Tuesday, December 3, 2024
HomeAdultகில்மா டிப்ஸ்முதலிரவில் என்ன செய்ய வேண்டும்? | First Night Secrets in Tamil

முதலிரவில் என்ன செய்ய வேண்டும்? | First Night Secrets in Tamil

எல்லாத்தையும் தியரியாவே படிச்ச மாணவர்களை திடீர்னு LAB’ல விட்டுட்டு, அதான் கிளாஸ்ல சொல்லி குடுத்தேனே கவனிக்கலயா? அப்படினு கேக்கறது எந்த விதத்தில நியாயம்?

அதே மாறிதான். முதலிரவு முடித்து வெளியே வரும் புதுமண தம்பதிகளிடம் “எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதாப்பானு?” கேட்கறதும்..  பெண் மற்றும் ஆண் உடல் பாகங்கள் பற்றி நம்மோட கல்வி முறைல பெருசா ஏதும் சொல்லிதரல. படத்திலும் மானை புலி வேட்டையாடற போட்டோவ மட்டும் காட்டிட்டு கல்லாவில் காசு கட்டினால் போதும்னு கடமை முடிந்ததென்று கைவிரித்து விட்டார்கள்.

வீட்ல இருக்கவங்க இதபத்தியே பேச மாட்டங்க. தப்பி தவறி அந்த மாறி சீன் எதாச்சும் டீவில வந்தாகோட டக்குனு ரிமோட்ட எடுத்தது மாத்திடுவாங்க! சரி இங்கதான் இப்டினா நம்ம ஸ்கூல்லயும் இந்த செக்ஸ பத்தியும் உடல் பாகங்கள் மற்றும் அதன் தேவைகள் பத்தியும் கத்துகொடுக்க வெட்கப்ட்டதன் விளைவு தான் இன்னிக்கு நம்ம பசங்க அத பத்தி கத்துக்க சன்னிலியோன் &  ஜானிசின்ஸ் கிளாஸ்க்கு போக வேண்டியதாகிடுச்சு!

ஒரு விசயத்தை நாம் ஒத்துகொள்ளத்தான் வேணும். இனப்பெருக்கம் என்பதும் ஒரு பாடம் தான். அதை ஏன் வெளிப்படையாக யாரும் அடுத்த தலைமுறைக்கு கற்று தருவதில்லை என்பதும் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களுள் ஒன்னுதான். இத சொல்லிதர மறுத்துட்டு, உலகில் அதிகம் ஆபாச வீடியோக்கள் பார்க்கும் நாடுகளில் என் நாடும் என் நாட்டு மக்களும் முதலிடம் பிடித்தார்கள்னு வேதனைப்படறது எந்த விதத்துல நியாயம்?

சரி புலம்பினதெல்லம் போதும் மேட்டர்க்கு வானு சொல்றிங்கன்னு புரிது.. ம்ம்ம்ம் போலாம்!

முதலிரவில் என்ன செய்ய வேண்டும்?

இது முழுக்க முழுக்க ஒரு Practical Question. நாம எல்லாரும் முதல்ல ஒன்னு புரிஞ்சிகனும்!

இதுல First Attempt’laye  பாஸ் பண்றவன் உண்மையிலேயே முதல் முறை முயன்றவனாக இருக்க முடியாது.

இந்த கேள்விக்கு எதை எல்லாம் செய்யனும்டரத விட என்ன செய்ய கூடாதுன்னு சொல்லிடாலே போதும். கேள்விக்கான பதில் கிடைச்சிடும்.

பெண்களுக்கான சில சந்தேகங்கள்

  • என் மார்பு அவ்வளவு அழகாக இருக்காதே இது என் கணவருக்கு பிடிக்குமா?
  • என்னுடைய மார்பகம் பெரிதாக இல்லை என்று நினைத்து விடுவாரோ?
  • என் உடல் பாகங்களில் சில தழும்புகள் எல்லாம் இருக்குமே, அவருக்கு அதெல்லாம் பிடிக்காமல் போய்விடுமோ?
  • முதல் இரவிலே அவர் பல எதிர்பார்ப்புகளை முன் வைத்தால் என்ன செய்து?
  • எனக்கு இப்படி இருக்குதே, என்னை இப்படியே ஏற்றுக் கொள்வாரா?
  • உரோமங்களை அகற்றி விடலமா இல்லை வேண்டாமா?
  • என்ன இப்படி இருக்கனு சொல்லிடுவாரா?
  • அவருக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டால்?

இதே போன்ற எண்ணற்ற பயங்களுடன் தான் ஒவ்வொரு பெண்ணும் முதல் இரவை நோக்கி பயணிக்கிறாள். ஒரு பெண்ணிற்கு இது போன்ற பயங்கள் என்றால் ஆண்களுக்கு சொல்லவே வேண்டாம்.

ஆண்களுக்கான சில சந்தேகங்கள்

  • இதை சரியா பண்ணாம போயிட்டா, என்னை எதுக்கும் லாயக்கி இல்லாதவன், இத கூட சரியா செய்ய தெரியல நீ எல்லாம்…., என்று நினைத்துவிடுவாளோ?
  • எடுத்த உடனே எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னு தெரில, நாம எதோ வேகத்துல தொட போயி நம்ல பத்தி கேவலமா நினச்சிடானா?
  • கிளீன் சேவ் செய்து விடலாமா இல்லை ட்ரிம் செய்து விடலாமா?
  • என்ன இவ்ளோ சின்னதா இருக்குனு நினச்சிட்டானா?
  • சீக்கிரமா வந்துடுச்சினா அசிங்கமா பார்ப்பாலோ?
  • சொதப்பிட்டோம்னா?
  • எல்லாம் சரியா வருமா?
  • இன்னைக்குனு பார்த்து எதுவும் சரியா நடக்கவில்லை என்றால்?

