world mystery blue diamond

நீல வைர மர்மம் | Mystery of Blue Diamond

World Mystery Blue Diamond

“வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும், பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும், சொல் ஒக்கும்: பொருள் ஒவ்வாதால் சொல்லால் ஆம் உவமை உண்டோ? நெல் ஒக்கும் புல் என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ”

எதனோடு ஒப்பிட்டாலும் வர்ணித்தாலும் நெல்லை புல்லென வருணித்தது போலாகிவிடும். சீதையின் அழகு அப்படிப்பட்டது என் கம்பர் தன் ராமாயணத்தில் எழுதியுள்ளார். அப்படிப்பட்ட சீதையின் ஒரு சிலையில் இருந்துதான் அந்த மர்ம வைரம் ஒரு நாள் திருடப்பட்டது.

தென்னிந்திய நதியான கொள்ளிடத்தின் கரையில் சீதையின் கோவில் ஒன்று அமைந்து இருந்தது. அந்த சிலையில் கண்களுக்கு பதிலாக இரண்டு நீல நிற வைரங்கள் பதிக்கப்பட்டு இருந்தன. அதில் கண்ணின் வைரம் இரவோடு இரவாக திருடப்பட்டது.

 

மறுநாள் வந்துபார்த்த கோவில் பூசாரி ஒற்றைக்கண் சிலையை பார்த்து பயந்துபோனார்.

சீதாதேவியின் கண்ணை பிடுங்கி எடுத்து சென்றவனை தீமைகள் சூழட்டும், அவனை மட்டுமல்ல அந்த வைரத்தை யார் வைத்திருந்தாலும் அவர்கள் எல்லோருமே துர்மரணத்தை சந்திப்பார்கள் என அருந்ததி அனுஷ்கா போல் சாபம் கொடுத்தார். இது அந்த வைரம் பற்றி காலம் காலமாக உலவும் பிளாஷ்பேக். அந்த கோவில், அந்த சிலை எங்கிருகின்றது என இன்னைக்கும் தெரியலப்பா ஆனா சாபம் மட்டும் உண்மைங்கறது மாதிரி வைரத்த வச்சி இருந்த எல்லாருமே ஒண்ணு பின்னாடி பொண்ணு நரக லோகம் போய்டாங்க.

பிரான்ஸ்ல வாழ்ந்த மிக பெரிய வைர வியாபாரி தாவ்ர்நீர் அந்த வைரத்த முதன் முதல்ல விலை கொடுத்து வாங்கனாறு. 118 காரட் (24 கிராம் ) எடை இருந்த வைரத்த அவர் பாரிசுக்கு கொண்டு போனார். ஆனா போய் சேர்றதுக்குள்ள நாய்கடி எல்லாம் வாங்கி படாத பாடுபட்டு போய் சேர்ந்தார். சரி வைரத்த வித்தரலாம்னு கொஞ்சம் மெருகேத்தி பிரான்ஸ் மன்னரான பதினான்காம் லூயிஸ்கிட்ட 1669 ல வித்துடாறு. அப்புறம் அது ராஜ வைரங்களோட சேர்த்து வைக்கட்டபட்டுச்சி.பிரெஞ்சு நீல வைரம் அப்டின்னு அதுக்கு பெயர் வச்சாங்க.

வைரம் வந்ததும் லூயிஸ் பரம்பரையே நாய் படாத பாடு பட்டு நொந்துடிச்சி.அரசியல் குழப்பங்கள், படுகொலைகள், எதிரிநாட்டு படைஎடுப்புன்னு அவங்க ஆட்சியே காணாம போய்டிச்சி.

இது எல்லாத்துக்குமே காரணம் அந்த வைரம்தான்னு அத “டி லா மரைன்” ன்னு ஒரு இடத்துல பதுக்கி வச்சிடாங்க.அதையும் அப்புறம் யாரோ ஆட்டைய போட்டாங்க.

அப்றமா 1823 ல லண்டன்ல சிரிச்சது அந்த வைரம். நகை வியாபாரி டேனியல் எலைசன் அத சொந்தமாக்கிடாறு. அப்புறம் பலபேரு அந்த வைரத்தால போய் சேந்துட்டாங்க. எலிசபெத், நான்காம் ஜார்க், ஹேன்றி பிலிப் இவங்க எல்லாருமே வைரத்தால சொர்கலோகம் அடைந்தனர்.

அதுக்கு அப்புறமும் 16 பேர் கிட்ட இருந்தஇது இப்போ வாஷிங்க்டன் ஸ்மித்சோனியன் அருங்காட்ச்சியதுல இருக்கு. மோனலிசா ஓவியத்துக்கு அப்புறம் அதிகம் பார்க்கப்பட்ட பொருள் அந்த வைரம்தான். ஆனா விலை மட்டும் 200 ல இருந்து 250 மில்லியன் டாலர்.

இது போன்ற தகவலுக்கு – Mystery

Leave a Comment Cancel Reply