை தானே கதாநாயகனாக முன்னிறுத்திகொண்டார் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் இன்றும் அந்த படம் பலருக்கு பிடித்த படமாகவே அமைந்தது.

விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் திடிரென வெளியானது அந்நியன். இப்படி ஒரு படமா என தியேட்டர்ரே களைகட்டியது. 3 கோணத்தில் விக்ரம் காட்டும் நடிப்பு பல விருதுகளை அவருக்கு அள்ளி கொடுத்தது.

கமலுக்கு பின் இவர்தான் என தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்தது. இயக்கம் ஷங்கர். ஷங்கரின் திரைக்கதை பாணி கடைசியாக இதில்தான் இருந்தது. இதற்க்கு பின் வந்த படங்கள் ஹீரோவுக்காக மட்டுமே கதை இருந்தது.

நாங்களும் நடிப்போம் என அந்நியன்க்கே சவால் விட்டுக்கொண்டு AR முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்தது சூர்யா நடிப்பில் “கஜினி”

அந்நியன் “Sevan பட copy என்றால் கஜினி “Memento பட copy” ஆனாலும் படம் வெற்றி. விக்ரம், சூர்யா இருவரும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டனர்.

சிம்புவுக்கு ஒரு மிகசிறந்த படம் என்றால் அதில் தொட்டிஜெயாவும் ஒன்று. கொக்கி என்ற பட சாயலில் தொட்டிஜெயா வெளியானது.

அமைதியான ரவுடி பற்றிய படம் CULT Film. சிம்புவின் நடிப்பு வேறு லெவல்லில் இருந்தது.

Part 8

Leave a Comment Cancel Reply