உயிரை குடிக்கும் பதிமூன்று | Number 13 | What Happen?

Number 13! OH MY GOD

“Number 13” இந்த எண் உங்கள் வாழ்வில் முக்கியமான ஒருகட்டத்தில் கடந்து சென்று இருக்கும். அதை ஆசால்டாக விட்டிருப்போம், மறந்திருப்போம்.

உலகின் பல நாடுகளில் இந்த 13 என்ற எண் ஆபாயத்தின் குறியீடு. அட வெட்கம் கெட்டவங்களா இதுல என்னடா இருக்கு அப்டின்னு கேட்கறவங்களுக்கு,

வாடி ஒரு கதை சொல்றேன் வாடி அப்டின்னு மதுர முத்துபாண்டி பாணியில சொல்ல ஆரம்பிச்சா வாய் மேல விரல் வைக்கற அளவுக்கு அவ்ளோ அதிர்ச்சி, அமானுஷ்யம்.

பல அமெரிகன்ஸ்க்கு 13 நம்பர் பாத்தாலே அல்லு விட்ருமாம். நிறைய கட்டிடங்கள்ள 13 தளங்களே இருக்காது, வீட்டு என் 13 இருக்காது, அதுக்கு பதிலா 12A னு தான் இருக்குமாம்.

பல கம்பெனி லிப்ட்ல 13 நம்பர் இருக்காதாம், 13ம் தேதியில கல்யாணம் நடக்காது, வண்டி பதிவு நம்பர்கூட 13 இருக்காது. 13 ல எதாவது குழந்தை பிறந்துடிச்சினா பயத்தோடவே பார்ப்பாங்கலாம். Why?

“திர்ஷ்கைடேகொபோபியா” இதுக்கு என்னடா Meaning ன்னு யாரவது கேட்டா என்ன சொல்றது. இததான் சொல்லணும். “திர்ஷ்” ன்னா 10 ஆம், “கைடே”ன்னா + ஆம், “கொபோபியா” ன்னா 3 ஆம். 10 + 3 = 13. என்ன ஒரு புத்திசாலித்தனம்.

கிமு 1700 ல பாபிலோனிய அரசர் நான்காம் பிலிப் எழுதுன சட்டத்துல 13வது சட்டம்னு ஒண்ணு இல்லவே இல்லையாம். கிமு லையே இந்த நம்பர் பயம் ஸ்டார்ட் ஆயிடிச்சி மக்களே. இயேசுவோட கடைசி விருந்துல கலந்துகிட்டவங்க 13 பேர். அதுல யூதாஸ் பதிமூனாவது ஆளா உட்கார்த்து இருந்தானாம். அவன்தான் ஒருநாள் இயேசுவ காட்டிகொடுத்தான். வைகிங் இன மக்களோட புராணத்துல ஒரு கதை இருக்கு. வைகிங் கடவுள்கள் 12 பேர் ஒரு விருந்துல கலந்துகிட்டாங்கலாமா அதுல பதிமூணுவதா கெட்ட  கடவுளான லோகி கலந்துகிட்டாராம். அந்த விருந்துல காதலின் கடவுளான பால்டர லோகி போட்டு தள்ளிட்டார். அதனால ஒரு விருந்துல பதிமூணு பேர் கலந்துகிட்டா அதுல ஒரு ஆள் சீக்ரமாவே மர்கயா ஆயிடுவார்னு சொல்றாங்க.

இந்த பதிமூணுக்கும் வெள்ளிகிழமைக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு. மேல சொன்ன எல்லா நிகழ்வும் வெள்ளிகிழமைதான் நடந்ததாம்.அடடே. 1301 ல பிரான்ஸ் மன்னர் நான்காம் பிலிப் பதிமூணு ம் தேதி வெள்ளிகிழமைதான் சிலுவைப்படை வீரர்கள் மேல பொய் குற்றம் சொல்லி, கைதுபண்ணி, கொடுமைபடுத்தி எரித்துகொன்னுடாராம். அதுல இருந்து கிருஸ்துவர்கள் “பதிமூணும் தேதி வெள்ளி” ன்னா பயப்பட ஆரம்பிச்சாங்களாம்.

 

ஆதாம் ஏவாள ஆப்பிள் தின்ன சொல்லி சாத்தான் தூண்டியதுகூட ஒரு வெள்ளிகிழமைதானம். (அடடே அப்புறம்).

இப்படிபதிமூணுல வந்த பல விஷயம் வெளங்காம போக “பதிமூணு” பேயோட வீட்டு நம்பர் அப்டின்னு நாட்டே விட்டே ஒதுக்கி வச்சிடாங்க அந்த வெள்ளைகார வெட்டியான்கள்.

மேலும் இதுபோன்ற தகலுக்கு – Mystory

Leave a Comment Cancel Reply