கோபல்ல கிராமம் | ஒரு புத்தக வாழ்வியல்.

எழுத்தாளர் திரு. கி. ராஜநாராயணன் புத்தகம் என்றால் ஏதேனும் தனித்துவம் நிச்சயம் அமைந்திருக்கும்.! ஏற்கனவே அவர் எழுதிய சிறுகதைகள், மாயமான், பிஞ்சுகள் நாவல் படிக்க படிக்க நாமும் அங்கே இருப்பதுபோல் ஒரு பிரம்மை ஏற்படும்.

இதுவும் அப்படிப்பட்ட ஒரு நாவல்தான். 1976-ல் இதன் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. மிகுந்த வரவேற்ப்பை பெற்ற இந்நாவல் பல பதிப்புகள் இதுவரை வந்துவிட்டன. ஆனால் இன்று படித்தாலும் அழகான ஒரு நாவல்தான்.! முழுக்க முழுக்க கோபல்ல கிராமத்தை சுற்றியே நகரும் கதை. தெலுங்கு நாட்டில் இருந்து குடிபெயர்ந்து தமிழகத்தில் நிலையாக வாழவந்த கம்மவர்களின் நாட்டு மரபை தத்ரூபமாக சொன்ன புத்தகம்.  மங்கயதாறு அம்மாள் கிழவி என்று அந்த ஊரில் பெரிய குடும்பத்தில் இருக்கும்

 

ஒரு பாட்டியின் கதை பிரவேசமே இதன் முதல் கதை. 7 பிள்ளைகள், ராஜாக்கள், அதிசயங்களின் நிகழ்ச்சிகள், தெய்வ தோன்றல் என அந்த கிழவி சொல்லும் கதைகள் நம்மை புல்லரிக்க வைக்க தவறவில்லை. புத்தக பிரியர்கள் ஒவ்வொருவரிடமும் நிச்சயம் இருக்கவேண்டிய புத்தகம். இதில் இருந்து சிலவற்றை உருவி முதல் மரியாதை படத்திலும், அரவான் படத்திலும் வைக்கப்பட்டது உப தகவல்.

சில பக்கங்கள் நம்மை யோசிக்கவும் வைக்கும். இது உண்மையா? பொய்யா? என நம்மை குழம்பவும் வைக்கும். திரும்ப திரும்ப படிக்க வைக்கும் நாவல்தான் இந்த கோபல்ல கிராமம். இதன் இரண்டாம் பாகமாக கோபல்லப்புரத்து மக்கள் வெளியானது அதை பற்றி விரைவில். இந்த புத்தகத்தில் விலை 153/- மட்டுமே.

Buy it Now!

Leave a Comment