உலகின் மர்மமான வீடியோ கேம் | An Mystery Video game

சில வருடங்களுக்கு முன்பு, அதாவது 80,90 காலகட்டங்களில் அதிகமாக விரும்பப்பட்ட வீடியோ கேம்களில் ARCADE game’s அதிகம் விற்பனையானது. PAC-man போன்ற கேம்கள் இதில் அடங்கும்.

தற்போது அதிக கேம்கள் அதேபோல் வந்துவிட்டாலும்.80,90 காலகட்டங்களில் ARCADE விளையாடதவர்களே இருக்க முடியாது எனலாம்.அதற்கென்று தனி கடைகளே வைக்கப்பட்டு இருந்தது.

அப்படி ஒருநாள் (அதாவது 1981-ல் நடந்தாக கூறப்படும் ஒரு விஷயம்.) அமெரிக்காவின் போர்ட்லாந்து பகுதியில் உள்ள சில கேம் சென்ட்டர்களில்  “Polybius” என்ற கேம் திடிரென பரவ   தொடங்கியது. இவை எங்கிருந்து வந்தது என யாராலும் கண்டறிய முடியவில்லை. ஆனால் எதிர்பாராத வண்ணம் இந்த விளையாட்டு மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இதை விளையாடிய சிலருக்கு நினைவிழப்பு, இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துகொள்வது, கெட்ட கனவுகள் போன்றவை தோன்ற ஆரம்பித்தது.

இதனால் அந்த காலகட்டத்தில் அதை தடுக்க பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.ஒருநாள் திடிரென அவை எப்படி பதிவிறக்க பட்டதோ அப்படியே காணாமல் போனது. இதற்க்கு பின் 90 காலகட்டத்தில் இவை POPUP’களாக வரத்தொடங்கின. இதை ஆராய்ந்த சிலர் இவை இவை உண்மைதான் எனவும். CIA ரகசியமாக மேற்கொண்ட Project MK Ultra-வின் ஒரு செயல்தான் இது என குறிப்பிட்டனர்.!

 

அதாவது மனிதர்களின் மூளையை எப்படியெல்லாம்கட்டுக்குள் கொண்டுவர முடியும் என  மேற்கொள்ள பட்ட திட்டம் என சொன்னார்கள்.! 1953-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் 1973-ல் முடிக்கப்பட்டதாம்.

 

ஆனால் இவை செயல்பட்டு வந்ததாகவும் அதன் ஒரு செயல்தான் இந்த “Polybius” கேம் எனவும் கூறினார்கள். சிலர் இது URBAN LEGEND என உறுதியாக சொன்னார்கள். ஆனால் இன்றுவரை இந்த கேம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது எப்படி தயாரிக்கப்பட்டது என்பதற்கான விடை மர்மமாகவே இருந்து வருகிறது.!

இதே போல் இன்னும் சில கேம்களும் இருக்கின்றன. இவை யாரால் தொடங்கபடுகிறது என்பது மில்லியன்டாலர் கேள்விகளே.! – நன்றி

மேலும் நிலவு ஒரு Spaceship 

Leave a Comment Cancel Reply