பன்முக நாயகன்
Crazy Mohan பிரபல நடிகர், மேடை நாயகன், புத்தக எழுத்தாளர் என பன்முக திறமைகொண்டு வலம்வந்த திரு கிரேசி மோகன் 10.06.2019 இன்று இந்த உலகத்தை விட்டு மறைந்துள்ளார்.
ஒரு ஆழ்ந்த இரங்கலுடன் கொஞ்சம் அவரை பற்றி காண்போம்.
16 அக்டோபர் 1956 ல் பிறந்த இவரது முதல் பெயர் மோகன் ரங்காச்சாரி. 79 காலகட்டத்தில் நாடக துறையில் நுழைந்து பல ரசிகர்களை கட்டி போட தொடங்கினார். பொய்கால் குதிரை படம் மூலம் சினிமா துறையில் நுழைந்த இவர் இந்த துறையிலும் சாதிக்க வேண்டும் என நினைத்தவர்க்கு கமல்ஹாசன் கை கொடுக்க தொடங்கினார். அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி பெயர் வாங்க தொடங்கினார்.
தொடர்ந்து மைக்கல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், சின்ன மாப்ளே, வியட்நாம் காலனி, சின்ன வாத்தியார்,
MR.ரோமியோ, சதிலீலாவதி, அவ்வை ஷண்முகி, ஆஹா, அருணாசலம், போன்ற எண்ணற்ற படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி “கிரேசி மோகன்” என்ற பெயரை தக்க வைத்து கொண்டார்.
கமலும் இவரும் இணைந்து விட்டால் நல்ல காமெடி படம் பார்க்கலாம் என ரசிகர்களை நம்ப வைத்தார்கள்.
மைக்கல் மதன காமராஜன், சதிலீலாவதி, அவ்வை ஷண்முகி, காதலா காதலா, வசூல் ராஜா MBBS போன்ற படங்கள் இவர் பெயரை என்றும் சொல்லிக்கொண்டு இருக்கும். திரையுலக ரசிகர்களை தவிர நாடக ரசிகர்களுக்கும் இவரின் இழப்பு வேதனையை கொடுத்துள்ளது.
இவரின் அமெரிக்காவில் கிச்சா, மதில் மேல் மாது, ஒரு பாபின் டைரி குறிப்பு, KPT சிரிப்புராஜ சோழன் போன்ற புத்தகங்கள் சக்கை போடு போட்டன.
திரைப்படங்களில் இவரின் வசனங்கள் அடுத்தவரை எரிச்சல் படுத்தாமல் சிரிக்கமட்டும் வைக்க தெரிந்தவர். பல விருதுகளை வாங்கி குவித்தார். கடைசியாக நான் ஈ படத்திற்கு வசனம் எழுதினார்.
ஆனால் கடைசிவரை நாடக துறைக்காகவே பணியாற்றி வந்தார். இனி வரும் நாட்களில் இவர் இல்லை என்றாலும். இவரின் படைப்புகள் நம் வாழ்வில் கலந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. We Miss You Crazy Mohan Sir
மேலும் செய்திகளுக்கு : News