Tuesday, December 3, 2024
Homeசினிமாஹாலிவுட் டைம்ஸ்Brightburn Movie Review | ப்ரைட்பர்ன் விமர்சனம்

Brightburn Movie Review | ப்ரைட்பர்ன் விமர்சனம்

                                       Brightburn Movie Review

2019-ல் இயக்குனர் டேவிட் யரோவெஸ்கி இயக்கத்தில் ஒரு Super Hero Horror படமாக வெளியாகி இருக்கும் திரைப்படம் Brightburn.

டேவிட் யரோவெஸ்கி Marvel Cinematic universe ல் வந்த Gordian of Galaxy படத்தை எடுத்தவர் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

ஆனால் எல்லா எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்ததா?

brightburn-movie

Super Natural Power-ஆல் பாதிக்கப்படும் ஒரு குழந்தை வளர வளர தீய குணங்கள் கொண்டதாக சிறுவனாக மாறுகிறது.. தனக்கு பிடிக்காதவர்களை கொடூரமாக சாகடிக்கும்  அந்த சிறுவனை தடுக்க முயலும் பெற்றோர்கள். கொலையை துப்பறியும் போலீஸ். என கதை நகர்ந்தாலும் சலிப்பையே தட்டுகிறது.

Brightburn

நம்ம ஊரு “யார்?” படத்த அப்டியே copy அடிச்சி….Hollywood Movie புது கதைன்னு அடிச்சிவிட்டு இருக்காங்க. இது Super Hero கதையா? Horror கதையா? மூட நம்பிக்கை கொண்ட படமா என மண்டையை குழப்பி எடுக்கிறது. Marvel, Disney இரண்டு நிறுவனமும் இப்படத்தை எடுப்பதாக இருந்து பின் கைவிடப்பட்டது.

 

திடீர் திடிர்னு பறக்குதாம், சாயிதாம், என்பதுபோல் நம்மை பயமுறுத்த முயன்று இருக்கிறார்கள் ஆனால் நமக்கு சிரிப்பையே வரவைக்கிறது. நாங்கெல்லாம் ஜமீன் கோட்டையவே அசராம பாத்தவங்க என்ற குரல்தான் காதில் ஒலிக்கிறது. சவுண்ட் Effect நன்றாக இருந்தாலும் பார்த்த படங்களையே பார்ப்பதுபோல் ஒரு பிரம்மை. வெற்றி பெறுவது சந்தேகம்தான் என்றாலும் சில கொடூரமான காட்சிகள் உச் கொட்ட வைக்கிறது.

Rating 3/5

மேலும் படிக்க : Hollywood Times

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments