Secret of Corporate Companies

கோடிகளில் புரளும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ரகசியம் | Secret of Corporate Companies | Part 1

பொதுவாக இன்னிக்கு எல்லாரோட Lifestyle’m முன்ப விட இப்போ ரொம்பவே மாறிடுச்சு. அநேக பேரோட வாழ்க்கைமுறை இன்னிக்கு ஒரு இயந்திர வாழ்க்கை முறையாகதான் இருக்கு! அதுமட்டுமா மாறிச்சு? நம்மோட வாழ்க்கை முறை மட்டுமல்ல! நம்மோட பொருளாதாரமும் தான்!

என்ன முழிக்கிறிங்க? உண்மையாகவே முன்பைவிட இப்போ நிறையவே சம்பாதிக்கிறோம்! ஆனாலும் கடனாளியாக நிக்கிறோம்! முன்பெல்லாம் பொருளாதாரம் பத்தி யாராச்சும் ஒன்னு ரெண்டு பெருசுங்க டீ கடைல பேசிகிட்டு இருப்பாங்க! ஆனா இப்போ என்னமோ பெரிய அப்பாடக்கர் மாதிரி எல்லோரும் Share Market value, MNC Share value அப்டி இப்டின்னு பொருளாதார கூறுகள பிரிச்சி மேயறோம் இல்ல?

ஆனா நமக்கு பொருளாதாரம் அப்டின உடனே கண் முன்னாடி லட்சங்களும் கோடிகளும் வந்துதான் நிற்க்கும்! இவ்ளோ ஏன் இன்னும் சொல்ல போனால் அண்டை நாடுகளுடைய பொருளாதாரம் இந்தியாவ எந்த அளவுக்கு பாதிக்கும் அப்டின்ற பேச்சுக்கள் கூட இன்னிக்கு நண்பர்கள் வட்டாரத்துக்குள்ள கேட்க முடியும்!

இப்டி பல்லாயிரம் கோடி சம்மந்தப்பட்ட விஷ்யங்கள கூட பகுமானம பேசற நாம சொந்த விஷயத்துல ஏன் சொதப்பி வைக்கிறோம்?

உலக நாடுகளுக்கே கூட யோசனை சொல்ற நம்மில் பல பேரு மாசகடசில யார் முன்னாடியாச்சும் கைய கசக்கிடுதான் நிக்கிறோம் இல்லையா? ஆயிர கணக்குல சம்பதிக்கிரவனுக்கும் சரி லட்சக்கணக்குள சம்பதிக்கிரவனுக்கும் சரி, ஓட்ட கையில ஒரு பைசா கோடா நிக்காதுன்ற மாறி சம்பாதிக்கிற காசு கைக்கும் வாய்க்குமே சரியா இருக்கும்! இதுக்கு என்ன காரணம்?

மேக்ரோ எக்கனாமிக்ஸ் vs மைக்ரோ எக்கனாமிக்ஸ்:

நாமெல்லாம் மேக்ரோ எக்கனாமிக்ஸ், அதாவது பெரிய அளவிலான பொருளாதாரம் அதாவது லட்சங்கள் கோடிகள் பத்தியேதான்  பேசிக்கிட்டு இருக்கோம்!

ஆனால் அந்த பெரிய அளவிலான பொருளாதாரங்கள ஈட்டுகிற அதாவது லட்சங்கள் கோடிகள்ள புரளக்கூடிய பெரிய பெரிய கம்பெனிகளும் சின்ன சின்ன ஏஜென்சியும் சிறிய அளவிலான பொருளாதாரம் அதாவது சில நூறுகளிலும் பல சில்லறைகள் மேலதான் தங்களோட முழு கவனத்த வச்சிருக்காங்க! காரணம் அவங்களுக்கு ரொம்ப தெளிவா தெரியும், நாம அது மேல கவனத்த வச்சிருக்க மாட்டோம்னு!

இதுதான் மைக்ரோ எக்கனாமிக்ஸ்! இன்னிக்கு உலகமே இந்த மைக்ரோ எக்கனாமிக்ஸ்ச நம்பித்தான் தான் இயகுதுன்னு சொன்ன உங்களால நம்ப முடிமா? இது எவ்ளோ பெரிய யுக்தி தெரியுமா?

அதாவது சின்ன மீன போட்டு பெரிய மீனைப் பிடிக்கிறதெல்லாம் பழைய டெக்னிக்யா! பெரிய மீன் மாறி இருக்க எதோ ஒன்ன காட்டி ஒட்டு மொத்த சின்ன மீன்களையும் புடிக்கிறது தான் புதிய டெக்னிக்!

ஆயிரத்துல லட்சத்துல சம்பதிக்கிறவங்க எல்லாரும் கோடிகள் பத்தியே பேசிகிட்டு இருக்கோம்! ஆனால் கோடிகள கொட்டி குவிக்கும் பெரிய நிறுவனங்களோ சிறிய சிறிய சில்லறைகள் மேலேயே குறியா இருக்காங்க!

இத எப்டி பண்றாங்க தெரியுமா? நாம எப்டி ஏமாந்து போய்ட்டு இருக்கோம்னு தெரியுமா?  அத அடுத்த பகுதியில தெரிஞ்சிக்கலாம்!

Leave a Comment Cancel Reply