இன்னும் நிறையவே இருக்கு….

இதுக்காக வேண்டாத தெய்வம் இருக்காது. பரிட்சைக்கு கூட அவன் அப்படி பயந்துருக்க மாட்டாங்க. முதல் இரவு இருவருக்குமே பயம் கலந்த இரவு தான். இதை எப்டி வெற்றிகரமா கடந்து வரதுன்னு பாக்கலாம்

first night secrets

எதிர்பார்ப்பை தூக்கி ஓரம் கட்டுங்கள்:

  • நாம் படத்துல பார்த்த கதா நாயகிகள், கதா நாயன்கள் போன்று உங்கள் துணை இருக்க மாட்டார்கள்.
  • தொப்பையுடனும், தொடைகள் கருத்தும் உடலின் பல பகுதிகளில் ரோமங்கள் கொண்டும் தான் இருப்பார்கள். இது தான் இயற்கை. தொலைக்காட்சியும், Porn Website’ம் உங்கள் கண்களுக்கு விருந்து படைத்து உங்களை இயற்கையிலிருந்து இழுத்துச் சென்றுவிட்டது வெகு தூரம். உங்கள் துணையின் உடல் உறுப்புகள் பற்றிய எதிர்ப்பார்ப்பை குறைத்துக் கொண்டு முதல் இரவிற்கு செல்லுங்கள். உண்மையில் அந்த இரவு உங்களை மகிழ்விக்கும்.

ஏற்றுக் கொள்ளுங்கள் :

  • உங்கள் துணை எப்படி இருந்தாலும் அவரை ஏற்றுக் கொண்டு அரவணைத்துக் கொள்ளுங்கள். நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை நேசிக்கிறேன், உன்னை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் சொல்லி நம்பிக்கைக் கொடுங்கள். அது சிறந்த ஒன்றை உங்கள் துணை உங்களுக்கு பரிசளிக்க உதவும். உங்கள் துணைக்கு நீங்கள் அளிக்கும் நம்பிக்கை தான் அந்த இரவை ஒரு வெற்றியுள்ள இரவாக்கும்.
  • தெரிந்து வைத்திருக்கும் அத்தனை வித்தையையும் ஒரே இரவில் செய்து முடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • முதல் இரவு என்பது ஒரு ரேஸ் இல்லை.அடுத்தடுத்து வரும் இரவுகளில் படிப்படியாக முன்னேறுங்கள்.
  • முதல் இரவிலே எல்லாம் என்பது சரியில்லை.

மனம் திறத்து பேசுங்கள்

  • எடுத்த உடனே காஞ்ச மாடு கம்புல பூந்த மாறி ரேஸ்ல போக ஆரமிச்சிடாதிங்க. உங்கள் துணை சொளகரியமாக இருக்கும் ஒரு உணர்வை பரிசளித்திடுங்கள்.
  • அதற்கு அதிகம் பேசுங்கள். Communication தான் முதலிரவின் மூலத்தனமே. அதுக்குன்னு இந்திய பொருளாதாரம், ஓசோன் படலத்துல ஓட்ட விழுந்ததுன்னு இல்லாம அவங்களோட ஆசா பாசங்கள பத்தி கேளுங்க..
  • எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசுங்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன? ஆசை கனவுகள் என்ன? அந்த இடம் மற்றும் சூழல் அவர்களுக்கு நல்ல மன நிலையை கொடுத்திருக்கிறதா? அவர்கள் பேச ஏதேனும் நினைத்திருக்கிறார்களா? என்பதை கேளுங்கள்.
  • அவங்க பதட்டமா இருக்க மாறி உணர்திங்கான மெல்ல அவங்கள சகஜமான நிலைக்கு கொண்டு வாங்க.

நம்பிக்கை கொடுங்கள்

  • ரொம்ப சினிமேட்டியாகான  டைலக்லாம் பேசி சொதப்பிடாம எதார்த்தமா “நம்ம ரெண்டு பேருக்குமே இதுல அனுபவம் கிடையாது. சும்மா ட்ரை பண்ணி பாக்கலாம், ஒருவேளை சொதப்பிடோம்னா, நாளைக்கு ஒரு கை பாத்துடலம்!னு அவங்ககிட்ட சகஜமா காமெடியா பேசுங்க.
  • அப்போதான் உங்க துணைக்கு படபடப்பு குறையும். உங்களோட எந்த பயமும் இல்லாம சகஜமா உறவுல ஈடுபட முடியும்




முதல் இரவின் வெற்றி என்பது முதலில் நடக்கும் இரவில் இல்லை.

உண்மையில் முதல் இரவின் வெற்றி உங்கள் முதல் குழந்தையை கையில் ஏந்துவீர்கள் பாருங்க அது தான்.

பொதுவாக உடலுறவை மூன்று வகையாக பிரிக்கலாம்

  1. உடலுறவுக்கு முன்
  2. உடலுறவில் போது
  3. உடலுறவுக்கு பின்

இந்த மூன்று நிலையையும் நீங்கள் அறிந்திருந்தாலே போதும் உங்கள் தம்பத்திய வாழ்க்கையில் இனியெல்லாம் சு(க)பமே!

அதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள்..

பகுதி 2

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments