அதிராபிள்ளி அருவியோடு..! | Best Moment with Athirappilly Falls

செம வெயில்..! சுட்டெரிக்கும் சூரியன்..! இதுல இருந்து தப்பிக்க எல்லாரும் ஊட்டி, கொடைக்கானல், கோவான்னு போறப்போ அதவிட சிறப்பா என்ன இருக்குனு சில பேர் யோசிப்பாங்க. அந்த சில நபர்களுக்கு இந்த இடம் இயற்கை கொடுத்த வரபிரசாதம்.

Athirapilly Falls

 

பசங்களுக்கு Leave விட்டாச்சி குடும்பத்தோட எங்கயாவது போய்ட்டுவரலாம் அப்டின்னு நினைக்கறவங்களுக்கும் இதோ இருக்கு கேரளாவுல இருக்குற அதிராபிள்ளி அருவி. அப்படி என்ன ஸ்பெசல் இங்கன்னு கேட்டா. அந்த இடமே ஒரு  ஸ்பெசல்தாங்க. சுற்றிலும் வானுயர மரங்கள், மூங்கில் காடுகள். நடந்துசெல்ல சிறுசிறு பாதைகள். எப்பொழுதும் பேசும் கிளிகளின் ஓசைகள். நிற்காமல் ஓடும் பிரம்மாண்ட அருவி.

சில்லென அடிக்கும் சாரல், புகைப்படம் பிடிக்க பல பல அழகான இடங்கள். சிறந்த உணவு என எண்ணிலடங்காத அழகான அனுபவம் உங்களுக்காக காத்திருகிறது.! கேரளாவில் இருந்தே அங்குசெல்ல பேருந்துகள் நின்றவண்ணம் இருக்கிறது.! குழந்தைகள் விளையாட சிறு சிறு தோட்டம் என நிறைய உண்டு அங்கே.!

 

எங்கிருந்து தண்ணிர் வருகிறது என அருவிகளிடம் கேள்வி கேட்டால் அவை சிரித்துக்கொண்டே ரசித்துவிட்டு போ என்கிறது.! ட்ரக்கிங் செல்வோருக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும்.! முடிந்தால் ஒருமுறையாவது இங்கே Visit செய்யுங்கள். உங்கள் கவலைகள் உங்களிடம் இருந்து நொடி நேரத்தில் மறைந்துவிடும். Jolly’a போய் Enjoy பண்ணிட்டுவாங்க அவ்ளோதான்.

Leave a Comment